rajitha

சமஷ்டி போன்ற எதுவுமே இல்லை; அரசாங்கம் திட்டவட்டம்!

சமஷ்டி கோரிக்­கையை அர­சாங்கம் ஏற்­கா­வி­டினும் ஜன­நா­ய­கத்தின் அடிப்­ப­டையில் தமது நிலைப்­பாட்டை தெரி­விக்க களம் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் இன­வா­தத்தை கையி­லெ­டுத்து யார் செயற்­பட்­டாலும் அவர்கள் கைது செய்­யப்­பட்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­ச­ரவை இணை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக மோச­மா­கவும் பகி­ரங்­க­மா­கவும் ஞான­சார தேரரை போன்று வட மாகாண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் பேசவில்லை.

தலை­ம­றை­வா­கி­யுள்ள தேரரை பொலிசார் தொடர்ந்தும் தேடி­வ­ரு­கின்­றனர். அமைச்சர் ஒரு­வரின் பாது­காப்பில் உள்­ளதால் தான் அவரை தேடு­வதில் இந்­த­ளவு கடி­னா­மாக உள்­ளதா ? என்ற சந்­தே­கமும் காணப்­ப­டு­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன் கிழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்கள் அறி­விக்கும் ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்­ச­ரவை இணை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தொடர்ந்தும் கூறு­கையில்,

ஞான­சார தேரரின் விவ­காரம் தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் விப­ரங்­களை கேட்­ட­றிந்து கொண்டேன். தொடர்ந்தும் மத ஸ்தலங்கள் உடைக்­கப்­ப­டு­கின்­றமை மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தீ வைத்து அழிக்­கப்­ப­டு­கின்­றமை குறித்து முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இது தொடர்பில் எம்­முடன் கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

மத ஸ்தலங்கள் மீதான தாக்குல் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யின மக்­களின் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு தீ வைக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வு விசா­ரணை பிரிவு நீதி மன்­றத்­திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்­பித்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டி­யி­லேயே நீதி மன்றம் உத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் ஞான­சார தேரரை கைது செய்ய பொலிசார் நான்கு குழுக்­களை அமைத்து நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றனர். அவர் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தா­கவே தக­வல்கள் கிடைத்­துள்­ளன.

ஒரு­வ­ருக்கு எதி­ராக உயிர் அச்­சு­றுத்­தலை விடுத்து விட்டு தனக்கு உயிர் அச்­சு­றுத்தல் உள்­ள­தாக கூற முடி­யுமா? அவ்­வா­றா­ன­தொரு நிலையா ? ஞான­சார தேரர் தரப்பில் காணப்­ப­டு­கின்­றது என்­பது தெரிய வில்லை. மேலும் ஞான­சார தேரர் சுட்­டிக்­காட்­டு­ப­வர்­களை கைது செய்­வ­தற்கோ நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கோ நியா­ய­மான கார­ணங்கள் அவ­சி­ய­மாகும்.

அதே­போன்று விக்­னேஸ்­வரன் போன்­ற­வர்கள் தமது நிலைப்­பா­டு­களை தெரி­விக்­கின்­றனர். அத­னுடன் எம்மால் உடன்­பட இய­லாது. ஆனால் ஜன­நா­யக ரீதியில் அவர்­களின் கோரிக்­கை­களை முன் வைக்க உரி­மை­யுள்­ளது. குறிப்­பாக சமஷ்டி போன்ற விட­யங்­க­களில் அர­சாங்கம் எவ்­வி­தத்­திலும் ஒத்­துப்­போ­காது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக ‘அம்­பயோ , தம்­பியோ” என்று மோச­மாக பகி­ரங்­க­மாக ஞான­சார தேரரை போன்று விக்­னேஸ்­வரன் பேச வில்லை. எனவே இன­வா­தத்தை தூண்டும் வகையில் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை நடைமுறைப்படுத்து அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும். இலங்கை ஒரு சிறிய நாடு . இதில் தலைமறைவாகியுள்ள ஞானசார தேரரை கைது செய்ய முடிய வில்லை எனும் போது வியப்பாகவே உள்ளது. அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் உள்ளதால் தான் இந்தளவு கடினாமாக உள்ளதா? என்றும் தெரிய வில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*