vaal veddu

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு அவலம் தொடர்கிறது! சாவகச்சேரியில் இருவர் படுகாயம்!

கடையினுள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இருவரை கடைக்குள் திடீரென உள் நுழைந்தவர்கள் வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று பி.ப.3.30 மணியளவில் கனகன்புளியடிச் சந்தியில் உள்ள தேநீரகத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள் வாகனத்தில் சாவகச்சேரி வைத்தியசாலைக் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*