kabeer-haseem

முடிந்தால் ஆட்சியைக் கவிழுங்கள் – ஐ.தே.க சவால்!

தேசிய அர­சாங்­கத்தை நாம் ஒரு போதும் விட்­டுக்கொ­டுக்க மாட்டோம். தேசிய பிரச்­சி­னையை தீர்க்கும் வரைக்கும் தேசிய அர­சாங்­கத்தை பாது­காப்போம். மேல­தி­கமாக இரு போயா தினங்­களை பெற்றுத் தரு­கின்றோம். முடி­யு­மானால் ஆட்­சியை கவி­ழத்து காட்­டுங்கள் என ஐக்­கிய தேசியக் கட்சி சவால் விடுத்­தது. மேலும் தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான ஒப்­பந்­தத்தை நீடிப்­பதா ? இல்­லையா? என்­பது இம்­மாதம் சுதந்­திரக் கட்சி எடுக்க போகும் தீர்­மா­னத்தை பொறுத்து உள்­ளது. அதன் பின்னர் நாம் முடி­வெ­டுப்போம் என்றும் அக்­கட்சி குறிப்­பிட்­டது.

சுதந்­திரக் கட்­சியின் ஒரு சிலர் வில­கினால் ஆட்சி அமைப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் தொடர்பு கொள்ள எமக்கு தேவை ஏற்­ப­டாது. ஏனெனில் எமக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு பலர் முன்­வ­ரு­தற்கு தயா­ராக உள்­ளனர் என்றும் அக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தேசிய அர­சாங்கம் நிறுவும் போது ஐக்­கிய தேசியக் கட்­சி­யிடம் பெறும்­பான்மை இருந்­தது. ஆட்சி அமைப்­ப­தற்கு எமக்கு ஒரு சிலரின் உத­வியே தேவைப்­பட்­டது. எனினும் எமக்கு ஒரு சிலரை இணைத்து கொண்டு ஆட்சி அமைக்க சந்­தர்ப்பம் இருந்­தது. அதற்­கான வாய்ப்­பினை விட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் நாட்டின் பிரச்­சி­னையை தீர்க்க தேசிய அர­சாங்­கத்தை நிறு­வு­வ­தாக மக்­க­ளுக்கு அறி­வித்­தனர். இதன்­படி மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்­கா­கவே நாம் தேசிய அர­சாங்­கத்தை நிறு­வினோம். தேசிய அர­சாங்­கத்தில் தேசிய நோக்கம் உள்­ளது. தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகித்து கொண்டு எம்மால் அர­சியல் இலா­பத்தை அடைய முடி­யாது. அதனை நாம் எதிர்­பார்க்­கவும் மாட்டோம்.

எனினும் நாட்டின் பிரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்கு நிறு­வப்­பட்ட தேசிய அர­சாங்­கத்­திற்கு ஏதா­வது பாதிப்­புகள் ஏற்­ப­டு­மானால் அப்­போது என்ன செய்ய வேண்டும் என்­பது எமக்கு தெரியும். மேலும் சுதந்­திரக் கட்­சி­யினர் ஒரு சிலர் வில­கினால் தனித்து ஆட்சி அமைப்­ப­தற்கு எமக்கு பலம் உண்டு.

பெய­ர­ள­வி­லான குழு­வினர் வில­கி­னாலும் தேசிய அர­சாங்கம் தொடர்ந்து செல்லும். எவர் வில­கி­னாலும் பிரச்­சி­னை­யில்லை. எமக்கு தனித்து ஆட்சி அமைப்­பத்தால் பல இலா­பங்­களை அடைய முடியும் என்­ப­தனை அறிந்தும் நாட்டின் நலனை கருத்­திற்­கொண்டே தேசிய அர­சாங்­கத்தை நிறு­வினோம். தேசிய அர­சாங்­கத்­திற்கு தேசிய கொள்கை ஒன்று உள்­ளது. நாட்டின் தேசிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு இதுவே சிறந்த சந்­தர்ப்­ப­மாகும். பிரிந்து செல்ல போவ­தாக கூறும் பின்­ன­ணியில் ஒரு சிலரின் பெயர்கள் வெளிப்­பட்­டாலும் தேசிய அர­சாங்­கத்தின் கொள்கை என்ற விதத்தில் இரு பிர­தான கட்­சி­களின் இணைப்பை பிரிக்க முடி­யாது.

