Mahinda-Deshapriya-e1375338496657

தாமதாமாகும் தேர்தல் – ஆணையாளர் கவலை!

பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மூலம் நிறை­வேற்றி தந்தால் தேர்­தலை உடனே என்னால் நடத்த முடி யும். ஆனால் பாரா­ளு­மன்­றத்­திலும் தேர்­த­லுக்­கான நட­வ­டிக்­கைகள் தாமதம் செய்­யப்­ப­டு­வதே கவ­லைக்­கு­ரி­ய­தாகும். தேர்­தலை தாமதம் செய்­வது ஜன­நா­ய­கத்­திற்கு பாதிப்­பாக அமையும். எனினும் எம்மால் இவ்­வ­ரு­ட­த்தில் தேர்­தலை நடத்த முடியும் என நம்­பு­கிறேன் என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற பழ­மொ­ழி­யையும் குர்ஆன் வச­ன­மொன்­றையும் எடுத்­துக்­காட்டி தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தினார்.

அகில இலங்கை முஸ்லிம் வாலிப சங்க பேர­வையின் 67 ஆவது வரு­டாந்த மாநாடு நேற்று கொழும்­பி­லுள்ள இலங்கை மன்றம் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது.

இதன்­போது வை.எம்.எம்.ஏ. சங்­கத்­தினால் சிறந்த ஆளு­மைக்­கான விருது தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­விற்கு வழங்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கம் போன்று நான்கு இனங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சங்­கங்கள் உள்­ளன.குறிப்­பாக வை.எம்.எம்.ஏ, வை.எம்.எச்.ஏ, வை.எம்.பி.ஏ மற்றும் வை.எம்.சி.ஏ போன்ற சங்­கங்கள் உள்­ளன. இதன்­மூலம் நாட்டின் ஐக்­கியம் கட்­டி­யெ­ழுப்­ப­டு­கின்­றன. பொது­வாக மதங்­களின் விழு­மி­யங்­களை பாது­காப்­ப­தற்கு ஒவ்­வொரு மதங்­க­ளிலும் அமைப்­புகள் பல உள்­ளன. என்­றாலும் வை.எம்.எம்.ஏ, வை.எம்.எச்.ஏ, வை.எம்.பி.ஏ மற்றும் வை.எம்.சி.ஏ சங்­கங்கள் தேசிய ஒற்­று­மையை மாத்­திரம் அடிப்­ப­டை­யாக கொண்டு செயற்­ப­டு­கின்­றன. எனவே நாட்­டிற்கு அதுவே அவ­சி­ய­மாகும்.

எமது நாட்டில் மொழி ஆற்றல் மூலமே இனங்­க‍­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும். இதன்­படி இரு பிர­தான மொழி­களை கற்ற முஸ்­லிம்­க­ளுக்கு தேசிய ஐக்­கி­யத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு சிறப்­பான வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது. இரு மொழி கற்ற திற­மை­யா­ன­வர்கள் எமக்கு அவ­சியம். ஆகவே எதிர்­கா­லத்தில் சந்­த­தி­யிரை இரு மொழி­க­ளையும் கற்க பழக்க வேண்டும். அதன்­மூ­லமே நாட்டின் ஐக்­கி­யத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும்.

இந்த சந்­தர்ப்­பத்தில் மத விழு­மி­யங்கள் தொடர்பில் கூறும் அதே­வேளை ஜன­நா­யக விழு­மி­யங்கள் தொடர்பில் நான் பேச விரும்­பு­கின்றேன்.

சர்­வ­ஜன வாக்­கு­ரி­மையை பாது­காப்­ப­தற்­கான தேசத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின் அதனை பாது­காப்­ப­தற்­கான படை­யணி அவ­சியம். நான் கூறும் இந்த படை­யணி ஆயுதம் பிர­யோகம் செய்­ய­மாட்­டார்கள்.

வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு சென்று பென்­சிலை மாத்­தி­ரமே பிர­யோகம் செய்வர்.எனினும் தற்­போது நாட்டில் பென்சில் என்ற ஆயு­தத்தை பிர­யோகம் செய்­வ­தற்­கான வாய்ப்பு தொடர்ந்தும் இல்­லாமல் ஆக்­கப்­பட்டு வரு­கின்­றது.எனினும் அதனை நாம் வென்­றெ­டுக்க வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும். மக்­களின் பிர­தான ஜன­நா­யக விழு­மி­ய­மான தேர்­தலை தாம­தப்­ப­டுத்­து­வது ஜன­நா­ய­கத்­திற்கு பெரும் பாதிப்­பாக அமையும்.

பல்­வேறு திட்­டங்கள் ஊடாக தேர்­தலை தாம­தப்­ப­டுத்த முனை­வார்­க­ளாயின் தாம­தப்­ப­டுத்­து­வ­தற்கு நானும் அமைச்­ச­ருமே காரணம் என்று கூறு­வது பிழை­யா­னது. பாரா­ளு­மன்­றத்­தினால் சட்­டத்தை நிறை­வேற்­றினால் உடனே தேர்­தலை எமக்கு நடத்த முடியும். எனினும் அதனை தொடர்ந்து தாம­தப்­ப­டுத்­து­வதே கவ­லைக்­கு­ரி­யது. எனினும் இவ்­வ­ருடம் தேர்­தலை நடத்த முடியும் என எதிர்­பார்க்­கின்றோம்.

தேர்தல் தாம­த­டை­வது குறித்து எனக்கும் அமைச்சர் பைசர் முஸ்­த­பாவின் மீதும் குற்றம் சுமத்­து­வது தவ­றாகும்.

தேர்தல் ஆணைக்­குழு தொடர்­பான வினைத்­திறன் தொடர்பில் கோரு­கின்­றனர். தேர்தல் ஆணைக்­குழு வழி­ந­டத்தும் மூன்று விட­யங்கள் உள்­ளன. கணக்­காய்வில் இருந்தும் நீதி­மன்­றத்தின் கேள்­வி­களில் இருந்தும் பாது­காப்பு பெற்­ற­தாக இருக்க வேண்டும். எவ்­வா­றா­யினும் நாம் மன­சாட்­சியின் பிர­காரம் நடக்க வேண்டும். எமது ஆணைக்­குழு கணக்­காய்வு மற்றும் சட்­டத்­திற்கு இணங்கி போகின்­றது.

அகில இலங்கை முஸ்லிம் வாலிப சங்க பேர­வையின் பிர­தான நோக்கம் நம்­பிக்கை , ஒற்­றுமை, ஒழுக்கம் என்ற இலக்கை அடைந்து கொள்­வ­தாக உள்­ளது. நம்­பிக்கை அவ­சி­ய­மாகும். இதன்­படி மதங்­களில் அடிப்­ப­டையில் நம்­பிக்கை அவ­சியம். இந்த நாட்டின் தற்­போ­தைய நிலை­மையை பார்க்கும் போது நம்­பிக்­கையை பார்க்­கிலும் ஒற்­று­மையே அத்­தி­யா­வ­சி­ய­மாக உள்­ளது.சிங்­க­ளத்தில் ஒற்றுமையே பலம் என்று கூறுவோம். அதேபோன்று அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று தமிழில் கூறுவோம். ஆகவே தேசிய ஒற்றுமையை நாம் ‍ஏற்படுத்த வேண்டும்.

நான் எனது அலுவலகர்களின் மூலம் குர்ஆன் வசனமொன்றை படித்தேன். ஒற்றுமையை என்ற கயிற்றை இறுக்கமாக பற்றி பிடியுங்கள் பிரிந்து விடாதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே ஒற்றுமை என்ற கயிற்றை பிடித்து நாட்டை கட்டியெழுப்புவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*