kusumbu

பாலா அண்ணை சொன்ன இரகசியமும் பேச்சுக் கேக்காத தலைவரும்!

வணக்கம் வணக்கம் எல்லாருக்கும் வணக்கம்

என்ன அப்பு இண்டைக்கு கலாதியா 3 தரம் வணக்கம் வைக்கிறார் எண்டுதானே யோசிக்கிறியள்.

தம்பி பிழையா நினைக்கக்கூடாது. நான் இப்ப கொஞ்சம் பிசி தம்பி. உங்களுக்கு தெரியும்தானே எங்கயும் பிரச்சனை எண்டால் என்னட்டைதான் வந்துநிப்பாங்கள்.

நான் இப்ப பாலா அண்ணை சொல்லிப்போட்டுப்போன விசயங்களை தம்பி ஒரு புத்தகமா எழுதிக்கொண்டிருக்கிறன்.

ஏனப்பு இப்ப அவசரம் எண்டு கேப்பியள் என்ன?

உனக்கு சொன்னா என்ன தம்பி. பாலா அண்ணை கடைசி நேரத்தில சரியான கவலையோட கனக்க இரகசியங்களை சொன்னவர். ஓமோம் தலைவரைப்பற்றியும் தான்.

உந்தச்சண்டையில எல்லா தளபதிமாரும் செத்துப்போடுவினம் எண்டும் சொன்னவர் தம்பி. எனக்கு அப்ப அதைக்கேக்க பயங்கர சொக்கா இருக்கும் எண்டும் நீர் நினைப்பீர். ஆனா எனக்கும் தெரியும் தம்பி.

அமெரிக்கன் எங்க ஆப்பு வைப்பான் எண்டும் சீனாக்காரன் எங்க சீண்டுவான் எண்டும் எங்கட இந்தியக்காரன் விடுவானோ எண்டு எனக்கு எப்பவோ தெரியும் தம்பி.

பாலா அண்ணை சொன்னவர் தம்பி “முல்லைத்தீவு சிகரம் கிளிநொச்சி தகரம்“. முல்லைத்தீவை விட்டா பெரிய பிரச்சனை எனக்கு தெரியும்.

இதை உடன போன் அடிச்சு கிளிநொச்சியில ஒரு பொடியனுக்கு சொன்னனான் தம்பி. அவன் கேக்கல்ல.

இந்த இராணுவ இரகசியம் எங்கட தலைவருக்கு தெரிஞ்சிருந்தா இந்தச்சண்டையில வெண்டிருக்கலாமடா.

எனக்கும் பாலா அண்ணைக்கும் தெரிஞ்ச இந்த இரகசியத்தை ஏன் எங்கட தலைவர் அறிஞ்சுகொள்ளாமல் இருந்தவர் எண்டு நீங்கள் யோசிக்கலாம்.

ஆனா இயக்கம் ஆரம்பிச்ச காலத்திலயிருந்து ஆயுதம் தூக்கினது நான்தான் தம்பி. இயக்கம் இடைக்கிடை போர்நிறுத்தம் செய்யும் சமாதானப்பேச்சுவார்த்தை செய்யும்.

நான் அப்பிடியான ஆள் இல்லை தம்பி. என்ர ஆயுதத்தை நான் ஒருக்காலும் வைக்கல்ல.

தலைவரோட சாப்பிடக்க தலைவரும் அடிக்கடி அதைச்சொல்லுறவர்.

கருணா பிரச்சனை வரமுதலே பாலா அண்ணை சொன்னவர் என்ன. கருணாவில ஒரு கண்ண வைச்சிரடாப்பா விளையாட்டுக்க்காட்டப்போறான் எண்டு.

தலைவர் கேக்கல்ல என்ன.

நீங்கள் கேக்கலாம் தலைவர் கேக்காட்டி ஒருக்கா பொட்டுவிட்ட எண்டாலும் சொல்லியிருக்கலாம் தானே எண்டு.

நீங்கள் அப்பிடி ஒரு கேள்வி கேக்கலாம். ஆனா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமோ.

எனக்கு முன்னால பொட்டன் இருக்கமாட்டான் என்ன? சிரியாதை தம்பி. உண்மையாத்தான் சொல்லுறன் என்ன. அவ்வளவுக்கு என்னில அவனுக்கு மதிப்பு. ஏன் தெரியுமோ?

நாங்கள் பெரிய வகுப்பு படிக்கக்க அவன் சின்னப்பொடியன் தம்பி.

அப்பிடிப்பட்ட பொடியனிட்ட நான் அப்பிடிக் கேக்ககூடாது என்ன?

கடைசியா மாவீரர் நாள் உரை வரப்போகுது. சற்றலைற் போன் எடுத்து அந்தச்சண்டை நேரத்திலயும் கோல் எடுத்து சொன்னனான் தம்பி. இந்தியா எங்கட பிறண்ட்ஸ் எண்டு தலைவர மாவீரர் நாள் உரையில சொல்லச்சொல்லி.

தலைவர்ர கடைசியா வந்த உரையை பாருங்கோ ஒரு சேஞ் இருக்குது என்ன? என்ர ஆயுதத்தின்றர பவர் தம்பி.

அந்தநாள்ல எம்ஜிஆருக்கு தலைவருக்கும் லிங்கை ஏற்படுத்த எத்தினை கஸ்ரப்பட்டனான் தெரியுமே.

தலைவர்ர படம் பாலா அண்ணையின்ர படம் எம்ஜிஆரின்ர படம் எண்டு போட்டு ஒரு இம்பிறசன் கொண்டு வந்தது நான் தான் தம்பி.

இப்ப என்னத்திற்கு கடுமையா யோசிக்கிறாய். என்னண்டாலும் கேள் தம்பி.

எனக்கு விளங்குது. கடைசியா பாலா அண்ணை அந்த இரகசியங்களை என்னட்டை சொன்னவர் தானே. அதுகளை ஒருக்கா அறிவம் எண்டுதானே.

குறைநினைக்காத தம்பி நான் அதுகளை இப்ப சொல்லமாட்டன்.

ஆனா என்ர ஆயுதத்திற்கு எப்பவும் றெஸ்ற் இல்ல தம்பி.

எழுத்தாயுதம் தம்பி எழுத்தாயுதம்.

ஊ………….. ஊ…………………………. டும்

என்ன தம்பி நக்கல் அடிக்கிறாய் என்ன?

நீ கெட்டிக்காறனடா… உடன பிடிச்சிட்டாய் என்ன?

அப்ப வரட்டே.

ஆங்கிலத்தில் வெளிவந்த முன்னாள் உதயன் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரனின் நேர்காணலை அடிப்படையாக கொண்ட பதிவு

http://ceylontoday.lk/89-93013-news-detail-balasingham-was-disappointed-with-prabhakaran-vithyatharan.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*