Keppapulavu

கேப்பாபுலவில் தொடர்கிறது போராட்டம்!

தமது வாழ்வாதார பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமெனில் பூர்வீக நிலத்தை இராணுவம் மீள வழங்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எந்தவொரு தீர்வும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்று 74 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இராணுவத்தினர் தமது காணிகளில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கும் மக்கள் தாம், சொந்த நிலத்தை இழந்து நாளாந்த கூலித் தொழிலாளிகளாக வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டனர்.

மீனவக்குடும்பங்களும் விவசாயக்குடும்பங்களும் பண்டமாற்று பொருளாதாரமுறையை கடைப்பிடித்து ஒற்றுமையாக வாழ்ந்ததாக மக்கள் குறிப்பிட்டனர்.

இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு எட்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையிலும் மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*