bookebaylow (1)

நீந்திக்கடந்த நெருப்பாறு:தலைவரின் வீரமும் கருணாக்களின் துரோகமும்!-கார்ட்டூனிஸ்ட் பாலா

கடந்த இரு நாட்களாக என்னை கட்டிப்போட்டிருக்கும் புத்தகம் நீந்திக்கடந்த நெருப்பாறு.

இதை எழுதியவர் என்று அரவிந்தகுமாரன் என்பவரின் பெயர் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அவர் யார் என்று எவருக்கும் தெரியாது. அவர் போராளிகளுடன் சுற்றித்திரிந்த ஒரு படைப்பாளியாக இருக்கலாம்.. அல்லது களப்போராளியாக இருக்கலாம். தமிழ் லீடர் ( www.tamilleader.com ) குழுமம் இந்நாவலை வெளியிட்டிருக்கிறது.

ஒரு இனத்தின் வீரம் செறிந்த போராட்டம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல களத்திலிருந்து படைப்புகள் வந்தாக வேண்டும்.

ஒரு ஒற்றைக்குழல் துப்பாக்கியில் தொடங்கிய பிரபாகரனின் இனவிடுதலைப்போர் முப்படைகளை கட்டி அமைத்த வீரம், தூரோக கருணாக்களால் வீழ்த்தப்பட்டிருக்கும் வரலாற்றை ஆவணப்படுத்தும் பதிவுகளில் இதுவும் ஒன்று.

ஒவ்வொரு களத்திலும் போராளிகள் புத்திசாலித்தனமாகவும், வீரத்துடனும் போரிட்டார்கள் என்பதை சிவம், ரூபா என்ற இரு போராளிகளை முக்கிய பாத்திரமாக கொண்டு பயணப்படுகிறது இந்நாவல்.

கூடவே சிவத்தின் குடும்பத்தின் ஊடாக இராணுவத்தால் மக்கள் பட்ட இன்னல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. படிக்க படிக்க நாமே களத்திலிருப்பது போலிருக்கிறது. இதன் இரண்டாம் பாகமும் விரைவில் வரவிருக்கிறது. ( புத்தக வடிவமைப்பை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.)

தமிழக தமிழர்களுக்கு போர்க்கள நிலவரங்கள் என்னமோ சினிமாப்போல் இங்குள்ள அரசியல் வியாபாரிகளால் படம் காட்டப்பட்டிருக்கிறது. அதனால் தான் தலைவர் வருவார்.. ஐந்தாம் கட்டப்போர் வெடிக்கும் என்று வெற்றுச்சவடால்களை வீசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை களத்திலிருந்து வரும் இதுபோன்ற படைப்புகளை படிப்பதன் மூலம் உணரலாம்.

30 ஆண்டுகளுக்குமேலான ஒரு விடுதலைப்போர் முள்ளிவாய்க்காலில் முடியவில்லை..

எந்த விடுதலைப்போரும் இலக்கை அடையும் முன் தோற்றதாக வரலாறு இல்லை.. ஈழமும் வெல்லும்.. களம் தான் வேறு..

– கார்ட்டூனிஸ்ட் பாலா
17-1-14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*