vithiya

வித்தியா கொலைவழக்கு கொழும்பிற்கு; போராட்டத்தில் குதித்தனர் மக்கள்!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், மீளவும் யாழ் மேல் நீதிமன்றத்திற்கே பாரப்படுத்தக்கோரியும் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனவீர்ப்புப் போராட்டம் புங்குடுதீவு கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

வித்தியா கொலை வழக்குத் தொடர்பிலான விசாணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் யாழ்.மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுவந்தது.

இருப்பினும் கொழும்பிற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே கவனவீர்ப்புப் போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக நடைபெற்ற விசாரணையில் சந்தேக நபர்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இருவர் விடுதலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*