Mahinda-Gota

மஹிந்தவுக்கு விடுதலைப்புலிகள் நினைவுக்கு வருகிறார்களாம்!

யாழ்ப்­பாண நீதி­பதி இளஞ்­செ­ழியன் மீதான துப்­பாக்கி பிர­யோக முயற்­சியை அர­சாங்கம் சிறிய விட­ய­மாக கருதக் கூடாது. நாட்டின் சட்டம் ஒழுங்­கு­களை உறு­தி­ப்ப­டுத்தி பரந்­த­ளவில் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

கொழும்பில் இவ்­வா­றான துப்­பாக்­கிய பிர­யோ­கங்கள் இடம்­பெற்றால் பாதாள உலக குழுக்­களை காரணம் காட்ட முடியும். ஆனால் வடக்கின் நிலைமை அவ்­வா­றா­னது அல்ல. விடு­தலை புலிகள் இயக்­கத்தின் ஆரம்­ப­காலம் இவ்­வா­றான சம்­ப­வங்­கயே வெளிப்­ப­டுத்­தி­யது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

வீரக்­கெட்­டிய – கொந்­த­கல விகா­ரையில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

யாழப்­பா­ணத்தில் தமிழ் நீதி­பதி ஒருவர் மீது துப்­பாக்கி பிர­யோக முயற்சி இடம்­பெற்­றுள்­ளது. இதனால் பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். கடந்த 15 வரு­டங்­க­ளாக தமிழ் நீதி­பதி ஒரு­வ­ரையே இந்த சிங்­கள பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் பாது­காத்­துள்ளார். சம்­பவம் தொடர்பில் குறித்த நீதி­ப­தி­யுடன் தொடர்பு கொண்டு வினா­வினேன். தன்னை நோக்கி துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்ட நிலையில் குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் குறுக்கே பாய்ந்து தடுத்­த­தாக அவர் குறிப்­பிட்டார்.

எனவே இந்த சம்­ப­வ­மா­னது மிகவும் மோச­மான நிலை­யாகும். அதே போன்று பொலிஸ் அதி­காரி தனது எஜ­மா­னுக்­காக உயிர் தியாகம் செய்­துள்ளார். ஆனால் தற்­போது பிரச்­சி­னையை திசைத்­தி­ருப்­பு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர். உயிர் தியாகம் செய்த பொலிஸ் அதி­கா­ரிக்கு சன்­மானம் வழங்க வேண்­டிய நேரத்தில் , குடி­போ­தையில் இருந்த ஒரு­வரை அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்த முயற்­சித்த நிலையில் இவ்­வாறு மோதல் ஏற்­பட்­ட­தாக பொலிசார் புதி­தாக கதை கூறு­கின்­றனர்.

பாதிக்­கப்­பட்ட நீதி­ப­தியும் அருகில் இருந்து காய­ம­டைந்த மற்­று­மொரு பொலி­சாரும் கூறும் கதை அல்ல நாட்டு மக்­க­ளுக்கு கூறப்­ப­டு­கின்­றது. உண்­மையில் என்ன நடந்­தது ? என்று தெரி­யாது. ஆனால் சம்­பவம் தொடர்பில் முழு­மை­யாக விசா­ரணை செய்து நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். பொலிஸ் அதி­காரி ஒரு­வரை கொலை செய்யும் அள­விற்கு நாட்டில் சட்ட ஒழுங்­குகள் சீர­ழிந்­துள்ள நிலையே தற்­போது வெளி­யா­கி­யுள்­ளது. ஆட்சி நிர்­வா­கமும் சீர­ழிந்­துள்­ளது.

கொழும்­பிலும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. சிறைச்­சாலை பாது­காப்பு அதி­கா­ரிகள் கொலை செய்­யப்­பட்­டனர். விசா­ர­ணையை முன்­னெ­டுக்க சென்ற பொலிஸ் அதி­காரி கொலை செய்­யப்­பட்டார். தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் நடக்­கின்­றது. எவ்­வா­றா­யினும் கொழும்பில் என்றால் பாதாள உல­கத்­தி­னரை காரணம் காட்­டி­வி­டலாம் . ஆனால் யாழ்ப்­பா­ணத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­ரு­கின்­றது என்றால் அதனை கூடிய கவ­னத்­துடன் அவ­தா­ணிக்­கப்­பட வேண்டும்.

நீதி­பதி மீதான துப்பாக்கி பிரயோக முயற்சியின் ஊடாக யாழ்ப்பாணத்தில் பாதாள உலகத்தை விட பாரிய நிலைமை ஒன்று உருவெடுத்து வருகின்றது. விடுதலை புலிகளின் ஆரம்ப காலப்பகுதியிலும் இவ்வாறான சம்பவங்களே இடம்பெற்றன. எனவே அரசாங்கம் இந்த விடயத்தை ஆளமாக சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*