kim jongun

கொரிய போர்ப் பதற்றம்; இலங்கைக்கும் பாதிப்பா?!

கொரியக் குடா­நாட்டை அண்­டி­ய­தாக போர்ப்­ப­தற்றம் தீவி­ர­ம­டைந்து வரு­கி­றது. வட­கொ­ரி­யாவின் அணு­குண்டு சோதனை மிரட்டல், அணு­சக்தி ஏவு­கணைப் பரி­சோ­த­னைகள் போன்­ற­வற்றின் தொடர்ச்­சி­யாக, அமெ­ரிக்கா தனது படை­களை அந்தப் பகு­தியில் குவிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

மூன்று குண்­டு­களைப் போட்டு உல­ கத்­தையே அழித்து விடுவோம் என்று எச்­ச­ரிக்­கி­றது வட­கொ­ரியா. அமெ­ரிக்­காவின் விமா­னந்­தாங்கிக் கப்­பலை ஒரே நொடியில் அழித்து விடுவோம் என்றும் மிரட்­டு­கி­றது.

இவ்­வா­றாக அவுஸ்­தி­ரே­லியா, தென்­கொ­ரியா, ஜப்பான் என்று தனக்கு அருகே உள்ள அமெ­ரிக்­காவின் கூட்­டா­ளிகள் எல்­லோ­ரையும் மிர­ள­வைத்துக் கொண்­டி­ருக்­கி­றது வட­கொ­ரியா.

கிம்-­யொங்-உன் ஆட்­சியில் வட­கொ­ரி­யா­வுக்குள் என்ன நடக்­கி­றது என்­பதே உல­கிற்குத் தெரி­யாமல் இருக்­கி­றது. ஈரான், ஈராக், லிபியா, சிரியா, ஆப்­கா­னிஸ்தான் என்று பல்­வேறு நாடு­களின் மிரட்­டல்­க­ளையும், அச்­சு­றுத்­தல்­க­ளையும் சந்­தித்து விட்ட அமெ­ரிக்­கா­வுக்கு வட­கொ­ரியா மட்டும் இன்­னமும் விதி­வி­லக்­கா­கவே இருந்து வரு­கி­றது.

அமெ­ரிக்கா நினைத்­தி­ருந்தால், எப்­போதோ வட­கொ­ரி­யாவை நசுக்­கி­யி­ருக்க முடியும். அங்கு ஆட்­சிக்­க­விழ்ப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். ஆனால் சீனா, ரஷ்யா போன்ற நாடு­க­ளுடன் இறுக்­க­மான பிணைப்பைக் கொண்­டி­ருந்த வட­கொ­ரி­யா­வுக்குள் அமெ­ரிக்­கா­வினால் அவ்­வ­ளவு சுல­ப­மாக உள்­நு­ழையக் கூடிய சூழல் இருக்­க­வில்லை.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில், ஐ.நா. பாது­காப்புச் சபையில் வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ராக எத்­த­னையோ விசா­ரணைக் குழுக்கள் அமைக்­கப்­பட்டன. விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. ஆனா லும் யாராலும் வட­கொ­ரி­யா­வுக்குள் செல்­லவோ அங்கு சென்று விசா­ரணை நடத்­தவோ முடி­ய­வில்லை.

விசா­ரணை அறிக்­கை­களின் அடிப்­ப­டையில் கூட வட­கொ­ரி­யாவைப் பணிய வைக்க முடி­ய­வில்லை. அதனால் வட­கொ­ரியா மீதான எல்லா விசா­ர­ணை­க­ளுமே, அதி­க­பட்சம் ஐ.நா.வின் தடை­களைத் தாண்­டிய எந்த நட­வ­டிக்­கை­யா­கவும் அமை­ய­வில்லை.

இத்­தனை தடை­க­ளையும் தாண்டி வட­கொ­ரியா இன்­னமும் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக போர் முழக்கம் எழுப்­பு­கி­றது. அச்­சு­றுத்­தல்­களை விடுக்­கி­றது.

வட­கொ­ரி­யாவின் இந்த எச்­ச­ரிக்­கை­களை அடுத்து, அமெ­ரிக்கா தனது யு.எஸ்.எஸ் கார்ல்­வின்சன் என்ற பாரிய விமா­னந்­தாங்கிக் கப்­பலை கொரிய கடற்­ப­ரப்­புக்கு அனுப்­பி­யி­ருக்­கி­றது. தென்­கொ­ரி­யாவில் ‘தாட்’ ஏவு­கணை தடுப்பு நிலை­களை அமைத்து வரு­கி­றது.