பங்­கு­தா­ரர்கள் என்ற வகையில் தேசிய அர­சாங்­கத்தை பாது­காப்­ப­தற்கு ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் முடி­யா­விட்டால் மாற்­று­வழி எடுப்போம். நாம் நாட்டை பற்றி மட்­டுமே சிந்­திக்­கின்றோம். எமக்கு பல மாற்று வழிகள் உள்­ளன. இருந்த போதிலும் அதனை பற்றி நாம் ஒரு­போதும் சிந்­திப்­ப­தில்லை. எமக்கு அதி­கார மோகம் இல்லை. பொறு­மை­யாக இருந்து சாதிப்போம்.

சுதந்­திரக் கட்­சியின் ஒரு சிலர் வில­கினால் ஆட்சி அமைப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் தொடர்பு கொள்ள எமக்கு தேவை ஏற்­ப­டாது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினை தொடர்பு கொள்­ளாது எமக்கு பெரும்­பான்­மையை பெற்­றுக்­கொள்ள முடியும். எமக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு பலர் முன்­வ­ரு­தற்கு தயா­ராக உள்­ளனர். பெரும்­பான்மை என்­பது எமக்கு பிரச்­சி­னை­யில்லை. தேசிய அர­சாங்­கத்தின் கொள்­கை­யையும் கட்­ட­மைப்­பையும் பாது­காப்­பதே எமது பிர­தான நோக்­க­மாகும். தனி நபர்­களின் பிரச்­சி­னைகள் எமக்கு பிரச்­சினை இல்லை.

தேசிய அர­சாங்­க­மா­னாலும் பிரச்­சினை வரும் போது இதனை ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி என்றே கூறு­கின்­றனர். அர­சாங்­கத்­திற்கு பெயர் வைக்­கலாம். எனினும் கொள்­கையின் அடிப்­ப­டையில் இணைந்­துள்ளோம். தேசிய அர­சாங்­கத்­திற்கு ஐக்­கிய தேசியக் கட்சி தலைமை பொறுப்பை வகிக்­கலாம் . இருந்த போதிலும் தேசிய அர­சாங்­கத்தை நாம் ஒரு போதும் விட்­டு­கொ­டுக்க மாட்டோம். தேசிய பிரச்­சி­னையை தீர்க்கும் வரைக்கும் தேசிய அர­சாங்­கத்தை விழாமல் கைவி­டாது பாது­காப்போம்.

1977 ஆம் ஆண்­டுக்கு முன்னர் எந்த அர­சாங்­கத்­திற்கும் பெரும்­பான்மை இருக்­க­வில்லை. அக்­கா­லத்தில் ஐந்து வரு­டங்கள் ஆட்­சியை கொண்டு செல்­ல­வில்­லையா?.அத்­துடன் தேசிய அர­சாங்­கத்­துடன் சம்­பந்­தப்­பட்­டுள்ள இரு பிர­தான கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான ஒப்­பந்­தத்தை நீடிப்­பதா? இல்லையா? என்பதனை இம் மாதம்(ஆகஸ்ட்) சுதந்திர கட்சி எடுக்க போகும் தீர்மானத்தின் பின்னர் பார்க்கலாம். அதன் பின்னர் எமது முடிவை எடுப்போம்.

வெசாக் போயா தினத்தில் ஆட்சியை கவிழ்ப்பதாக கூறினர். எனினும் தற்போது வெசாக் போயா தினத்தை மாற்றியமைத்ததாக எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். அப்படியாயின் மேலதிமாக இரு போயா தினங்களை பெற்றுத் தருகின்றோம். முடியுமானால் ஆட்சியை கவிழ்த்து காட்டுங்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*