najib_razak_304x171_afp_nocredit

இலங்கைக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதாக மலேசியா அறிவிப்பு!

இலங்கையின் அரச சேவை முகாமைத்துவ நடவடிக்கைகளை தொழில்நுட்ப மயப்படுத்துவதற்கு மலேசிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை – மலேசிய நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தயாரிப்பதற்கான பின்னணி தொடர்பில் மலேசிய பிரதமருக்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கருத்துகள் பரிமாறப்பட்டன.

ஒரே கரையோரம் – ஒரே பாதை என்னும் தொனிப்பொருளின் கீழ் சீன தலைநகர் பீஜீங்கில் நடைபெற்று வரும் மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக சீனா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*