mattala

மத்தள விமான நிலையம் இந்தியாவிற்கு விற்பனையாகிறதா?

நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தின்பால் மக்களின் கவனம் திரும்பியுள்ள தற்போதைய சூழலில் அரசாங்கம் திருட்டுத்தனமாக நாட்டு வளங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

எனவே மத்தள விமான நிலையத்தின் 60 சதவீத பங்கை இந்தியாவுக்கும் விற்பனை செய்யவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரமளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அவ்வாறு அரசாங்கம் செய்யுமாயின் அது நாட்டுக்குச் செய்யும் பாரிய துரோகமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*