mahinda

மைத்திரியுடன் பேசத்தயார் – மஹிந்த அறிவிப்பு!

நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட எவருடனும் பேசத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.

நேரடியாக டுவிட்டர் கணக்கின் ஊடாக, நேற்று (26) கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இதன்போது, நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, ஜனாதிபதி சிறிசேனவுடன் பேசத் தயாரா எனக் கேட்டபோது, தான் யாருடனும் பேசத் தயார் என்று கூறினார்.

இலங்கை உள்நாட்டு விடயங்களில் ​வெளிநாடுகளின் தலையீடு உள்ளதா எனக் கேட்டபோது, வெளித் தரப்பினரின் நிகழ்ச்சி நிரல்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்போது வெளிநாட்டுத் தலையீட்டுக்கு அவசியமில்லை என அவர் கூறினார்.

அவரது அரசாங்கத்தில் யாவரும் ஊழல் செய்யாதவர்களாக இருந்தனரா என்று கேட்டபோது, அரசியல் நோக்கமின்றி யாரும் விசாரணை செய்யலாம் என்றார்.

“இந்த அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளிலும் இதேயளவு விசனத்தைக் கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்” என்றும் அவர் பதிலளித்தார்.

கேள்வி: தற்போது யாழ்ப்பாண துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் உணர்த்தும் விடயம்?

பதில்: குறித்த சம்பவம், விசாரணை செய்யப்பட வேண்டும். இது, பலவீனமடைந்துவரும் சட்டமும் ஒழுங்கு நிலையைக் காட்டுகிறது.

கேள்வி: நாட்டின் நீதி நிலைமை பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில்: நீதித்துறையின் சுயாதீனத்தில், இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆனால், நீதித்துறையில் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெறுகின்றன என்றும் தனது பதிலில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*