M2-copy copy

தேர்தலைக் கண்டு ஓடும் கூட்டு அரசு! (சமகாலப் பார்வை)

ஐ.தே.க. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி கூட்டு அர­சாங்­கத்தின் எதிர்­காலம் பற்­றிய கேள்­விகள் நாளுக்குள் நாள் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இந்தக் கூட்டு அர­சாங்கம் நிலைத்­தி­ருக்க வேண்டும். அப்­போது தான், இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் உள்­ளிட்ட மிக முக்­கி­ ய­மான விவ­கா­ரங்­க­ளுக்கு தீர்வு காண முடி யும் என்ற நம்­பிக்கை பர­வ­லாக காணப்­ப­டு­கி­றது. எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்­தனும் கூட இந்தக் கருத்­தையே அண்­மையில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

ஆனால், இந்தக் கூட்டு அர­சாங்கம் இனி ­மேலும் நீடிக்கக் கூடாது, நீடித்தால் நாட்­டுக்கு ஆபத்து என்ற கருத்தை கூட்டு எதி­ர­ணி­யினர் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

அது­மட்­டு­மன்றி, இந்த ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­கான முயற்­சி­க­ளையும் கூட்டு எதி­ர­ணி­யினர் இர­க­சி­ய­மாக மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் கூட தக­வல்கள் வரு­கின்­றன. எப்­ப­டி­யா­வது அர­சாங்­கத்தில் இருந்து ஒரு பகுதி அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வெளி­யேறச் செய்­வதன் மூல­மாக, ரணில்-­மைத்­திரி கூட்டு அர­சாங்­கத்தை பல­வீ­ன­மான ஒன்­றாகக் காட்­டலாம் என்று வெகு­வாக நம்­பு­கி­றது கூட்டு எதி­ரணி.

இன்னும் இரண்டு வாரங்­களில் இந்த அர­சாங்கம் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை இழந்து விடும் என்ற எச்­ச­ரிக்­கை­யா­கட்டும், இன்னும் இரண்டு பௌர்­ண­மி­களில் அதிர்ச்சி காத்­தி­ருக்­கி­றது என்ற எச்­ச­ரிக்­கை­யா­கட்டும், அர­சாங்­கத்தை அச்­சு­றுத்­து­கின்ற விட­யங்­க­ளாகத் தெரி­ய­வில்லை.

இத்­த­கைய கருத்­துக்­களின் ஊடாக, இந்த அர­சாங்கம் பல­வீ­ன­மா­னது, பல­மி­ழந்து வரு­கி­றது என்ற கருத்தை மக்­க­ளி­டத்தில் ஏற்­ப­டுத்­து­வ­தற்கே கூட்டு எதி­ரணி முயற்­சிக்­கி­றது. தற்­போ­தைய கூட்டு அர­சாங்­கத்­துக்கு மக்கள் மத்­தியில் செல்­வாக்கு இல்லை என்றும் அது நீண்­ட­காலம் தாக்­குப்­பி­டிக்கக் கூடிய ஒன்று அல்ல என்றும் சாதா­ரண மக்­களின் மனதில் பதிய வைப்­பதில், கூட்டு எதி­ரணி முக்­கிய கவனம் செலுத்தி வரு­கி­றது. ஏனென்றால், இதனை ஒரு பல­வீ­ன­மான அர­சாங்­க­மாக, செயற்­திறன் அற்ற அரசாங்­க­மாக காட்­டு­வதன் ஊடாகத் தான், பல­மான ஓர் அர­சாங்கம் அமைய வேண் டும், அதனை உரு­வாக்க வேண்டும் என்ற எண்ணம் மக்­க­ளிடம் ஏற்­படும்.

