soviyath

சோவியத் ஒன்றிய வெற்றியின் 70 ஆம் ஆண்டு நினைவுகள்

ஜேர்மனிய நாசிப்படைகள் சோவியத் ஒன்றியம் மீது தொடுத்த பிரமாண்டமான ஆக்கிரமிப்பு போர் முறியடிக்கப்பட்டு, நாசிப்படைகள் விரட்யடிக்கப்பட்டதன் 70 ஆவது ஆண்டு விழாவை ரஸ்யா மொஸ்கோவில் கொண்டாடியது. ரஸ்யாவின் உக்ரேன் தொடர்பான நடவடிக்கைகளை கண்டிக்கும் முகமாக இவ்விழாவில் மேற்கு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளாத போதிலும், இவ்விழா பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் சிறப்பாக நடைபெற்றது. சீன, இந்திய ஜனாதிபதிகள் கலந்து கொண்டு இராணுவ அணிவகுப்பை ஏற்றுக் கொண்டனர்.

1917 ஆம் ஆண்டு ஜார் மன்னரின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற சோவியத் யூனியன் பொதுவுடமை ஆட்சியில் மிக விரைவில் பொருளாதார முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளை நோக்கி தனது ஆக்கிரமிப்பை விரிவாக்கிய ஜேர்மனியுடன் சோவியத் யூனியன் 1939 இல் ஒரு போர்த்தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் 1941 இல் ஜேர்மனி ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக முறியடித்துக் கொண்டு சோவியத் பிரதேசங்களை கைப்பற்ற ஆரம்பித்தது. பல பிரதேசங்களை கைப்பற்றி முன்னேறிய ஜேர்மன் படைகளை சோவியத் படைகள் வாலாகா நதிக்கரையுடன் தடுத்து நிறுத்தின.

இந்த களமுனையில் மட்டும் ஐம்பது இலட்சம் ஜேர்மன் படைகள் இறக்கப்பட்டன. லெனின் கிராட், ஸ்பாலின் கிராட், மஸ்கோ ஆகிய நகரங்கள் சுற்றி வளைப்பட்டு தொடர் விமானத்தாக்குதல்களும், பீரங்கித்தாக்குதல்களும் நடத்தப்பட்டன. சோவியத் மக்கள் தங்கள் நகரங்களுக்காக மட்டுமின்றி ஒவ்வொரு தெருக்களுக்காகவும், ஒவ்வொரு வீடுகளுக்காகவும், ஒவ்வொரு அடிகளுக்காகவும் உயிரைக் கொடுத்து போராடினர். சென் பிட்டர் பேர்க் என அழைப்பட்ட லெனின்  கிராட்டில் மட்டும் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த மொத்த மேல் நாட்டு படைகளை விட இரு மடங்கு மக்கள் போரில் உயிரிழந்தனர். அதே போல் ஸ்ராலின் கிராட்டில் மட்டும் 20 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.

இக்கொடிய ஆக்கிரமிப்பு போரில் இரணடு கோடி பதினைந்து இலட்சம் சோவியத் மக்கள் உயிரிழந்தனர். இது இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற உயிரிழப்புக்களில் அரைவாசியாகும். எனினும் 1945 இல் ஜேர்மனியின் ஆக்கிரமிப்பு முறியடிக்கப்பட்டது. ஜேர்மன் படையை விரட்டிச் சென்ற சோவியத் செஞ்சேனை கிழக்கு ஐரோப்பிய நாடுகளை விடுவித்ததுடன் தலைநகர் பேர்லில் வரை முன்னேரி கிழக்கு ஜேர்மனியையும் கைப்பற்றியது.

இந்த மகத்ததான வெற்றியின் 70 ஆவது ஆண்டு விழா 09.05.2015 இல் மொஸ்கோவில் பிரமாண்டமான அளவில் கொண்டாடப்பட்டது. இது சோவியத் மக்கள் கோடிக்கணக்கில் தங்கள் உயிரை கொடையாக வழங்கிப் பெற்ற பெரு வெற்றி என்பதுடன், உலக வரலாற்றை மாற்றியமைத்த சாதனை என்பதையும் மறந்து விட முடியாது.

தமது வீரத்தாலும், நியாத்தாலும் தன்னை மட்டுமின்றி உலக மக்களையும் இன்று பாதுகாத்த சோவியத் யூனியன் பின்பு ஆப்கானிஸ்தானை நோக்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. இப்போது உக்ரேனில் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டது.

பல கோடி மக்களின் உயிர்த்தியாகத்தில் தனது விடுதலையைப் பாதுகாத்த சோவியத் தேசம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க ஆயுத உதவிகள் முதல் சகல உதவிகளையும் செய்தது. அதுமட்டுமின்றி இலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டக்களில் இருந்து தப்ப வைக்க கடும் ஆதரவ வழங்கியது. போராடி விடுதலை பெற்ற தேசம் இன்று தன்னை ஒரு ஆக்கிரமிப்பாளனாக மாற்றிக் கொண்டு விட்டது.

ரஸ்யா இன்று தன் நிறத்தை மாற்றிக் கொண்டு விட்டாலும். சோவியத் தேசத்தின் மக்கள் தங்கள் விடுதலைக்கு வழங்கிய உறுதி, வீரம், தியாகம் அனைத்தும் என்றும் விடுதலையை விரும்பும் மக்களின் வழிகாட்டியாக விளங்கும். லெனின், ஸ்டாலின் ஆகியோரின் நேர்மையான விடுதலை வேட்கையை தற்போதைய ரஸ்யா மறந்து விட்டாலும் அவை என்றும் உலக மக்களின் நெஞ்சில் நிலைத்து விடுதலைக்கு வழிக்காட்டிக் கொண்டிருக்கும்.

– தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*