arrest3

இலங்கை அகதிகள் நால்வர் இந்தியாவில் கைது!

ரேஷன் அரிசியை கடத்த முயன்ற இந்திய பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பவானிசாகர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் கலையரசி தலைமையில் பொலிஸார் இலங்கை அகதிகள் முகாமில் சோதனை நடத்தினர்.

அப்போது, கடத்த தயாராக வைத்திருந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பொலிஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, முகாமைச் சேர்ந்த பெருமாள் மகன் மகேந்திரன் (45), கிருஷ்ணன் மனைவி ராணி (55), பிரபாகரன் மனைவி கிருஷ்ணலீலா (35), கரூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த சுஜீந்தராஜ் மகன் பிரசாந்த் (35) ஆகிய நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர், இவர்கள் ஈரோடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், அரிசி மூட்டைகள் கடத்த பயன்படுத்தபட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*