பொது­வா­கவே கூட்டு அர­சாங்கம் ஒன்று மிகப் பலம்­வாய்ந்­த­தாக இருக்க முடி­யாது. பல கட்­சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டு அர­சாங்­கங்­களில், ஒவ்­வொரு கட்­சி­யி­னதும் கொள்­கைக்கும், கருத்­துக்கும் மதிப்­ப­ளித்தே நடந்து கொள்ள வேண்டும். எனவே உறு­தி­யான முடிவை, உட­ன­டி­ யான முடிவை எப்­போதும் எடுக்க முடி­யாது. இது உறு­தி­யான பலம்­வாய்ந்த ஓர் அரசாங்­க­மாக, நிலைத்­தி­ருப்­ப­தற்கு, தடை­யா­கவே இருக்கும்.

ஆனால் ஆட்­சியில் உள்ள கூட்டு அர­சாங்­க­மா­னது அதற்கும் அப்­பாற்­பட்­டது, நாட்டின் இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கி­யது. இரண்டு கட்­சி­க­ளுமே பொரு­ளா­தாரக் கொள்கை உள்­ளிட்ட பல விட­யங்­களில் எதிரும் புதி­ரு­மான நிலைப்­பா­டு­களைக் கொண்­டவை. இத்­த­கைய நிலையில், எந்த விவ­கா­ரத்­திலும் உறு­தி­யான முடி வை எடுக்க முடி­யாது. ஒரு முடிவை எடுக்கும் போது இரண்டு கட்­சி­க­ளி­னதும் கொள்கை சார்ந்த இணக்­கப்­பா­டுகள் அவ­சியம் தேவைப்­படும்.

இந்த நெருக்­க­டியால் தான், தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் எதிர்­பார்த்த வேகத்­துடன் முன்­நோக்கி நகர முடி­யாமல் இருக்­கி­றது. முத­லீட்டுத் திட்­டங்­களில் ஆகட்டும், தேர்­தல்­களை நடத்­து­வதில் ஆகட்டும், அர­சி­ய­ல­மைப்பு வரைவு விவ­கா­ரத்தில் ஆகட்டும் இந்த அடிப்­படைப் பிரச்­சினை தான் தாம­தங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது. இந்த நிலையில் தான், அர­சாங்­கத்தைப் பல­வீ­னப்­ப­டுத்த அல்­லது பல­வீ­ன­மான அர­சாங்­க­மாக காட்­டு­வ­தற்கு, கூட்டு எதி ­ரணி முயற்­சிக்­கி­றது.

கூட்டு அர­சாங்­கத்தில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பிளவை ஏற்­ப­டுத்தி, அங்­கி­ருந்து சிலரை வெளியே கொண்டு வரு­வதன் மூலம் இதனைச் சாதிக்க முற்­ப­டு­கி­றது கூட்டு எதி­ரணி.

இதற்­காக இர­க­சி­ய­மான பேச்­சுக்கள் நடப்­ப­தாக- பேரம் பேசல்கள் நிகழ்­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. இதற்குப் பின்­ன­ணியில், வெளி­நாட்டுப் புல­னாய்வு அமைப்பு ஒன்றின் ஆத­ரவு கூட கூட்டு எதி­ர­ணிக்கு இருப்­ப­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. துறை­முக நகரத் திட்டம், அம்­பாந்­தோட்டை துறை­முகம், திரு­கோ­ண­மலை எண்ணெய்க் களஞ்­சி­யங்கள் உள்­ளிட்ட பல்­வேறு முத­லீட்டுத் திட்­டங்கள் தொடர்­பாக முடி­வு­களை எடுப்­பதில் தற்­போ­தைய அர­சாங்கம் கூடுதல் இழு­ப­றி­களைச் சந்­திக்க நேரிட்­டுள்­ளது.

