poorayam-1024x719

மிலேச்சத்தனமான யுத்தமும் பீல்ட் மார்சல் பட்டமும்!!

வணக்கம்

என்ன எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே. நாட்டுநடப்பு எப்படி?

கனடாவுக்கு போய் அப்பிடியே அவுஸ்திரேலியாவுக்கும் சுமந்திரன் போனவர்தானே. அங்க தனித்தனியாய் அழைப்பிதழ் அனுப்பி கூட்டத்துக்கு வரச்சொன்னவயாம். ஒரு இருபது சனம் சுமந்திரன் என்ன சொன்னவர் எண்டு கேக்க போனதாம்.

இண்டைக்கு மேற்கு வல்லாதிக்க நாடுகளோட தமிழர் தரப்பு பிரச்சனைகளை கதைக்கிற ஒரேஆள் சுமந்திரன் எண்டு ஒரு இணையம் விருது கொடுத்திருக்கு.

குடுக்கத்தானே வேணும். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் யுலியா விசப் எங்கடையாக்கள பெரிசா சந்திக்கமாட்டாவாம். ஆனா பாருங்கோவன் யிரிஎப் சுரேந்திரனையும் ரிஎன்ஏ சுமந்திரனையும் இஞ்ச வாங்கோ உங்களோட சந்திச்சு கதைக்கவேணும் எண்டு நேரடியாக அழைப்பு விடுத்தவவாம் எல்லே.

அங்க இருக்கிற ஆட்கள விட்டுப்போட்டு நீங்கள் இரண்டுபேரும் வாங்கோ சந்திக்கவேணும் எண்டா அதின்ர அர்த்தம் என்ன? ஒண்டில் எங்களை நேரடியாக வரச்சொன்னவ எண்டு சொன்ன சுமந்திரன் றீல் விடவேணும் அல்லது எல்லாரும் சேர்ந்து றீல் விட பிளான் பண்ணவேணும். நான் சொல்லிறது சரிதானே.

இந்த முறை சிறிலங்கா சுதந்திர தின விழாவில மைத்திரி சொன்னவராம் ”இது ஒரு மிலேச்சத்தனமான யுத்தம் எண்டு”. இப்பிடி ஒரு சிங்கள அரச தலைவரும் இவ்வளவு நாளும் சொல்லவில்லை. ஆனா எங்கட மைத்திரி ஐயா தான் சொன்னவர் எண்டு கூட்டத்தில சுரேந்திரன் சொல்லி புல்லரிச்சுப்போனாராம்.

ஓமோம் அந்த மிலேச்சத்தனமான யுத்தத்தை வென்ற சரத் பொன்சேகாவுக்கோ பீல்ட் மார்சல் பட்டம் கொடுத்தவ எண்டு கேட்கவெண்டு ஒரு பெடியன் எழும்பினவனாம். இவங்கள் இரண்டு பேரிட்டயும் உருப்படியான பதிலை கேட்கஏலாது எண்டு இருந்திட்டானாம்.

சுமந்திரன் ஒரு நல்ல விசயம் சொன்னவர். அதுதான் எங்கட ஆட்களுக்கு நல்லா பிடிச்சிருக்கு. உங்களுக்கு ஏதும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையள் இருந்தால் சொல்லுங்கோ. எனக்கு இப்ப நல்ல டீலிங் இருக்கு முடிச்சுத்தரலாம் எண்டு சொன்னவராம். அந்த டீலிங் எனக்கும் பிடிச்சிருக்கு.

அதோட இன்னொரு விசயத்தையும் சுமந்திரன் சொன்னவராம். இண்டைக்கு யாதிக கெல உறுயமவை மைத்திரியோட வைச்சிருக்கிறது சம்பந்தர்ர சாணக்கியமாம். அவையள வெளியில விட்டா எதிரா கதைப்பாங்கள் அதால அவையளையும் உள்ளுக்க வைச்சுக்கொண்டிருக்கிறம். அதால கெல உறுமய இருந்தால் எங்களுக்குத்தான் கூடாது எண்டு விசமப்பிரச்சாரங்கள் செய்யவேண்டாம் எண்டு சொன்னவராம்.

என்னதான் இருந்தாலும் சட்டாம்பி சுமந்திரன் சட்டாம்பிதான் கண்டியளோ. இண்டைக்கு இல்லாட்டியும் நாளைக்கு அவங்கள் வெளியில போவாங்கள். அப்ப இந்த சாணக்கியதம்பிமார் என்ன சொல்லுவினம்? இதுகள கேள்விகேட்க அதுக்கு அவ இன்னொரு பதில் சொல்லுவினம். சுமந்தரன் எண்டா சும்மாவா பின்ன?

இன்னொரு விசயம் கேள்விப்பட்டனீங்களே. சம்பூர் அனல்மின்நிலையம் சம்பந்தமாகவும் சம் பூர் மீள்குடியேற்ற பிரச்சனை சம்பந்தமாகவும் சனம் சரியான கோபத்தில இருக்கு. இதில இந்தியா அனல் மின்நிலையம் கட்டவேணும் எண்டும் இல்லாட்டி சீனாக்காரன் கட்டிப்போடுவான் எண்டும் சம்பந்தர் கடுமையாக சொல்லியிருக்கிறார்.

இந்த விசயத்தில சம்பந்தரில கடும்கோபத்தில சனம் இருக்கிது. ஆனா இந்தியாவுக்கு நிபந்தனையற்ற வால்பிடிப்பு விசயத்தில சம்பந்தர் கடும் ஆர்வத்தில இருக்கிறாராம். வாற ஏப்பிரல் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் சனத்தை மீளவும் குடியேற்ற சனத்தை விடப்போறதா அரசாங்கம் அறிவிச்சதல்லோ.

ஆனா பல கேள்விக்குறியளோட இருக்கிற சனத்திற்கு பதில் என்ன? பார்ப்பம் பார்ப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*