kusumbu

தெற்கில இருந்து இறக்குமதி செய்த முதல் அமைச்சர் ஐயான்ர வேலையப் பாத்தியளே? – (புளியடி பூராயம்)

வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள்,

நாட்டில நல்லது நடந்தாலும் குற்றம், கெட்டது நடந்தாலும் குற்றம் எண்டு நீங்கள் நினைக்கிற மாதிரி உங்களுக்கு சில கதை சொல்லலாம் எண்டு நினைக்கிறம் பாருங்கோ.

என்னண்டால் பாருங்கோ உந்தப் பேஸ்புக் கோதாரிய பாக்க வெளிக்கிட்டு மனிசனுக்கு இருக்கவும் நேரமில்ல நடக்கவும் நேரமில்லப் பாருங்கோ.. அதில புதிசு புதிசா புதினங்கள் எழுதித்தள்ளுறாங்கள் பெடியள்.

இண்டைக்கு ஒரு புதினம் கிடந்தாப்போல உங்களுக்கு அதைச் சொல்லாமல் விட முடியேல்ல பாருங்கோ.. என்னண்டு கேக்கிறியளே?

“யுத்ததில் உயிரிழந்த உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் காணமுடியாத பல வடக்கு மாகாண சபைக் காரர்களை இன்று ரில்கோ கோட்டலில் நடைபெற்ற இந்திய துணை தூதுவர் வி.மகாலிங்கத்தின் பிரியாவிடை நிகழ்வில் காணமுடிந்தது. அப்ப பின்ன பாருங்ககோவன்”

இதுக்கு இன்னொரு பெடி தன்ர கருத்த எழுதியிருந்தது பாருங்கோ.. அது என்ன எண்டு கேக்கிறியளோ?

“முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு போனால் சிலவேளை புனர்வாழ்வு கிடைக்கலாம் பிரியாவிடைக்கு போனால் சிலவேளை கார் கிடைக்கலாம் என்று நினைச்சு அங்கே வராமல் இங்க போச்சினமோ தெரியாது?”

இதுதான் அது.. உண்மை தான் பாருங்கோ.. எங்கட முதல்.. அமைச்சர் இருக்கிறேரல்ல.. அவர நினைக்க ஒரு உண்மைச் சம்பவம் தான் பாருங்கோ நினைவுக்கு வருது..

நாய் இருக்கெல்லே நாய் ஓம் பாருங்கோ நாய் தான்… அந்த நாய் என்ன செய்யுமெண்டால்.. ஆராவது கல்லெறிஞ்சு அதின்ர தலையில பட்டாலும் உடன காலத்தான் பாருங்கோ தூக்கும் என்ன? அப்பிடித்தான் பாருங்கோ எங்கட விக்கினங்களத் தீர்க்க வந்திருக்கிற ஐயாவின்ர வேலையும் என்ன? ஓம் பாருங்கோ எதாவது வில்லங்கமான சம்பவம் எதாவது நடத்திப்போட்டார் எண்டால் உடன அவருக்கு காட்டில பிரச்சினை, கழுத்தில பிரச்சினை எண்டு ஆயுப்பத்திரியில படுத்திடுவார்.

ஒருகாலத்தில எங்கட தமிழ்நாட்டு நாடகக் கலைஞர் ஐயாவை இந்த ஐயா விஞ்சினாலும் விஞ்சியிடுவார் போலத்தான் தெரியுது பாருங்கோ.

இதுக்கிடையில எங்கட பெரிய மனிசனுக்கு இருக்கமுடியாதாம் பாருங்கோ.. அவரால கன நேரம் ஒரு இடத்தில இருக்க முடியாதாம் பாருங்கோ.. அதால தான் அந்த மனிசன் – வலுநேர்மையான மனுசன் முள்ளிவாய்க்கால்ல செத்த சனத்துக்கு விளக்கேத்தவோ.. மிஞ்சிப் போனால் கற்புரம் கொழுத்தி எல்லாரும் வட்டமாய் நிண்டு படம் எடுத்தமாதிரி எடுக்கவோ போகேல்ல எண்டு நினைக்க சரியான கவலையாத்தான்  இருந்தது..