இது வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக் கும், முத­லீடு செய்ய முன்­வந்த நாடு­க­ளுக் கும் பலத்த அதி­ருப்­தி­களை ஏற்­ப­டுத்­தி­ய­தையும் மறுக்க முடி­யாது. அதே­போல தான், உள்­நாட்டு விவ­கா­ரங்கள் பல­வற்றில் அர­சாங்கம் தீர்க்­க­மான முடி­வு­களை எடுக்க முடி­யா­மலும், நட­வ­டிக்­கை­களை எடுக்க முடி­யா­மலும் திண­று­கி­ற­தையும் காண­மு­டி­கி­றது.

இதன் கார­ண­மாகத் தான், தொழிற்­சங்­கங்­களும், அமைப்­பு­களும் கூட அர­சாங்­கத்தை வீம்­புக்குச் சீண்டிப் பார்ப்­பதும், போராட்­டங்­களை நடத்தி மிரட்­டு­வதும் அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வா­றான போராட்­டங்கள், அர­சாங்­கத்தின் பல­வீ­னத்தை மேலும் வெளிப்­ப­டுத்தி வரு­கி­றது. இந்தக் கூட்டு அர­சாங்­கத்­துக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மைப் பலம் இருந்­தாலும், அதனை எல்லாச் சந்­தர்ப்­பங்­க­ளிலும் நிரூ­பிக்கக் கூடி­ய­ள­வுக்கு பலம் இல்லை அவ்­வா­றான ஒரு பலம் இருந்­தி­ருந்தால், இந்த மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பயன்­ப­டுத்தி, பல விட­யங்­களைச் சாதித்­தி­ருக்க முடியும்.

குறிப்­பாக, உள்­ளூ­ராட்சித் தேர்தல் திருத்­தச்­சட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வந்து நிறை­வேற்­று­வதில் அர­சாங்கம் கடு­மை­யான இழு­ப­றி­களைச் சந்­தித்துக் கொண்­டி­ருக்­கி­றது. அர­சாங்கம் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை எதிர்­கொள்ளத் தயா­ராக இல்­லா­ததால் தான், அதனை எதிர்­கொள்­வ­தற்கு அச்சம் கொண்­டி­ருப்­பதால் தான், தேர்­தலை நடத்­து­வ­தற்கு அஞ்­சு­கி­றது என்று கூட்டு எதி­ரணி தொடர்ச்­சி­யாக குற்­றம்­சாட்டி வரு­கி­றது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலை வைத்தே, தன்னை நிலைப்­ப­டுத்திக் கொள்ளும் திட்­டத்தில் இருக்­கி­றது கூட்டு எதி­ரணி. உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்­தினால், தனது பல­வீனம் வெளிப்­பட்டு விடுமோ என்ற அச்சம் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இருக்­கி­றது.

அதனால் தான், உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்­து­வ­தற்கு உறு­தி­யான நட­வ­டிக்­கைகளை அவர்­களால் எடுக்க முடி­ய­வில்லை. சட்ட ரீதி­யான கார­ணங்­களைக் காட்டி வந்­தாலும், நீண்­ட­கா­லத்­துக்கு உள்­ளூ­ராட்சி நிர்­வா­கங்­களை அர­சாங்கம் தனது கையில் வைத்­தி­ருப்­பதும் கூட ஜன­நா­யகம் ஆகாது.

ஏற்­க­னவே உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்­தாமல் இழுத்­த­டிப்­ப­தாக கூட்டு அர­சாங்­கத்தின் மீது குற்­றச்­சாட்­டுகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்ள நிலையில் தான் கடந்­த­வாரம் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் மற்­றொரு முடிவு எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. நாட்டின் எல்லா மாகா­ண­ச­பை­க­ளுக்கும் ஒரு நாளில் தேர்­தலை நடத்தும் வகையில் மாகா­ண­சபைத் தேர்தல் சட்­டத்தில் திருத்தம் செய்யும் யோச­னையே அது. இந்த யோச­னைக்கு அமைச்­ச­ர­வையும் அங்­கீ­கா­ரத்தை அளித்­தி­ருக்­கி­றது.

