election

மாகாணசபைத் தேர்தல்களை அடுத்த வருடத்தில் நடத்த தீர்மானம்!

மாகா­ண­சபை தேர்­தல்­களை இந்த வரு­டத்தில் நடத்­தாது அடுத்த வரு­டத்தில் நடத்­து­வ­தற்கு அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்­றை­ய­தினம் நடை­பெற்­றது.

இதில் கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்­திய மாகா­ண­ச­பை­க­ளுக்­கான பத­விக்­காலம் இவ்­வ­ருடம் செப்­டெம்பர் மாதத்­துடன் முடி­வ­டை­வ­தனால் அவற்­றுக்­கான தேர்­தல்­களை எப்­போதும் நடத்­து­வது என்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. இந்த மூன்று மாகா­ண­ச­பை­க­ளுக்­கு­மான தேர்­தல்­களை அடுத்­த­வ­ருடம் நடத்­து­வது என்று இங்கு முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் இறு­தியில் புதிய தேர்தல் முறையின் கீழ் இடம்­பெற இருப்­ப­தனால் இந்தத் தேர்­தலை நடத்­தி­விட்டு புதிய தேர்தல் முறையில் மாகா­ண­சபைத் தேர்­தல்­க­ளையும் நடத்­து­வது குறித்து பரி­சீ­லிப்­பது என்றும் அது­தொ­டர்­பான முடி­வினை எடுத்த பின்னர் அடுத்த வருடத்தில் இந்த மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலையும் நடத்துவது எனவும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*