srilankan_b

கொழும்பு – விசாகபட்டினம் விமானசேவை தொடக்கம்!

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இலங்கை விமான நிறுவனம் கொழும்பிலிருந்து இந்தியாவின் விசாகபட்டினத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

வாரத்திற்கு 04 நாட்கள் விசாகபட்டினம் வரை நேரடி விமான சேவையை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எதிர்வருத் ஜூலை மாதம் 08ம் திகதி முதல் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.

அதன்படி ஒவ்வொரு செவ்வாய்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த நேரடி விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*