என்ன இருந்தாலும் எங்கட சனத்த நிர்வகிக்கிறேக்கு வடக்கில வேற ஆக்களே இல்ல எண்டு தெற்கில இருந்து இறக்குமதி செய்த மனிசன் எல்லே? அதவிட போராட்டத்துக்காக தங்கட உசிருகளை தியாகங்செய்த நாற்பதனாயிரம் பேரும் மடையர்கள் எண்டு எங்கட ஐயா நினைச்சிருக்கிறார் பாருங்கோ.. அதவிட தங்கட உயிர்களை இளம் வயசில மண்ணுக்காகக் குடுத்த அவையும் எங்கட சனமும் தெய்வமா நினைச்ச தலைவர் ஒரு சர்வாதிகாரி எண்டு சொல்லுற அளவுக்கு முதல் அமைச்சர் எந்தப்பெரிய மனிசன் எண்டுறத எல்லாரும் விளங்கிக் கொள்ளவேணும் பாருங்கோ.

ஓம் பாருங்கோ என்ன இருந்தாலும் நீதியைக் கண்டுபிடிச்ச மனிசனெல்லே!? நாலு விசயம் படிச்ச மனிசன் எல்லே? பெரீய மனிசரப்பற்றி கூடக் குறையக் கதைக்கிறதும் அவளவுக்கு நல்லதில்ல பாருங்கோ.

எதோ சொல்லவந்து ஆட்டுக்க மாட்ட விட்ட கதைபோல வேற எங்கயோ வந்திட்டன்.. பேஸ்புக்கில அந்தப்பெடியன் எழுதினதப் பற்றித்தான சொல்லிக்கொண்டிருந்தனான்.

ஓம் பாருங்கோ… முள்ளிவாய்க்கால்ல செத்த சனத்துக்காக ஒரு சின்ன தீபம் ஏத்திறதுக்கு வக்கில்லாத ஒருதர் தான் பாருங்கோ.. வடக்குக்கு நிர்வாகம் செய்யத்தான் வந்திருக்கிறன் எண்டு அடிக்கடி சொல்லுறவர் அந்த மனிசன் தான் பாருங்கோ.. எங்கட இனத்த அழச்சு கட்டுறதுக்கு துணியும் இல்லாமல் நடுத்தெருவுக்கு வாறதுக்கு காரணமாயிருந்த பக்கத்து நாட்டில இருந்து இண்டைக்கு பெட்டி கட்டியிருக்கிற காங்கிரஸ் காரரின்ர நம்பிக்கைக்கு பாத்திரமான மகாலிங்கம் ஐயாவோட சேந்து சாப்பிடப் போயிருக்கிறார். ஆனால் பாருங்கோ.. அங்க போய் அவர் இருக்கேக்க எப்பிடி இருந்திருப்பார் எண்டதுதான் பாருங்கோ சரியான யோசினையா கிடக்குது.. ஏன் எண்டு கேக்கிறியளே? அவருக்கு இருக்கிறது தான் பிரச்சினை எண்டு சொன்னவையெல்லே?

என்ன இருந்தாலும் பெரிய மனிசர் பெரிய மனிசர் தான் பாருங்கோ.. செத்த சனம் செத்துப் போகட்டன்.. அதுக்கென்ன.. அவையின்ர தலைவிதி அவை செத்துப்போச்சினம்.. அதுக்கு என்ன செய்யிறது..! எங்களுக்கென்ன.. பாதுகாப்புக்கு பொலிஸ்காரர் இருக்கினம். ஆரும் அப்பாவியள மிரட்டுறதுக்கு வெருட்டிதுக்கு மன்மதக்குஞ்சுகளும் அவையின்ர வாலுகளும் இருக்கினம்..

ஒரு ஐம்பதாயிரம் உயிர் பெரிசே?.. என்ன இருந்தாலும் அவர் முதல் அமைச்சரெல்லே? அவரைப் பற்றிக் கதைக்கிறது அவளவு நல்லதில்லத்தான் பாருங்கோ.. ஆனால் பாருங்கோ அவருக்கும் அவரின்ர சில வியுவாசியளுக்கும் ஒரு செய்திய மட்டும் சொல்லலாம் பாருங்கோ.. அது என்னண்டு கேக்கிறியளே?

மே 18 இல விடுதலைப்புலிகளுக்கு நினைவு வணக்கம் நடத்திற நடைமுறை ஒரு இடமும் இல்லப்பாருங்கோ.. மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திறது நவம்பர் 27ஆம் திகதி எண்டது வரலாறு தெரிஞ்ச அரசியல் செய்ய வந்திருக்கிற பெருந் தலையளுக்கும் தெரியாது எண்டதுதான் பாருங்கோ சரியான கவலை.

உதுகளக் கதைக்க கதைக்க பிறசர் தான் கூடுது பாருங்கோ.. பிறகு சந்திப்பம்.. என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*