அமெ­ரிக்­கா­வுக்கு துணை­யாக ஜப்பான் உள்­ளிட்ட பல நாடுகள் தமது போர்க்­கப்­பல்­களை அனுப்­பு­கின்­றன. மொத்­தத்தில், கொரிய குடா­நாடு போர்ப்­ப­தற்­றத்தில் மூழ்­கி­யி­ருக்­கி­றது. வட­கொ­ரியா- அமெ­ரிக்கா இடையே தோன்­றி­யுள்ள இந்தப் போர்ப் பதற்றம் மூன்­றா­வது உலகப் போராக வெடிக்­குமா என்று ஊட­கங்கள் மக்­களை மிரட்டத் தொடங்கி விட்­டன.

கொரியக் குடா­நாட்டில் போர் ஒன்று வெடிக்­கு­மானால் அதன் தாக்­கத்தை இலங்­கையும் எதிர்­கொள்ளும் நிலை ஏற்­ப­டுமா என்­பதே இப்­போது உள்ள கேள்வி. அமெ­ரிக்­கா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற நெருக்­கத்­தினால் தான் இந்தக் கேள்வி இப்­போது எழு­கி­றது.

வட­கொ­ரி­யாவின் மிரட்­டலை அமெ­ரிக்கா தனக்­கான அச்­சு­றுத்­த­லாக மாத்­திரம் வெளிப்­ப­டுத்­த­வில்லை. அதற்கு அப்பால் இந்தோ- ஆசிய- பசுபிக் பிராந்­தி­யத்­துக்­கான அச்­சு­றுத்­த­லா­கவே வெளிப்­ப­டுத்த முயன்­றி­ருக்­கி­றது அமெ­ரிக்கா.

அது மாத்­தி­ர­மன்றி, இந்தோ – ஆசிய – பசுபிக் பிராந்­தி­யத்தில் தனது நெருங்­கிய கூட்­டா­ளி­க­ளாக அமெ­ரிக்கா அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற நாடு­களில் இலங்­கையும் ஒன்று என்­பது பல­ருக்குத் தெரி­யாத செய்தி.

கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி அமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்தில், ஆயு­தப்­படை சேவைகள் குழுவின் முன்னால், அமெ­ரிக்­காவின் பசுபிக் கட்­டளைப் பீடத் தள­ பதி அட்­மிரல் ஹரி பி ஹரிஸ், ‘இந்தோ- ஆசிய- பசுபிக் பிராந்­தி­யத்தில் பாது­காப்புச் சவால்கள்’ என்ற தொனிப்­பொ­ருளில் உரை­யாற்­றி­யி­ருந்தார்.

இதன் போது தான் அவர், அமெ­ரிக் கா­வுக்கும் அதன் இந்தோ -ஆசிய -பசுபிக் பிராந்­தி­யத்தில் உள்ள கூட்­டா­ளி­க­ளுக்கும் வட­கொ­ரியா இன்­னமும் பாரிய உட­னடி அச்­சு­றுத்­த­லாக விளங்­கு­கி­றது என்று கூறி­யி­ருந்தார்.

“வட­கொ­ரியா மற்றும் ஐஎஸ் தீவி­ர­வாதம் உள்­ளிட்ட அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்­வ­தற்கு பிராந்­திய சக்­தி­க­ ளான இந்­தியா, இந்­தோ­னே­சியா, மலே­

சியா, நியூ­சி­லாந்து, சிங்­கப்பூர், இலங்கை, வியட்னாம், போன்ற பிராந்­திய சக்­தி­க­ளுடன் அமெ­ரிக்­காவின் ஒத்­து­ழைப்பு முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது.

இந்த ஒத்­து­ழைப்­பு­களின் மூலம், விதி­மு­றை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட பாது­காப்பு ஒழுங்கை வலுப்­ப­டுத்­து­வ­துடன், பிராந்­தி­யத்தில் அமை­தி­யையும் செழிப்­பையும் ஏற்­ப­டுத்த முடியும்” என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

அட்­மிரல் ஹரிசின் இந்தக் கருத்தின் மூலம், இந்தோ- ஆசிய- பசுபிக் பிராந்­தி­யத்தில் அமெ­ரிக்­காவின் முதன்மைக் கூட்­டாளி நாடு­களில் ஒன்­றாக இலங்கை அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இது ஒரு முக்­கி­ய­மான விடயம்.

