canada

நாடுகடத்துவதற்கு எதிராக கனடாவில் இலங்கையர் மனு!

கனடாவிலுள்ள இலங்கையர் ஒருவர், தன்னை நாடுகடத்துவதற்கு எதிராக கனேடிய உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்று, வாடகைக் கார் ஓட்டுநராகக் கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக, அமெரிக்காவுக்குச் சென்ற அவர், தரை மார்க்கமாக கனடாவைச் கனேடிய அகதி அந்தஸ்து பெற்றுக்கொண்ட அவர், கனடாவின் புதிய குடிவரவுக்குக் கொள்கைகள் காரணமாக, தான் இலங்கைக்கு மீண்டும் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தன்னுடைய சேவை பெறுநர், இரண்டு தடவைகள் இலங்கைக்குச் சென்றுள்ளார் என்றும் சட்ட திட்டங்களை மதித்தே அவர் சென்று திரும்பினார் என்றும் அவருடைய சட்டத்தரணி மனுவில் குறிப்பிட்டுள்ளார். அகதி அந்தஸ்து பெற்ற ஒருவர், தனது பழைய கடவுச் சீட்டைப் பயன்படுத்தி, தமது சொந்த நாட்டுக்குச் சென்றால் அவருக்கான குடியுரிமை வழங்கப்படாது என, 2012ஆம் ஆண்டு, கனேடிய பழமைவாத அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட குடிவரவுக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இது தொடர்பில் தனது சேவை பெறுநர் அறிந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவரது சட்டத்தரணி, 2015ஆம் ஆண்டு குடியுரிமை பெறுவதற்கான பரீட்சை எழுதியபோதே அவர் இதனை அறிந்திருந்தார் என, குறிப்பிட்டுள்ளார். தனது தாயாரைப் பார்ப்பதற்காகவும் திருமணத்துக்காகவும் இலங்கைக்கு இரு தடவைகள் பயணித்துள்ள அவர், தனது மனைவியையும் கனடாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரின் மனைவிக்கு கனேடிய குடியுரிமை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*