maharakama

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தொடர்ந்தும் தீக்கிரை!?

மஹரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான பாதணி வர்த்தக நிலையம் நேற்று திடீர் தீ பரவலுக்கு உள்ளாகியுள்ளது.

நாசகார நடவடிக்கை ஒன்று என நம்பப்படும் மேற்படி தீ பரவல் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், தீ பரவலால் ஏற்பட்ட சேத விபரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன.

நேற்று அதிகாலை அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அருகில் உள்ள சி.சி.ரி.வி. காட்சிகளைக் கொண்டு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மஹரகம 115/பி, ஹை லேவல் வீதியில் உள்ள ஜஸ்ட் போ யூ என்ற முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையமே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ள நிலையில் வர்த்தக நிலையத்தின் குளிரூட்டித் தொகுதியும் பாதணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கும் சேதம் ஏர்பட்டுள்ளதாக அறிய முட்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*