இலங்­கைக்கும் , அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில், 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் செய்து கொள்­ளப்­பட்ட கைய­கப்­ப­டுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்­பாடு கடந்த மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்து விட்­டது.

இந்த உடன்­பாட்டைப் புதுப்­பித்துக் கொள்­வ­தற்கு அமெ­ரிக்கா விருப்பம் வெளி­யிட்­டி­ருந்­தது. ஆனால் இன்­னமும் இந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­ப­ட­வில்லை. இது தொடர்­பாக பாது­காப்பு அமைச்சு பேச்­சுக்­களை நடத்தி வரு­வ­தாக அர­சாங்­கத்­தினால் கூறப்­பட்ட போதிலும், இன்­னமும் அது­பற்­றிய இறுதி முடி­வுகள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இருந்­தாலும், இந்தோ- ஆசிய- பசுபிக் பிராந்­தி­யத்தில் வட­கொ­ரியா உள்­ளிட்ட சக்­தி­களின் அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்­வ­தற்­காக இலங்கை உள்­ளிட்ட பிராந்­திய சக்­தி­க­ளுடன் ஒத்­து­ழைப்பை அமெ­ரிக்கா கொண்­டுள்­ளது என்று அட்­மிரல் ஹரிஸ் கூறி­யி­ருப்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

அமெ­ரிக்­கா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் ஆகக்­கூ­டிய பாது­காப்பு ஒத்­து­ழைப்­பு­களை பரி­மாறிக் கொள்­வ­தற்­கான உடன்­பாடு என்றால், அது கைய­கப்­ப­டுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்­பாடு தான். அந்த உடன்­பாடு தற்­போது நடை­மு­றையில் இல்­லாத நிலையில், முன்­னேற்­ற­க­ர­மான ஒரு பாது­காப்பு ஒத்­து­ழைப்பு இலங்­கை­யுடன் இருப்­ப­தாக அட்­மிரல் ஹரிஸ் கூறி­யி­ருப்­பது கவ­னிப்­புக்­கு­ரிய விட­ய­மாக உள்­ளது.

இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் இர­க­சிய பாது­காப்பு உடன்­பாடு ஏதும் செய்து கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றதா என்ற சந்­தே­கத்தை இது ஏற்­ப­டுத்­து­கி­றது.

அதே­வேளை, கைய­கப்­ப­டுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்­பாடு மீண்டும் புதுப்­பித்துக் கொள்­ளப்­பட்டால், அமெ­ரிக்கா தனது இரா­ணுவத் தேவை­க­ளுக்­காக இலங்­கையின் தளங்­களைப் பயன்­ப­டுத்திக் கொள்ளும் வாய்ப்­புகள் உள்­ளன.

அமெ­ரிக்க போர்க்­கப்­பல்கள் இந்­தியப் பெருங்­கடல் வழி­யாக பயணம் மேற்­கொள்ளும் போது, தங்கிச் செல்­வது மற்றும் ஏனைய தேவை­க­ளுக்­காக இலங்­கையின் துறை­மு­கங்கள், விமான நிலை­யங்­களை பயன்­ப­டுத்திக் கொள்ளக் கூடும்.

அத்­த­கை­ய­தொரு சந்­தர்ப்­பத்தில், வட­கொ­ரியா அல்­லது அத­னுடன் இணைந்து போர் ஒன்றில் பங்­கேற்கக் கூடிய நாடு­க­ளுக்கு இலங்­கையின் தரை அல்­லது கடற்­ப­ரப்பும் கூட இலக்கு வைக்­கப்­பட வேண்­டிய தெரி­வு­க­ளாக அமை­யலாம்.

இலங்­கைக்கும் வட­கொ­ரி­யா­வுக்கும் சில இர­க­சிய உற­வுகள் காணப்­பட்­டன. தற்­போ­தைய அர­சாங்­கத்தின் காலத்­திலும் அந்த உற­வுகள் நீடித்­த­தாக ஐ.நா. விசா­ரணை அறிக்கை ஒன்றில் அம்­ப­லத்­துக்கு வந்­தி­ருந்­தது,

ஐ.நா ..பாது­காப்புச் சபையில் கடந்த பெப்­ர­வரி 27ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­பட்ட ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை ஒன்றின் 103 ஆவது பந்­தியில், வட­கொ­ரி­யா­வுக்கும் இலங்­கைக்கு உள்ள உற­வுகள் தொடர்­பாக கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது.

