Doctor prepared to examine the patient
Doctor prepared to examine the patient

மொழிதெரியாத மருத்துவரால் பூநகரி மக்கள் சிரமம்!

பூந­கரி வேர­வில் பிர­தேச மருத்­து­வ­ம­னை­யில் பெரும்­பான்­மை­யி­னத்­தைச் சேர்ந்த மருத்­து­வர்­கள் இரு­வர் கட­மைக்கு நிய­மிக்­கப்­பட் டுள்­ள­னர். அதனால், சிகிச்­சைக் குச் செல்­லும் நோயா­ளி­கள் பெரும் சிர­மங்­களை எதிர்­கொள்ள நேரிட்டுள்ளது என்று கிராம மட்ட பெண் கள் அமைப்­பி­னர் தெரி­வித்­த­னர்.அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள பூந­கரிப் பிர­தேச செய­லர் பிரி­வுக்கு உட்­பட்ட வேர­வில் கிரா­மத்­தில் அமைந்­துள்ள பிர­தேச மருத்­து­வ­ம­னைக்கு இரு மருத்­து­வர் கள் கட­மைக்கு அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் இரு­வ­ரும் சிங்­கள மொழி பேசு­கின்­ற­வர்­கள். இங்­குள்ள கிராம மக்­க­ளில் ஒரு சில­ரைத் தவிர ஏனை­ய­வர்­க­ளுக்­குச் சிங்­கள மொழி பேசத் தெரி­யாது. நோயா­ ளி­கள் மருந்­து­வ­ம­னைக் குச் செல்­லும் போது தமது நோயின் விவ­ரங்­க­ளைச் சரி­யாக எடுத்­துக் கூற முடி­வ­தில்லை.

மருத்­து­வ­ரி­டம் நோயா­ளர்­க­ள் கை பாசை­யில் எடுத்­துக் கூற வேண்டி நிலை­யுள்­ளது. இத­னால் நோய்க்­கு­ரிய மருத்து கிடைக்­குமா என்ற அச்­சத்­து­டன் மருந்­து­க­ளைப் பெற்­றுச் செல்ல வேண்­டி­யுள்­ளது.

அதே­வேளை மருத்­து­வ­ம­னை­யில் பரி­சோ­த­னை­க­ளைச் செய்­வ­தற்குத் தகுந்த உப­க­ர­ணங்­கள் மற்­றும் அதற்­கான பரி­சோ­த­கர்­க­ளும் கட­மை­யில் இல்லை. உரிய தரப்­பி­னர் கவ­னத்­தில் எடுத்து மருத்­து­வ­ம­னை­யின் குறை­பா­டு­களை உடன் நிவர்த்தி செய்ய வேண்­டும். – என்­ற­னர்.

இது தொடர்­பாக கிளி­நொச்சி மாவட்ட பிராந்­திய சுகா­தார துறை­யி­ன­ரு­டன் தொடர்பு கொண்டு கேட்ட போது, மருத்­து­வர்­களை நிய­மிப்­பது அவர்­க­ளின் விருப்­பத்­தின் படியே. அங்கு செல்­வ­தற்கு தமிழ் பேசு­கின்ற மருத்­து­வர்­கள் எவ­ரும் விண்­ணப்­பிக்­காத நிலை­யில் சிங்­கள மொழி பேசு­கின்­ற­வர்­கள் விண்­ணப்­பித்­த­ னர். அவர்­கள் கட­மைக்கு அமர்த்­தப்­பட்­ட­னர்.

அங்கு இரு வரு­டங்­க­ளாகக் கட­மை­யாற்­றும் மருத்­து­வர் தமிழ் மொழி ஒர­ளவு பேசக்­கூ­டி­ய­வ­ராக உள்ளனர். இது தொடர்­பாக கவ­னத்­தில் எடுக்­கப்­ப­டும் – என்­ற­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*