poorayam-1024x719

கம்பன் விழாவில் மைத்திரி ஐயா பட்டிமன்றம்!

வணக்கம் என்ன மாதிரி எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே

மைத்திரியுகம் எப்பிடியெண்டுதானே கேட்கிறியள்.

இனியென்ன………. எங்கட சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுற கட்சியோட, புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்போறம் எண்டு, செல்வம் அடைக்கலநாதன் அறிக்கைவிட்டிருக்கிறார்.

இவர் சொல்லுற பாக்கக்கக, 60 வருசமா எங்கடையாக்கள் ஏன் இப்பிடி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்யாமல் இருந்தவை எண்டு, உங்களுக்கும் யோசினை வரும்.

மைத்திரி ஆட்சி நல்லாத்தான் போகுது கொஞ்சம் வேகம் காட்டினா போதும் எண்டு யிரிஎப் அறிக்கைவிட்டிருக்குது.

எங்கட மக்களின்ர பிரச்சனைகளுக்கு, தீர்வு எண்டுற விசயத்தில, இன்னும் வேகமாக செய்யலாம் எண்டு நினைக்கிற ஆட்களுக்கு சிலோவா இருக்கு எண்டு, சம்பந்தர் ஐயா திருகோணமலையில் வைச்சு மேதினத்தில சொல்லுறார்.

வடிவா கவனியுங்கோ சம்பந்தர் ஐயா சொல்லுறதை. சிலோவா இருக்கு எண்டு நினைக்கிற ஆட்களுக்குத்தான் பிரச்சினை.

முந்தின அரசாங்கம் ஒண்டும் தரமாட்டம் எண்டுசொல்லிச்சினம். இந்த அரசாங்கம் சேர்ந்து அரசாள்வோம் எண்டு சொல்லுகினம். ஆனா செயற்பாட்டில கேட்டா லீகல் பிரச்சனையள் எண்டு, சுத்துகினம் எண்டு வடக்கு முதல்வர் சொல்லுறார். கேட்க வேண்டிய நேரத்தில, எங்கட உரிமையள் கேட்கவேணும் எண்டும் பாலமடுவில வைச்சு மனிசன் சொல்லுது.

சொன்னதோட நிக்காம யோன் கெரியை சந்திச்சவர்தானே. அப்ப 13 வது திருத்த சட்டம் எண்டுறது சுத்த பம்மாத்து வேலை. உருப்படியான தீர்வை பெற்றுக்கொள்ள, அமெரிக்காவும் இந்தியாவும் எங்களுக்கு ஆதரவு தரவேணும் எண்டு அறிக்கையாக கொடுத்திருக்குது மனிசன்.

அமெரிக்காவும் சிறிலங்காவும் இப்ப சேர்ந்து வேலைசெய்வதால், இனிமேல் புதுசா தமிழர் தரப்பு யோசிக்கவேணும் எண்டு சுரேஸ் சொல்லுறார். அவரும் யோன் கெரியை சந்திச்சவர். அந்த சந்திப்பை முடிச்சுப்போட்டுத்தான் சுரேஸ் இப்பிடி சொல்லுறார்.

இப்பிடியெல்லாம் “மாற்றங்கள்“ எங்கட பக்கம் போகக்க, மைத்திரி ஐயா கம்பன் கழக விழாவில் “பட்டிமன்றம்“ நடத்த போனவராம். பெடியளின்ர காலத்தில கூட, பெரிய இலக்கியம் படைக்கப்போறம் எண்டு, சுப்பர்சொனிக் குண்டுபோட்டாலும் சீதையின்ர சாறி சிவப்போ கறுப்போ எண்டு பட்டிமண்டபம் வைச்ச பண்டிதர்மாரெல்லோ. விடுவினமோ.

நீங்கள் ஆனானப்பட்ட சந்திரிகாவையே கூப்பிட்டு, தந்தை செல்வா நிகழ்வுக்கு கச்சேரி வைக்கலாம் எண்டால், ஏன் நாங்கள் மைத்திரி ஐயாவ கூப்பிடக்கூடாது எண்டு கேட்டவையாம். அவை கேட்கிறதும் ஞாயம் தானே.

எப்பிடியிருக்கு மைத்திரியுகம்?

மைத்திரி ஒரு நல்ல மனுசன் கண்டியளோ. நாங்கள் முதல்ல சந்திரிகா சாறி வித்தனாங்கள் சீப்பு வித்தனாங்கள். நல்லுர் திருவிழாவில அதுகளை வாங்க சரியான கூட்டம்.

அதுக்கு பிறகு ரணில் ஐயா வரக்க கிளீன் அங்கிள் எண்டனாங்கள். ஏன் தெரியுமே அவற்ற கையில ரத்த கறை இருக்கவே இல்லையாம்.

அதிலயும் விசேசம் மைத்திரி ஐயான்ர கை. ஓம் அவர் எலக்சன் கேட்க போகக்க மகிந்த பக்கத்தில வந்து கைகுடுக்க வந்தவராம் என்ன…

ஆனா மைத்திரி கையை தூக்கி ஒரு கும்பிடுதான் போட்டவராம்.

மகிந்தவுக்கு ஏன் கைகொடுக்கல்ல எண்டு அப்பிராணி பேப்பர்காரன் ஒருதன் கேட்டவனாம்.

அவர் சொன்னாராம். மகிந்தவின்ர கை ஊழலால் நிறைஞ்சு போய் பாவங்கள் இருக்கிற கை. அதாலதான் தான் கைகொடுக்கல்ல எண்டு மனுசன் விளங்கப்படுத்தினதாம்.

இப்ப எலக்சன் முடிஞ்சு 100 நாளும் ஓடியிட்டுதுதானே.

இப்ப மைத்திரி சொல்லியிருக்கிறார் கட்சியின்ர நலனுக்காக மகிந்தவோட இணைஞ்சு வேலைசெய்ய றெடியாம்.

கைதான் கொடுக்கேலாது. தோள் கொடுக்கலாம்தானே கண்டியளோ.

அப்ப வரட்டே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*