mano

வடக்கு அமைச்சர்கள் விவகாரம் – மனோ கணேசன் கருத்து!

வட­மா­கா­ண­சபை விவ­காரம் தொடர்பில் முத­ல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனின் நகர்வு சரி­யா­னது என்று தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் கூறி­யுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது;

இலங்­கையில் மிகவும் பிர­பல மாகா­ண­ச­பைகள், வட மாகா­ண­ச­பையும், கிழக்கு மாகா­ண­ச­பையும் ஆகும். இதற்கு காரணம் இல்­லாமல் இல்லை. இந்­நாட்டில் அதி­கா­ரப்­ப­கிர்வு கோரி போரா­டி­யது, தமி­ழர்­க­ளாகும். அஹிம்சா போராட்டம், ஆயுத போராட்டம் இரண்­டையும் முன்­னெ­டுத்து பெரும் துன்­பங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­த­வர்கள், தமி­ழர்கள் ஆகும். ஆகவே அதி­கா­ரப்­ப­கிர்வின் ஒரு கட்­ட­மாக மாகா­ண­ச­பை­களை வழங்­கப்­பட்ட போது, உரு­வா­கிய நிலை­மையை அர­சி­யல்­ரீ­தி­யாக சமா­ளிக்­கவே ஏனைய ஏழு மாகா­ணங்­க­ளுக்­கு­மாக இந்த முறை­மையை ஜனா­தி­பதி ஜேஆரும், பிர­தமர் ராஜீவும் தந்­தார்கள். ஆகவே இன்று தெற்கில் இருக்­கின்ற மாகா­ண­ச­பைகள் சும்மா கிடைத்­தவை ஆகும். ஆனால் வடக்கில், கிழக்கில் அவை சும்மா கிடைக்­க­வில்லை என்­பதை பொறுப்­பு­களில் உள்ளோர் உணர வேண்டும். இவற்றின் பின்னால், தமிழ் மக்­களின் பெரும் தியாக வர­லாறு இருக்­கின்­றது என்­பதை அனை­வரும் உணர வேண்டும். இதுதான் உண்மை. ஆகவே, ஏனைய மாகா­ண­ச­பை­களில், குழப்பம், ஊழல், அதி­கார துஷ்­பி­ர­யோகம் இல்­லையா? என்று கேள்வி கேட்டு வடக்கில், கிழக்கில் நடை­பெறும் நிகழ்­வு­க­ளுக்கு எவரும் சப்பை கட்டு கட்ட முடி­யாது.

எனவே இன்று இந்த விவ­காரம் தொடர்பில் முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் ஒரு விசா­ரணை குழுவை நிய­மித்து அறிக்­கையை பெற்று நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது, நல்ல முற்­போக்­கான நட­வ­டிக்­கை­யாகும். தனி ஒரு நாட்டை கோரிய உங்­க­ளுக்கு, ஒரு மாகா­ண­ச­பை­யையே பரி­பா­லிக்க முடி­ய­வில்­லையா என தெற்கில் எழும் கூச்­ச­லுக்கு உரிய பதிலை தரும் பொறுப்பு முதல்­வ­ரிடம் இருக்­கின்­றது. கிடைக்­கப்­பெற்­றுள்ள அறிக்­கையின் பிர­காரம் காரி­யங்­களை முன்­னெ­டுக்க அவ­ருக்கு அவர் வணங்கும் தெய்வம் அருள் பாலிக்­கட்டும் என தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் கூறி­யுள்ளார்.

இது பற்றி நான் பேசு­வது, மத்­திய அரசு அமைச்சர் என்ற உரி­மையில் மாத்­திரம் அல்ல. எனக்கு இதில் விசேட தார்­மீக கார­ணங்­களும் உள்­ளன. ஒன்று, மகிந்த ஆட்­சியில், அவர் வடக்கு தேர்­தலை நடத்­தாமல், காலம் தள்­ளிக்­கொண்டே போன போது, அதை நடத்த வேண்டும் என்று இங்­கி­ருந்து அழுத்­த­மாக போரா­டி­ய­வர்­களில் நான் ஒரு முன்­ன­ணி­யாளன். அடுத்­தது, விக்­னேஸ்­வரன் அவர்­களை முதல்வர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட சம்­ம­திக்க வைத்­த­வர்­களில் நானும் ஒரு முன்­ன­ணி­யாளன். அடுத்­தது, முதல்வர் விக்­னேஸ்­வரன், தமி­ழ­ரசு தலைவர் மாவை, எம்பி சிறி­தரன் ஆகிய நண்­பர்­களின் அழைப்பை ஏற்று நான் என் கட்சி பணி­யா­ளர்­க­ளையும் அழைத்­துக்­கொண்டு, வடக்கு சென்று, ஒரு வாரத்­துக்கு மேல் முகா­மிட்டு, கிளி­நொச்சி, யாழ், வன்னி மாவட்­டங்­களில், கூட்­ட­மைப்பின் வெற்­றிக்­காக வட­மா­கா­ண­சபை தேர்தல் பிரச்­சா­ரத்தில் கடு­மை­யாக ஈடு­பட்டேன். இவை இன்று பல­ருக்கு மறந்து விட்­டாலும், அவை அசைக்க முடி­யாத உண்­மை­க­ளாகும்.

குறிப்­பாக, இன்று சர்ச்­சையில் இருக்­கின்ற கல்வி அமைச்சர் குரு­கு­ல­ராஜா மற்றும் அவ­ருடன் சேர்ந்து போட்­டி­யிட இன்னும் இரண்டு உறுப்­பி­னர்­களின் வெற்­றி­களை கிளி­நொச்­சியில் உறு­திப்­ப­டுத்­து­வதில் எங்கள் பிரச்­சாரம் பாரிய பங்கை வகித்­தது. அந்­நேரம் என்னை இன்­மு­கத்­துடன் கையெ­டுத்து வணங்கி கூட்­டங்­க­ளுக்கு அழைத்து போன அமைச்சர் குரு­கு­ல­ராஜா, தேர்­த­லுக்கு பிறகு இடை­நாட்­களில் கிளி­நொச்சி மற்றும் வடக்­குக்கு நான் சென்ற போது என்னை யார் என்றே தெரி­யா­தவர் போல் நடந்­துக்­கொண்டார். வட­மா­கா­ண­சபை பாட­சா­லைகள் விவ­கா­ரங்கள் தொடர்பில், நான் அவ­ருக்கு அனுப்பி வைத்த, எனை நாடி வசந்து உதவி கோரிய வடக்கில் வாழும் ஆசி­ரி­யர்கள் மாறும் பொது­மக்கள் பலரின் கோரிக்கை கடி­தங்­க­ளையும் புறக்­க­ணித்தார்.

எனினும் நான் தேர்தல் காலங்­களில் அங்கே போனது அவரை அறிந்து அல்ல. மாறாக என் நண்பர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­த­ரனின் அழைப்பை ஏற்றே நாம் சென்றோம். மேலும் நீண்­ட­கா­ல­மாக சொல்லோணா துன்பங்களில் உழன்ற வடக்கு வாழ் உடன்பிறப்புகளின் வாழ்வுதனில் உண்மையான வசந்தம் வீச வேண்டும் என்ற ஆதங்கத்தின் காரணமாகவே என்பதையும் கூறியாக வேண்டும். ஆகவே எனக்கு இதுபற்றி பேச எனக்கு. எனது அமைச்சு அதிகார உரிமையைவிட தார்மீக உரிமை அதிகமாக இருக்கின்றது என்பதை வடமாகாணசபை அறிந்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*