poorayam-1024x719

சுமந்திரனும் சம்பந்தரும் செஞ்ச இரண்டு முறியடிப்புக்கள்!

வணக்கம்

என்ன மாதிரி எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே. என்ன ஒரு மாதிரி பார்வை பார்க்கிறியள்? நடந்துவாற மனிசன், என்ன இண்டைக்கு ஜிம்மிலிருந்துவாறமாதிரி வாறார் எண்டுதானே.

வாறதென்ன? ஜிம்மாலதான் வாறன். கிழமைக்கு 3 மணித்தியாலம் ஓடியாடி பயிற்சி செய்தா, அஞ்சு வருச ஆயுள் கூடும் எண்டு நோர்வே ஆராய்ச்சி சொல்லுது எண்டு, பிபிசி தமிழோசையில சொன்னாங்கள். அதுதான் அஞ்சு வருச அரசியலுக்காக எங்கடையாக்கள் செய்யுற திருகுதாளங்களபார்க்கக்கதான், அஞ்சு வருசம் எவ்வளவு முக்கியம் எண்டு தெரியுது கண்டியளோ.

அதால இப்ப வாரத்திற்கு 3 மணித்தியாலம் அப்புவும் ஓடப்போறார்.

அதுசரி நாட்டுநடப்புகள் என்ன மாதிரி எண்டுதானே கேக்கிறியள்?

இரண்டு முறியடிப்புகளை சுமந்திரனும் சம்பந்தரும் செய்திருக்கினம். அதுவொரு முக்கியமான செய்தி.

போனகிழமை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஆபிரகாம் சுமந்திரனுக்கும் நேருக்குநேர் விவாதம் ஒண்டை யாழ்ப்பாணத்திலஒழுங்குசெய்திருந்தவைதானே.

அப்ப சுமந்திரன் சொன்னவர். ஒற்றையாட்சிக்குள்ள தான் தமிழருக்கு தீர்வு எண்டு, அரசாங்கம் எடுக்கவிருந்த நிலைப்பாட்டை, முளையிலேயேகிள்ளியெறிஞ்சு போட்டாராம் எண்டு, ஒரு போடுபோட்டார்.

ஒற்றையாட்சி எண்டா, ஒரு நிர்வாக அலகுக்குள்ள, ஒரு ஆளுக்கு ஒரு வோட்டு எண்ட அடிப்படையில வாக்களிக்கவிட்டு, நிர்வாகத்தை நடத்திறது. இலங்கையை பொறுத்தளவில அப்படி வாக்களிச்சு வாற அரசு, எப்பவுமே பெரும்பான்மை இனமக்களின் அரசாகத்தான் இருக்கும்.

அப்ப மைத்திரி ஆக்கள் தேர்தல் விஞ்ஞாபனம் போடக்க, சிறிலங்கா அரசு தொடர்ந்தும் ஒற்றையாட்சி அரசாத்தான் இருக்கும் எண்டு சொன்னவையாம்.அதை எழுத்திலயும் போடப்போறம் எண்டு சொன்னவையாம்.

அப்ப சுமந்திரன் ஐயா சொன்னாராம். அப்பிடி எழுத்தில போடுவியள் எண்டா, நாங்கள் மகிந்தவுக்கு தான் வாக்களிக்கவேண்டிவரும் எண்டுசொன்னவராம். அப்ப மைத்திரி ஆக்கள் சொன்னவயாம், நாங்கள் அப்பிடியெண்டா போடாம விடுறம் எண்டு.

சுமந்திரன் ஐயாவின்ர அரசியல் சாணக்கியத்தை கண்டு, சிறிலங்காவின் ஒற்றையாட்சியை உருவித்தள்ளிய செம்மலின்ர அறிவைக்கேட்டு, விவாதத்திற்கு வந்திருந்த ஆக்கள், பிரமிச்சு போச்சினமாம்.

இப்பிடி சுமந்திரன் ஒரு பக்கம்.

இண்டைக்கு சம்பந்தர் ஐயா ரேடியோ ஒண்டுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் கேட்டனியளே.

புங்குடுதீவு பொம்பிளைப்பிள்ளை ஒண்டுக்கு நடந்த பிரச்சனைக்கு நீதி கேட்டு, நடந்த போராட்டத்தில நடந்த அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த,இராணுவத்தை இறக்கவேணும் எண்டு ரணில் விக்கிரமசிங்க கொதிச்சுப்போய் நிண்டவராம்.

அப்ப சம்பந்தன் ஐயா ஸ்பொட்டில இறங்கி சொன்னவராம். இராணுவத்தை இறக்க கூடாது. இறக்கினா நாங்கள் கடுமையா எதிர்ப்பம் எண்டு.

உடன ரணில் சுருண்டிட்டாராம் என்ன?

பார்த்தியளே எப்பிடிப்பட்ட இராசதந்தரமிக்க, அரசியல் தலைமையள வைச்சுக்கொண்டு, பயன்படுத்தாம இருந்திட்டம் என்ன?

இதுதான் அந்த இரண்டு முறியடிப்புக்கள்.

உண்மையில விக்கினேஸ்வரன் ஐயாவ, நினைச்சா பெருமையாய்த்தான் இருக்கு. கொழும்பில இருந்த மனிசன். தன்ர இரண்டு பிள்ளையளையும்சிங்களப்பிள்ளையளுக்குதான் கட்டிகொடுத்த மனிசன். எங்க நல்லது கெட்டதுகளை விளங்கிக்கொள்ளுமோ எண்டு ஒரு பயம் இருந்தது.

ஆனா இண்டைக்கு முள்ளிவாய்க்கால் நினைவுநாளுக்கு போய், தீபம் கொழுத்தினதும் அந்தாள்தான். இப்ப நடக்கிற புங்குடுதீவு பிரச்சனைக்கும் ஒருசரியான விசயத்தை சொல்லியிருக்கு. வாசிச்சிருப்பியள் எண்டு நினைக்கிறன்.

தமிழற்ற அரசியல் தலைமை சொல்ல வேண்டிய விசயத்தை மனிசன் தான் சரியாய் சொல்லியிருக்கு.

அது சரி அப்பு முள்ளிவாய்க்கால் நினைவுநாளுக்கு சம்பந்தர் – சுமந்திரன் இரண்டுபேரையும் காணல்ல எண்டுதானே கேக்கிறியள்.

எனக்கு கோபத்தை கிளறாதைங்கோ.

விக்கியரை பற்றி சொல்லக்க தான் வித்தியரின்ர விசயம் ஒண்டு வருகுது.

இப்ப நேரம் போட்டுது. அடுத்த தரம் வரக்க அதைப்பற்றி சொல்லுறன் என்ன?

அப்ப வரட்டே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*