kusumbu

சிறிதரன் புல் சப்போட், மாவை அண்ணையும் என்னை விடமாட்டார்!

வணக்கம் எல்லாருக்கும்!

எல்லாரும் கடுப்பாயிருக்கிறியள் எண்டு விளங்குது. ஆனா விளக்கம் கொடுக்கிறது என்ர கடமை.

நீங்கள் பின்கதவு வழியா வந்தவன் தானே நான் எண்டு, திருப்பிதிருப்பி சொல்லலாம். ஆனா நான் தான் இண்டைக்கு வெஸ்ரேன் பவர்சோட டீல் பண்ணிக்கொண்டிருக்கிறன் என்ன.

வாற எலக்கசனில வேணுமெண்டா நிண்டுகாட்டட்டும் பாடம் ஒண்டு படிப்பிக்கிறம் எண்டு கொஞ்சப்பேர் கொடுக்கு கட்டிகினமாம்.

தம்பி ஒண்டு மட்டும் சொல்லிப்போட்டன். தமிழ் சிங்களம் இங்கிலீஸ் எண்டு 3 மொழியிலயும் உருப்படியாக கதைக்கிறதுக்கு நான் தான் இருக்கிறன்.

அடுத்தது வாற எலக்சனில நிக்கத்தான் போறன். வெண்டு காட்டத்தான் போறன். அதுக்கு பிறகு காட்டுறன் நான் ஆர் எண்டு.

தம்பி அண்டைக்கு தொடக்கம் இண்டைக்கு வரைக்கும் விடுதலைப்போராட்டத்தை நான் ஏற்றுக்கொள்ளல்ல. அதை வெளிப்படையா சொன்ன ஆள் நான் தம்பி.

நீங்கள் கேக்கலாம் இவ்வளவு காலமும் கொழும்பில இருந்து கூடி கும்மாளமடிச்சுப்போட்டு இப்ப மாட்டு வண்டில்ல வாறார். குடத்தனையில கூழ் காச்சுறார் எண்டு சொல்லுறியள்.

எதுக்கும் பிளான் பண்ணிசெய்யவேணும் தம்பி.

வாற எலக்கசனுக்கு சிறிதரன் புள் சப்போட் செய்யிறன் எண்டு சொன்னவர். மாவை அண்ணையும் என்னை விடமாட்டார்.

எனக்கு இயக்கம் எண்டா பிடிக்காது. கொஞ்சப்பேர் கடுப்பில இருப்பியள்தான். சிறிதரன் அந்தப்பக்கத்தை பார்த்துக்கொள்ளுவார். காணாட்டி மாவையண்ணை இருக்கிறார். அவர் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் எண்டு சொல்லித்தான் எலக்சன் காம்பெயினில இறங்குவார்.

அப்ப எனக்கு இயக்க ஆதரவு வோட்டும் வரும் எதிரான வோட்டும் வரும். இதுதான் தம்பி இராசதந்திரம்.

தந்தை செல்வா நினைவுரை ஆற்ற சமாதான தேவதை சந்திரிகாவை கூப்பிட்டதுக்கு குத்தி முறிஞ்சியள். இப்ப பாருங்கோ சந்திரிகா போட்ட குண்டுக்கு பலியான பள்ளிக்கூட பெடியளுக்கு தூபி கட்டுறது எண்டு வெளிக்கிட்டிருக்கிறன். இப்ப என்ன சொல்லுவியள்?

என்ன செய்யிறது வெளிநாட்டுக்கு வரக்குள்ள இடக்குமுடக்கா கேள்விகேட்பாங்கள். அனந்திக்கு கிடைச்ச வோட்டு உங்களுக்கு கிடைக்குமோ எண்டுறாங்கள்.

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமோ அனந்தி அக்காவை பார்லிமென்ற எலக்சனில விடமாட்டம் என்ன? அதுக்குத்தான் சில சாணக்கிய நகர்வுகள் செய்துகொண்டிருக்கிறம். பார்ப்பம் எப்பிடி போகுது எண்டு?

என்ன தம்பி சொல்லுறீர். பெண்களுக்கு 50 வீத பிரதிநிதித்துவம் கொடுக்க சுமந்திரன் கோரிக்கை எண்டு சிங்கள பேப்பர்ல வந்ததோ.

ஓமோம் சிங்களப்பேப்பர்ல அப்பிடி சொன்னனான் தம்பி. கடைசிமட்டும் தமிழ்பேப்பர்ல அப்பிடி சொல்லமாட்டம் என்ன.

சரி சரி விசயத்திற்கு வருவம்.

போனகிழமை இலண்டனில ஒரு மீற்றிங். நான் சுரேந்திரன் மங்கள சமரவீர எரிக் சொல்கெய்ம் எல்லாரும் இரகசியமா கதைச்சனாங்கள். நான் இலண்டன் போற விசயம் சம்பந்தன் ஐயாக்கு மட்டும் தான் தெரியும். மாவை அண்ணைக்கு கூட சொல்லல்ல என்ன.

ஆனா இவங்கள் மோந்து பிடிச்சிட்டாங்களடா. இராசதந்திர நகர்வு எண்டால் என்ன தம்பி. இதுகள் ஏன் இவங்களுக்கு விளங்குது இல்ல.

சத்தியமா சொல்லுறன் தம்பி நாங்கள் ஒண்டும் கதைக்கல்ல. நீங்கள் நினைக்கிற மாதிரி அரசியல் தீர்வு பற்றியோ போர்க்குற்ற விசாரணை பற்றியோ ஏன் அரசியல் கைதிகள் விடுதலை பற்றியோ நாங்கள் கதைக்கல்ல.

இதயக்கனி மைத்திரி ஐயா சொல்லியிருக்கிறார். நீங்கள் திரும்ப திரும்ப அரசியல் கைதிகள் எண்டு சொல்லாதைங்கோ. அப்பிடி ஒருதரும் எங்களிட்ட இல்லை. எல்லாரும் குற்றவாளிகள் தான், எங்களிட்ட இருக்கினம் எண்டு.

இது கிட்டதட்ட கோத்தபாய சொல்லிறமாதிரிதான். ஆனா என்ன செய்யிறது நாங்கள் கொண்டுவந்த அரசாங்கம் என்ன?

அப்ப நாங்கள் என்ன கதைச்சனாங்கள் எண்டா, அடுத்த எலக்சன் வாறதுக்கு இடையில எங்கட மக்களின்ர, எப்பிடியான அன்றாட பிரச்சனைகளை தீர்க்கலாம் எண்டுதான் கதைச்சனாங்கள்.

இதுகள கதைக்க ஏனப்பா இலண்டனுக்கு போய் இரகசியமா கதைக்கவேணும் எண்டுதானே யோசிக்கிறியள்.

தம்பி கனக்க யோசிச்சா உடம்புக்கு கூடாது.

தந்தை செல்வா ஒரு 30 வருசம் உங்கட தலைவர் பிரபாகரன் 30 வருசம். என்னட்டயும் ஒரு 30 வருசம் விட்டுப்பாருங்கோவன் தம்பி.

தம்பி பொறு பொறு கோபப்படாதை. நான் வெளிக்கிடுறன்.

அப்ப நான் வரட்டே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*