road-accident

அம்பாறை – சம்மாந்துறை வீதியில் விபத்து! 19 பேர் காயம்!

அம்பாறை – சம்மாந்துறை பிரதான வீதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக சம்மாந்துறை, அம்பாறை மற்றும் கல்முனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்களில் குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் அவரது உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*