kusumbu

“பூனை பால்குடிக்கிற கதை கேள்விப்பட்டனீங்களே?” – புளியடி பூராயம்!

வணக்கம் பாருங்கோ,
சரியான வேலை பாருங்கோ, கனகாலமா ஊர்ப்பக்கம் வரமுடியேல்ல பாருங்கோ.. இப்ப கொஞ்சம் ஓய்வா இருக்கு அதால தான் பாருங்கோ கொஞ்சம் எண்டாலும் எட்டிப்பார்க்க முடிஞ்சுது?
ஓம் பாருங்கோ, புதினங்கள் கொஞ்சம் நஞ்சமில்ல பாருங்கோ நிறைய புதினங்கள் கொட்டிக்கிடக்கு பாருங்கோ,
எங்கட நாட்டவிட்டு வெளிக்கிட்ட கனபேர் இப்ப எங்களுக்கு தலைமை தாங்கிற ஆக்களாய் மாறியிருக்கினம் பாருங்கோ.
அது சரி பாருங்கோ, எங்கட நாட்டக் கடந்து வந்த சனம் கொஞ்சப் பேர் ஐரோப்பிய நாடு ஒண்டின்ர பிரதிநிதியளா இருக்கினம் பாருங்கோ, அவையள்ள இரண்டு பேரை எங்கட சனத்தின்ர பிரநிதியளா நியமிச்சிருக்கினம் பாருங்கோ. ஓம் பாருங்கோ அவையள் இரண்டு  பேர் தலை கால் புரியாத அளவுக்கு ஆடிப்பாடி  உற்சகாமாய் இருந்ததை புகைப்பட ஆதாரங்களோட எழுதிப்போட்டினம் பாருங்கோ.
அவையள் ரண்டு பேரும் புருஷனும் பொஞ்சாதியும் எண்டு அவையள் தங்கட பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தான் படம் எடுத்தவை எண்டும் சில பேர்  அவைக்கு சாதகமாய் எழுதியிருக்கினம் பாருங்கோ. அவையள் புருசன் பொஞ்சாதியா இருந்தால் என்ன பேரன் பேத்தியா இருந்தால் கூட பறவாயில்ல பாருங்கோ, அவையள் கையில தண்ணி குடிக்கிற கிளாசுகளோட தான் பாருங்கோ தலை, கால் தெரியாமல் நிண்டவை எண்டதை அந்தப் போட்டோக்கள் நல்ல தெளிவா காட்டுது பாருங்கோ. நாங்கள் சமூகத்துக்கோ, தேசத்துக்கு கருத்துச் சொல்லத் தகுதியான ஆக்களோ, நாங்கள் சொல்லுற கருத்துக்களை மற்றவையும் கேப்பினமோ எண்டத நாங்கள் ஒருக்கால் எண்டாலும் நினைச்சுப் பாக்கிறது தானே பாருங்கோ உலகத்துக்கு நல்லது என்ன?
அது சரி இன்னொரு பகிடி கேள்விப்பட்டனீங்களே?
அவுஸ்திரேலியாவில பண்ணையாரும் பத்மினியும் எண்ட ஒரு படம் ஓடினவையப் பற்றி பரவலா கதை அடிபட்டதெல்லே… அந்தப் படம் ஓடினவை தாங்கள் திருந்தியிட்டினம் போல காட்டுறதுக்கு கடுமையா கயிற்றப்பட்டிருக்கினம் பாருங்கோ.. ஓம் பாருங்கோ பண்ணையாரும் பத்மினியும் வெளியிட்டவை.. இப்ப ‘நிமிர்ந்து நில்’ பார்க்க ஓடி வாருங்கோ.. ஓடி வாருங்கோ எண்டு ஓடித்திரியினமமாம் பாருங்கோ.. என்ன பகிடி எண்டால் நிமிர்ந்து நில் படம் ஓடுற தங்களுக்கு கலாசாரத்தோட சம்பந்தப்பட்ட ஒரு பெயர் வைச்சிருக்கினமாம் எண்டால் பாருங்கோவன்.. பூனை இருக்குத் தானே.. அது பாருங்கோ பால் குடிக்கேக்க கண்ண மூடிக்கொண்டு தானாம் குடிக்கும்.. ஏனெண்டால் கண்ண மூடினால் தான் பால் குடிக்கிறத மற்ற ஆக்கள் காணேல்ல எண்டு அந்தப் பூனை நினைக்குமாம் எண்டு அந்த நாளையில கதை சொல்லுறவை பாருங்கோ. அவையள் தான் பாருங்கோ மற்றாக்களை ஒருங்கிணைக்கப் போகினமாம் எண்டால் பாருங்கோவன்.
ஜெனீவாவில அமெரிக்கா அதைச் செய்யப் போகுது.. இதைச் செய்யப் போகுது எண்டு வாயப் பிளந்து கொண்டு மல்லாக்காய் இருக்கிறத விட்டிட்டு நாங்கள் என்ன செய்யப்போறம் எண்டதைப் பற்றி யோசிக்கோணும் பாருங்கோ.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கோணத்தில ஒவ்வொரு குழுக்களா நிக்கிறதாலயோ.. ஒருத்தரை ஒருதர் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கிறதாலயோ எதுவும் நடக்கப்போறதில்லை பாருங்கோ.. நாங்கள் எவ்வளவு ஒற்றுமையா இருக்கிறமோ? எவ்வளவு அர்ப்பணிப்போட செயற்படுறமோ… அப்ப தான் பாருங்கோ எங்களுக்காக செத்தவையின்ர கனவுகள் மெய்ப்படும் பாருங்கோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*