VRA-20170607-d01-VID.indd

நான்குவிடயங்கள் ஊடாக நல்லிணக்கம்; ஐ.நா செயலருக்கு சொன்னாராம் ரணில்!

இலங்­கையில் உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நட்­ட­ஈட்டைப் பெற்­றுக்­கொ­டுத்தல், மீண்டும் மோதல்கள் இடம்­பெ­றாமல் தடுத்தல் ஆகிய நான்கு விட­யங்­களின் ஊடாக தேசிய நல்­லி­ணக்­கத்தை முன்­கொண்டு செல்­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய நாடுகள் பொது­ச்செ­ய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்­ர­ஸிடம் உறுதியளித்திருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பாடு சட்டம், தேசிய நல்­லி­ணக்கம், ஆகி­ய­வற்­றுடன் சம்­பந்­தப்­படும் விட­யங்­களை முன்­னெ­டுக்­கவும் எதிர்­பார்ப்­ப­தா­கவும் ஐ.நா.செய­லா­ள­ரிடம் பிர­தமர் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.

 அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க்­கிற்கு சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் ஐ.நா. செய­லாளர் நாயகம் அன் ­டோ­னியோ கட்­ரஸை சந்­தித்து

பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே இந்த விட­யங்­களை தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதன்­போது தாம் ஐ.நா.வின் அக­திகள் தொடர்­பான உய­ரிஸ்­தா­னிகர் என்ற ரீதியில் இதற்கு முன்னர் பல தட­வைகள் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார். மேலும் இந்த சந்­திப்பில் இலங்­கையில் தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்கம் தொடர்­பான விட­யங்கள் குறித்து பிர­தமர் விளக்­க­ம­ளித்­துள்ளார்.

  இலங்­கையின் நல்­லி­ணக்க விட­யங்கள் தொடர்பில் இலங்­கை­யி­லுள்ள ஐ.நா. அலு­வ­லகம் எந்­த­வொரு நேரத்­திலும் செயற்­ப­டு­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தா­கவும் இலங்­கையின் வெற்­றியே ஐ.நா. வின் எதிர்­பார்ப்­பென்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் ஐ.நா. செய­லாளர் நாயகம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

இதே­வேளை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐ.நா.வின் மனி­த­வள தொடர்­பான பிரதி செய­லா­ளர்­நா­யகம் ஸ்டெபன் ஓபி­ரே­னையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இதன்­போது அவ­ச­ர­மாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்க உதவி செய்­த­மைக்­காக ஐ.நா.வின் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கு நன்றி தெரி­விப்­ப­தாக பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த சந்­திப்­புக்­களை ஐ.நா. வுக்­கான இலங்கையின் நிரந்தரவதிவிட பிரதிநிதி ரொஹான் பெரேரா கலந்து கொண்டார். மேலும் ஐ.நா.வின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான தலைமை அதிகாரி ஜெப் பெல்ட்மென்னையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*