poorayam-1024x719

அடக்கிவாசிச்சால் இன்னும் அஞ்சுவருசம் எம்பி!!

வணக்கம் எப்பிடிச்சுகம்?

மாற்றம் மாற்றம் எண்டாங்கள். ஆனா இப்ப பேப்பர்கார பெடியளோட, திரும்பவும் தொடங்கிட்டாங்கள் அவங்கட சேட்டையை. இதுகள தட்டிக்கேட்க வேண்டிய, எங்கட அரசியல்வாதிகள் என்ன செய்யினம்?

பிரச்சனை இருக்கக்க, அதைப்பற்றி சொல்லவேண்டிய இடங்களுக்கு சொல்லி, எங்கட உண்மையான பிரச்சனையை, முன்னுக்கு கொண்டுவாறத விட்டிட்டு, இப்பவும் எங்கட ஆக்கள் அடக்கிவாசிக்கினம் போல.

அடக்கி வாசிக்கிற அரசியல் இருக்கல்லே? அதுதான் இப்ப சம்பந்தர்ர சாணக்கிய அரசியலாம். 28 வருசத்திற்கு பிறகு ஒரு இந்தியப்பிரதமர் எங்கட இடத்திற்கு வாறார் எண்டா, அதுவும் யாழ்ப்பாணம் வாறார் எண்டா, எங்கடையாக்கள் என்ன செய்திருக்கவேணும்.

சரி அதைத்தான் செய்யல்ல. அவரை சந்திச்சு கதைச்சாங்கள். எங்கட தமிழர்ர உரிமை பிரச்சனைபற்றி அந்த 45 நிமிசத்தில என்ன சொன்னவை. குசலம் விசாரிக்கவே சந்திப்பு.

சரி அதிலதான் ஒண்டும் கதைக்கல்ல. என்ன கதைச்சது எண்டு, பேப்பர்காரர் கேட்க, என்ன சொன்னவை. எங்கடையாக்கள அடக்கி வாசிக்கட்டாம். இது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, பாரதப்பிரதமரை எங்கட மண்ணில வைச்சு, சந்திச்சு போட்டு, எங்கட சனத்திற்கு சொன்ன கதை.

அப்ப இவங்கள பொறுப்பான அரசியல்வாதிகள் எண்டு சொல்லலாமோ? கேட்க வேண்டிய நேரத்தில கேட்கவேணும், எண்ட அடிப்படை விசயமே இல்லாம கேக்கிறவன கூட அடக்கிவைக்கிற அரசியல் எல்லோ இது.

இண்டைக்கு பொதுபலசேனாவும் சரிதான், யாதிக கெல உறுமயவும் சரிதான், வெளிப்படையான இனவாத கட்சிகள் எண்டது தெரியும். அவங்கள் தமிழரை பற்றியும் தமிழ்பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் பற்றியும் எவ்வளவு கேடுகெட்ட இனவாத கருத்துக்கள சொல்லுறாங்கள்.

ஆனா அதுக்கு மகிந்தவோ, இல்ல மைத்திரியோ, இல்ல ரணிலோ ஏதாவது அவர்களை கண்டிப்பது போல எங்கையெண்டாலும் கதைக்கிறாங்களோ.

ஆனா பாருங்கோ எங்கட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு காரர் என்ன செய்யினம். இனப்படுகொலை எண்டு தீர்மானம் போடவேணும் எண்டு கதைச்சா, அவர் மகிந்தவிட்ட காசு வாங்கிக்கொண்டு, குழப்பிறார் எண்டுறாங்கள்.

உழுத்துப்போன மாகாணசபையில, ஒரு உருப்படியான அதிகாரம் இல்லை எண்டு, மோடிக்கு முன்னால சொன்னா, அவர சிறுபிள்ளைத்தனமானவர் எண்டுறாங்கள்.

காணாமல் போனோருக்காக முன்மாதிரியாக, ஒரு பொம்பிளைப்பிள்ள குரல்கொடுத்தா, உதுதான் புலிவாலுகளின்ர வேலை எண்டுறாங்கள்.

இதுகள சொல்லிறது ஆர்? எங்கட கூட்டமைப்பு. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு.

பனையால விழுந்தவனை மாடேறி மிதிச்சது மாதிரித்தான இதுவும்.

அதுக்குள்ள தனக்கு, எதிர்கட்சித்தலைவர் பதவி வேணும் எண்டு அடம்பிடிக்கிறார் சம்பந்தர் அறிஞ்சனீங்களோ?

சாணக்கிய அரசியல் எண்டு சொல்லிற சம்பந்தருக்கு, ஏனிந்த ஆசையோ தெரியல்ல? நீங்கள் என்ன எல்லாம் மாறியிட்டுது, மாற்றம் எண்டே நினைக்கிறீங்கள்?

உனக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்கும் எண்டா, அதை தடுக்கிறதுக்காகவே அமைச்சு பதவியை விட்டுப்போட்டு, வாறதுக்கு அவங்கள் இப்பவும் ரெடியாத்தான் இருக்கிறாங்கள்.

தமிழனுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்கவிடக்கூடாது, எண்டுதானே அரசமைப்பை மாத்தினவங்கள். இன்னொருக்கா அது நடக்கவிடுவாங்களே?

சம்பந்தருக்கு ஒண்டு விளங்கவேணும். எங்கட மண்ணில, எங்கட தேசத்தில, எங்களுக்கான ஆட்சி. அதுக்கான உரிமைக்கான வேலையளை செய்யிறதை விட்டிட்டு, எதிர்கட்சி தலைவர் ஆகப்போறன் எண்டு, கேட்டு கேட்டு, அவங்கள ஏனப்பா உசுப்பேத்திறாய்?

சம்பந்தர் ஒரு பக்கம் இங்கால சுமந்திரன்.

வெளிநாட்டுக்கூட்டங்களுக்கு இப்பதானே சுமந்திரன் போயிட்டுவந்தவர். அங்கையாரோ கேட்டவங்களாம். நீங்கள் சொல்லிறது எல்லாம் சரி. அனந்தி மாதிரி உங்கள்ள யாருக்கும் வோட்டு விழுந்திருக்கும் எண்டு நினைக்கிறிங்களோ எண்டு.

அந்தக்கடுப்போட குடத்தனை வத்திராயன் எண்டு மாட்டுவண்டில் தேடித்திரியிறாராம் சுமந்திரன்.

மாட்டுவண்டில் என்னத்திற்கோ?

இன்னொரு ஓட்டம் போறதுக்குத்தான். அதுவும் தலைப்பாகை கட்டிக்கொண்டு. விளங்குதே.

சரி சரி நான் வாறன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*