pillayan-

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஜுலை மாதம் 25ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், அந்த கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஷ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா என்றழைக்கப்படுகின்ற கனநாயகம், இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் மற்றும் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட வினோத் எனப்படும் வெலிக்கந்தையை சேர்ந்த மதுசங்க ஆகியோரே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் வினோத் எனப்படும் வெலிக்கந்தையை சேர்ந்த மதுசங்க கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*