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்த்­த­னவை 2015 நவம்­பரில் வட­கொ­ரிய இரா­ஜ­தந்­திரி ஒருவர் சந்­தித்­தமை தொடர்­பாக அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

அங்­கோ­லாவைச் சேர்ந்த பிர­தி­நிதி ஒருவர், வட­கொ­ரிய இரா­ஜ­தந்­தி­ரி­யான கிம் ஹையோக் சான், அங்­கோ­லாவில் உள்ள மற்­றொரு இரா­ஜ­தந்­தி­ரி­யான ஜொன் சோல் யங் ஆகிய மூவரும், 2014 ஆம் ஆண்­டுக்கும், 2016ஆம் ஆண்­டுக்கும் இடையில் மூன்று தட­வைகள் இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருக்­கின்­றனர். கப்பல் கட்டும் திட்­டங்கள் தொடர்­பாக பேச்சு நடத்­தவே இவர்கள் கொழும்பு வந்­தி­ருந்­தனர்.

கப்பல் கட்டும் நிபு­ணர்கள் என்ற போர்­வையில் இவர்கள், இலங்­கையின் கடற்­படை கப்பல் கட்டும் தளத்தில், கடற்­ப­டைக்­கான ரோந்துப் பட­கு­களைக் கட்­டு­வது தொடர்­பாக 2015 நவம்பர் 5ஆம் திகதி பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ருடன் பேச்சு நடத்­தி­யி­ருந்­தனர்.

இது­கு­றித்து இலங்­கை­யிடம் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு இன்­னமும் பதில் கிடைக்­க­வில்லை என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருந்­தது.

வட­கொ­ரியா எதற்­காக இலங்­கையில் கடற்­படைக் கப்­பல்­களைக் கட்­டு­வ­தற்கு முனைந்­தது என்­பது கேள்­விக்­கு­ரிய விடயம்.

இர­க­சி­ய­மாக இலங்­கைக்குள் தனது செயற்­பாட்டை விரி­வு­ப­டுத்த வட­கொ­ரி­யாவும் முயற்­சி­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கி­றது என்­பது இந்த அறிக்­கையின் ஊடாக வெளிப்­பட்­டி­ருக்­கி­றது.

இதன் மூலம் வட­கொ­ரி­யாவும் இலங்கை விட­யத்தில் ஆர்வம் கொண்­டி­ருக்­கி­றது என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது. இது மாத்­தி­ர­மன்றி, இன்­னொரு சம்­ப­வமும் அண்­மையில் நடந்­தி­ருக்­கி­றது.

கடந்த மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில், வட­கொ­ரி­யாவைச் சேர்ந்த நான்கு பேருக்கு இலங்கை அர­சாங்கம் வீசா வழங்க மறுத்­தி­ருந்­தது. இலங்கை- வட­கொ­ரிய நட்­பு­றவுச் சங்­கத்­தினால், கட்­டு­நா­யக்­கவில் மார்ச் 17ஆம் திகதி நடத்­தப்­பட்ட கருத்­த­ரங்கு ஒன்றில் பங்­கேற்­ப­தற்கு அவர்கள் இலங்கை வர­வி­ருந்­தனர்.

நான்கு வட­கொ­ரி­யர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளை இந்தச் சங்கம் அழைத்திருந்தது. ஆனால், தென்கொரியாவுடனான உறவுகளை பாதித்து விடும் என்று கூறி வடகொரியர்களுக்கு வீசா வழங்க அரசாங்கம் மறுத்து விட்டது.

இந்தக் கருத்தரங்கை நடத்தியவர்களுக்கும் கூட்டு எதிரணிக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று கூறியிருந்தது.

வடகொரியர்களுக்கு வீசா வழங்குமாறு கூட்டு எதிரணியினர் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு கேட்டிருந்தனர். ஆனால், அதற்கு வெளிவிவகார அமைச்சு மறுத்து விட்டது.

வடகொரிய நட்புறவுச் சங்கத்தின் அந்தக் கருத்தரங்கு நடந்த போது தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியங் சே இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அமெரிக்காவின் அரவணைப்புக்குள் வந்திருக்கும் இலங்கையை வடகொரியாவும் கண்காணித்து வருகிறது என்பது உறுதியாக தெரிகிறது.

இப்படியானதொரு சூழலில் கொரிய குடாநாட்டில் தோன்றி வரும் போர்ப்பதற்றத்தின் தாக்கத்தை, இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளாமல் இருக்க முடியும்?

– சுபத்திரா –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*