amaraweera

வேறு ஒரு கட்சியிலும் இணைய போவதில்லை – மகிந்த அமரவீர!

அரசில் இருந்து விலகினாலும் வேறு ஒரு கட்சியிலும் இணைய போவதில்லை. வேறு ஒரு ஒரு கட்சியின் வெற்றிக்காகவும் பாடுபட போவதில்லை இவ்வாறு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

வத்தளை திக்கோவிட மீன்பிடி துறைமுகத்தில் இன்று நடைபெற்ற டெங்கு ஒழிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது-

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 11 பேர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைய போகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றேன். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமைய அரசில் இணைய முடிவு செய்யப்பட்டது.

அரசில் இருந்து விலகுவதாயின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எடுக்கும் தீர்மானத்துக்கு அமையவே அதுவும் மேற்கொள்ளப்படும். எவரேனும் ஒருவர் கட்சியில் இருந்து விலகுவார் என்றால் அவரது நோக்கம் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப்பெறச் செய்வதாகும். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*