SL-police

கொல்லனாவையில் பதற்றம்!

கொல்லனாவையில் விமானங்களுக்கு தேவையான எரிபொருள் கொண்டு செல்லும் ரயிலை இடைமறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் அங்கு அசாதாரண நிலையுடன்கூடிய படற்றமான சூழல் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானங்களுக்குப் பயன்படுத்தும் விசேட எரிபொருளை ஏற்றியவாறு பயணித்துக்கொண்டிருந்த ரயிளி பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் வழிமறித்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்புத்துறைக்கும் ஊழியர்களுக்குமிடையில்அசாதாரண நிலை தொடர்கின்றது.

இதேவேளை எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது கொல்லன்னாவை எரிபொருள் களஞ்சியசாலை இராணுவத்தின் பிடியில் உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்கும் வகையில் முதற்கட்டமாக 10 எரிபொருள் பவுசர்கள் முழுமையான இராணுவ பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*