mahinda-medamulan-380-seithy-720x480

சதிதிட்டம் எதுவும் கைவசம் இல்லை என்கிறார் மஹிந்த!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றும் எந்தவொரு சதித் திட்டமும் தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வட மத்திய மாகாண சபையில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துவந்த மஹிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் அடுத்தடுத்து தமது பதவிகளை இராஜினாமா செய்ததை அடுத்து உள்ளுராட்சி சபைகளை மஹிந்த அணி கைப்பற்ற முனைவதாக சந்தேகம் எழுந்துள்ளன. இது குறித்து கேட்டபோதே மஹிந்த ராஜபக்ச அந்தத் தகவல்களை நிராகரித்திருக்கின்றார்.

வடமத்திய மாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட எடுத்துள்ளத் தீர்மானத்தின் பின்னால் ஏதாவது அரசியல் திட்டடொன்று இருக்கின்றதா என ஊடகவியலாளர்களிடம் மஹிந்தவிடம் வினவினர்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றும் எந்தவொரு சதித் திட்டமும் தனக்கோ தனது அணிக்கோ இல்லை என்று அடித்துக் கூறினார்.

எனினும் அண்மைக்காலமாக தனது விசுவாசிகள் என அடையாளம் காணும் அனைவரையும் கட்சியிலிருந்து ஒதுக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அணியினர் முன்னெடுத்துள்ளதாலேயே சிலர் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கட்சிக்க நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சம்பவங்களுக்கு தற்போதைய சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதியே காரணம் என்றும் குற்றம்சாட்டிய மஹிந்த ஆட்சியை கைப்பற்ற வேண்டுமானால் தான் பின் கதவில் சென்று ஆட்சியை கைப்பற்ற வேண்டிய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமரின் வருகை குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி அரசாங்கம் அழைத்த படியாலேயே அவர் வந்துள்ளதாவும் இதன்போது வெசாக்கை தவிர்ந்த வேறு நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அரசாங்கம் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*