sam

மைத்திரிக்கு மடல் வரைந்த சம்பந்தன்!

வடக்கு மற்றும் கிழக்கு மாணாங்களில் காணமல் போனவர்கள் சம்பந்தமான பிரச்சினை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறித்த பிரச்சினை தீவிரமடைந்துள்ளதாகவும் அதி சம்பந்தமாக விரைவான தீர்வொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக அந்தக் கடிதத்தின் உடாக எதிர்க்கட்சித் தலைவர் தௌிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கஞம் பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது என்றும், அதனை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக காணாமல் போனவர்கள் குறித்து விரைவாக தீர்ப்பதற்காக திட்டம் ஒன்றை வகுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*