poorayam-1024x719

புலிகளுக்காக கதைப்பதற்கு வெட்கப்படுகிறாராம் சம்பந்தன்!?

வணக்கம் பாருங்கோ எப்பிடி இருக்கிறியள்?

எங்கட நாட்டில பிரச்சினை இல்லாத நாளில்லை எண்டது போல நாளுக்கு நாள் ஏதோ ஒரு பிரச்சினை இருந்துகொண்டு தான் இருக்குது பாருங்கோ, என்ன இருந்தாலும் தங்கட எசமானர்கள் சிங்களத் தலைவர்கள் எண்டு அவையின்ர வாலப்பிடிச்ச முஸ்லிம் தலைவர் மார் தங்கட தலையில கையை வைச்சுக்கொண்டு யோசிக்கிற அளவுக்கு நிலைமை மாறியிருக்குது.. அத நினைக்க சந்தோசப்படவும் முடியல்ல வேதனைப் படவும் முடியல்ல ஏன் எண்டால் பாருங்கோ தலையிடி காய்ச்சல் தனக்குத் தனக்கு வந்தால் தான் தெரியும் எண்டு தெரியாமலேயே எங்கடை ஆக்கள் அந்த நாளில சொன்னவை.

இதுக்கிடையில எங்கட கூட்டமைப்புக்கார ஐயாக்களின்ர அட்டகாசமும் ஓயாமல் நடந்து கொண்டே இருக்குது. எங்கட சம்பந்தன் ஐயா…, தான் முஸ்லிம் தலைவர்களை மிஞ்சின ஆள் எண்டு காட்டுறதுக்காக நடக்க ஏலாத நேரத்திலயும் தலைகீழா நிக்கிறதுக்கும் அந்த மனிசன் யோசிக்காது பாருங்கோ.

சர்வதேச விசாரணைக்காக சர்வதேசம் வரவேணும், வந்து பாருங்கோ எங்கட சனம் எவளவு கயிற்றப்படுகுது எண்டு கூட்டமைப்புக்காரர் அடிக்கடி அறிக்கை விட்டதும், மேடையளில தடக்குப்பட்டதையும் ஒருத்தருக்கும் மறந்திருக்கமாட்டீங்கள் தானே?

ஓம் பாருங்கோ, சர்வதேச விசாரணைக்குழுவை இலங்கைக்குள்ள அனுமதிக்கக்கூடாது எண்ட விவாதம் நடத்தி அத வாக்கெடுப்புக்கு விடுற ஏற்பாட்டில அரசாங்கம் இறங்கி அதில வெற்றியும் கண்டதெல்லே?, அங்க தான் பாருங்கோ எங்கட சம்பந்தன் ஐயாவும் தன்ர வியுவாயத்தக் காட்ட அந்தரப்பட்டிருக்கிறார்.

விசாரணைக்குழு தொடர்பில பாராளுமன்றத்தில நடந்த விவாதத்துக்கு முன்னம், கூட்டமைப்பு எம்பிக்கள் சந்திப்பு ஒண்ட கொழும்பில நடத்தியிருந்தவை. அந்தச் சந்திப்பில சம்பந்தன் ஐயா கலந்து கொண்டு கருத்துச் சொன்னவராம். அந்தச் சந்திப்பில அவரின்ர வலக்கை கலந்துகொள்ளேல்லயாம். அது ஆர் எண்டு தெரியுமே? அவர் தான் பாருங்கோ தேசியப்பட்டியல் காரன்.

அந்தச் சந்திப்பில கலந்துகொண்ட சம்பந்தன் ஐயா விசாரணைக்குழு தொடர்பான விவாதத்தில பங்கெடுக்கவேண்டாம் எண்டும் ஒரு அறிக்கையை மட்டும் வாசிச்சுப் போட்டு வாக்கெடுப்பிலயும் பங்கெடுக்காமல் விடுவம் எண்டு கேட்டிருக்கிறாராம்? அப்ப அங்க இருந்த எம்பிக்கள் சில பேர் ஏன் ஐயா? நாங்கள் தானே சர்வதேச விசாரணை வேணும் எண்டு கேட்டனாங்கள், அப்படி இருக்க ஏன் புறக்கணிக்கவேணும், நாங்கள் பங்குகொண்டு எதிராக வாக்களிக்கிறது தானே பொருத்தம் எண்டு கேட்டிருக்கினம்.

இதுக்கு அந்தப் பெருங்குடிமகன் என்ன சொன்னாராம் தெரியுமே,

நாங்கள் அதில பங்கெடுக்கிறதில பிரச்சினையில்ல. ஆனால் அரசாங்கம் விடுதலைப்புலியளப் பற்றித் தான் கதைக்கும், நாங்கள் அந்த இடத்தில புலியள் செய்தது எல்லாத்தையும் நியாயப்படுத்திக்கொண்டு எங்கட நேரத்த அநியாயமா போக்கவேண்டாம் எண்டாராம். அப்ப பாருங்கோவன், அந்த மனிசன் என்ன நிலைப்பாட்டில இப்பவும் இருக்கிறார் எண்டத.

ஆனால் பாருங்கோ கூட்டமைப்பின்ர மற்ற எம்பிமார் எல்லாரும் ஒற்றுமையா நிண்டு, அந்த விவாதத்தில பங்கெடுக்கவேணும், அரசாங்கம் கொண்டுவாற தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேணும் எண்டு அடம்பிடிச்சபடியால் தானாம் அவர் வாக்கெடுப்புக்கு ஓம் எண்டு போனவர். ஆனால் பாருங்கோ அவரின்ர வலக்கை அண்டைக்கு அங்க இல்லாத தால சம்பந்தன் ஐயா அடிக்கடி அவர் இருக்கிற பக்கம் பாத்துப் பாத்து பெரு மூச்சுவிட்டவராம் எண்டு மற்ற எம்பிமார் ஐயா பாவம் எண்டு கவலைப்பட்டவையாம்.

ஆனால் பாருங்கோ, ஒரு தீர்மானம் கொண்டுவரேக்க அதை ஆதரித்து வாக்களிக்கிறதும், வாக்களிக்காமல் ஒதுங்கிறதும் ஒரே விதமான முடிவைத்தான் தரும். உண்மை தான் பாருங்கோ, ஆளுங்கட்சி அந்தத் தீர்மானத்தக் கொண்டுவந்து ஆதரவா வாக்களிச்சிருந்தாலும் எதிர்க்கட்சியள் புறக்கணிக்கிறம் எண்டு சொல்லிக்கொண்டு அந்தத் தீர்மானத்த ஆதரிச்சிருக்கினம் பாருங்கோ.. அந்த வரிசையில தானும் தங்கட வியுவாயத்தைக் காட்டி இலங்கையில ஒட்டுமொத்த கட்சிகளும் விசாரணைக்குழு வருகையை எதிர்க்கினம் எண்டு காட்டலாம் எண்டு சம்பந்தன் ஐயா கயிற்றப்பட்டு கடைசில அது வீணாய்ப் போயிட்டுது எண்டது அந்த மனிசனுக்கு எவளவு சங்கடமாய் இருந்திருக்கும் எண்டது ஒருதருக்கும் புரியாது பாருங்கோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*