ஒரே நாளில் எல்லா மாகா­ண­ச­பை­க­ளுக்கும் தேர்­தலை நடத்­து­வதால், செல­வி­னங்­களைக் குறைப்­பது, மோச­டி­களைத் தடுப்­பது உள்­ளிட்ட பல்­வேறு சாத­க­மான விட­யங்கள் இருந்­தாலும், இதிலும் பல எதிர்­ம­றை­யான விட­யங்­களும் இருக்­கவே செய்யும். உதா­ர­ணத்­துக்கு, ஒரு மாகா­ண­ச­பையை முன்­கூட்­டியே கலைக்கும் நிலை ஏற்­பட்டால், தெரிவு செய்­யப்­பட்ட ஒரு மாகாண அர­சாங்கம் பெரும்­பான்­மையை இழந்து தொடர்ந்து செயற்­பட முடி­யாது போனால், புதிய தேர்தல் ஒன்றை எதிர்­கொள்­வது வழக்கம்.

எல்லா மாகா­ண­ச­பை­க­ளுக்கும் ஒரே நாளில் தான் தேர்­தல்­களை நடத்­து­வது என்ற சட்டம் கொண்டு வரப்­பட்டால், ஏனைய மாகா­ண­ச­பை­களின் பத­விக்­காலம் முடியும் வரை, மத்­திய அரசின் ஆட்­சியில் தான் குறித்த மாகா­ண­சபை இருக்க நேரிடும். இது ஒரு முக்­கி­ய­மான பிரச்­சினை.

இது­போன்ற பல நடை­முறைப் பிரச்­சி­னை­களைத் தாண்­டியே அல்­லது அவற்­றுக்­கான தீர்­வு­களை முன்­வைத்தே திருத்தச் சட்­டத்தை கொண்டு வர வேண்டும். மாகா­ண­சபைத் தேர்தல் சட்­டத்தை திருத்த முனையும் போதே இது போன்ற பல பிரச்­சி­னைகள் முளைக்கும். அதனைத் தான் தற்­போ­தைக்கு அர­சாங்கம் எதிர்­பார்க்­கி­றது போலுள்­ளது,

ஏனென்றால், வரும் ஒக்­டோபர் மாதத்­துடன் கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்­திய மாகா­ண­ச­பை­க­ளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். இதனைத் தடுக்கும் உட­னடி முயற்­சி­யா­கவே, அர­சாங்­கம் இந்த திருத்தச் சட்­டத்தைக் கொண்டு வர முனை­கி­றதோ என்ற சந்­தேகம் உள்­ளது, ஏற்­க­னவே உள்­ளூ­ராட்சித் தேர்தலைப் பிற்போட்டு வரும் அரசாங்கத்தை, கடுமையாக விமர்சித்து வரும் கூட்டு எதிரணி, மாகாணசபைத் தேர்தல்களையும் பிற்போடவே இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக குற்றம்சாட்டியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனென்றால் இந்த கூட்டு அரசாங்கம் தேர்தல்களை எதிர்கொள்ளத் தயங்குகிறது. பயப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலை பிற்போட்டால், நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூட்டு எதிரணி எச்சரித்திருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் சர்வதேச அளவில் எதேச்சாதிகார அரசாங்கம் என்ற பெயரைச் சம்பாதித்திருந்தது, ஆனால், எல்லாத் தேர்தல்களயும் அது உரிய காலத்தில் நடத்தியது. அதன் மூலம் தமது அரசாங்கம் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதாக உலகத்தை நம்ப வைக்க முயன்றது.

இப்போதைய அரசாங்கம், சட்டத் திருத்தங்களின் மூலம், தேர்தல்களை பிற்போட்டு, ஜனநாயக முறைப்படியே தேர்தல்களை பிற்போடுவதாக நம்ப வைக்க முனைகிறது. அவ்வளவு தான் வித்தியாசம்.

– சத்திரியன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*