ranil

உடைகிறதா ஐக்கிய தேசியக்கட்சி?!

நாட்­டைப் பிள­வு­ப­டுத்­தும்-­­ வ­டக்­கு -­­கி­ழக்­குக்கு கூட்­டாட்சித் தீர்வை வழங்­கும் புதிய அர­ச­மைப்பு நாடா­ளு­மன்­றத்­துக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டால் அதற்கு எதி­ராக ஐக்கிய தேசிய கட்­சி­யைச் சேர்ந்த 18 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளிக்­கத் திட்டமிட்டுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இந்த அரசு பல்வேறு தரப்பினருக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அவற்றுள் ஒன்றுதான் புலம்பெயர் தமிழர்களுக்கும் பன்னாட்டுக்கு வழங்கிய வாக்குறுதி. எல்லா வாக்குறுதிகளை விடவும் அந்த வாக்குறுதிதான் நாட்டுக்கு ஆபத்தானதாகும்.

வடக்கு-கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கூட்டாட்சித் தீர்வு வழங்கப்படும் என்பதுதான் அந்த வாக்குறுதி. கூட்டாட்சி சாதாரண தீர்வு அல்ல. நாட்டை இரண்டாக்கப் பிரித்து ஒரு பகுதியை தமிழர்களிடமே ஒப்படைத்துவிடும் யோசனைதான் இந்த கூட்டாட்சியில் அடங்கி இருக்கின்றது.

இந்தத் தீர்வை வழங்குவதற்கு ஏதுவாகத்தான் புதிய அரசமைப்பு கொண்டு வரப்படவுள்ளது. அரசில் உள்ளவர்களாக இருந்தாலும் நாட்டுப் பற்றாளர்கள் எவரும் இதை ஆதரிக்கமாட்டார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசமைப்பைத் தோற்கடிக்கடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

நான் அறிந்தவரை ஐக்கிய தேசிய கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசமைப்புக்கு எதிராக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புண்டே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. இந்த நாட்டு மக்களும் இதை ஆதரிக்கமாட்டார்கள்-என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*