basil

அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடுவதா? – பசில் விளக்கம்!

அமெரிக்க குடியுரிமையைக் கைவிட தாம் தயாரில்லை என்று முன்னாளன் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயராஜபக்சவும் தானும் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்கும் நோக்கிலேயே, இரட்டைக் குடியுரிமை கொண்டவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்ற சட்டம் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இது நல்லது அல்ல.
ஏனெனில், இங்கு குடியுரிமை அற்ற அர்ஜூன மகேந்திரனுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதவி வழங்கப்பட்டமை அபாயமான விடயமாகும் என்றார்.
இதேவேளை, தமது மனைவி, பிள்ளைகளும் அமெரிக்காவில் வசிப்பதாக தெரிவித்துள்ள அவர், அந்தக் குடியுரிமையை வைத்துக்கொண்டே தாம் அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
எனவே, அமெரிக்கக் குடியுரிமையை கைவிட தாம் தயார் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*