kusumbu

‘நீங்கள் வியாபாரியள் தானே?’ – யாழ்ப்பாணத்துப் பேப்பர் கார எம்பிக்கு நடந்த கதி!?

வணக்கம் பாருங்கோ கன காலமாய்ப் போச்சுது எப்பிடி இருக்கிறீங்கள்?
நிறையப் புதினங்கள் இருந்தாலும் அடிக்கடி கதைக்கத்தான் மனிசருக்கு நேரமில்லை பாருங்கோ.. இருந்தாலும் கொஞ்ச நாளா நடக்கிற விக்கினங்களப் பற்றிக் கதைக்காமல் இருக்க முடியேல்ல பாருங்கோ..
இப்ப கொஞ்ச நாளா இரணமடுப் பிரச்சினை தான் அரசியல் அரங்கில பெரிய பிரச்சினை மாதிரி ஓடுது பாருங்கோ… உண்மையில் நான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால் எண்டு நில்லாமல் உண்மையான பிரச்சினை என்னண்டு பாத்தால் எல்லாத்துக்கும் நல்ல முடிவு காணலாம் பாருங்கோ.. ஆனால் பாருங்கோ.. கோதாரி விழுந்த மாகாண சபை எண்டைக்கு வந்துதோ அண்டைக்கு பிடிச்சுது ஏழரை.. இப்ப பாருங்கோ.. கூட்டமைப்பில எம்பி மாருக்கு அதிகாரம் கூடவோ, மாகாண சபையில இருக்கிறவைக்கு அதிகாரம் கூடவோ எண்டதுதான் பிரச்சினையாம் அவைக்கிடையில…
இரணைமடு விசயத்தை வைச்சுக்கொண்டு மாகாணசபைக்காரரை தங்கட சொல்லுக்கேக்கிற நிலைக்கு கொண்டுவரவேணுமெண்டு எம்பிமார் நினைக்கினம் எண்டு ஒரு கதை அடிபடுது பாருங்கோ.. ஆனால் பாருங்கோ ‘மயிர விட்டான் சிங்கன்’ கதையில வாறது போல..
C.M ஐயா ஓம் பாருங்கோ அவர் தான் தன்னை சிறையில வைச்சிருக்கினம் எண்டு கவலைப்பட்ட விக்கினேசுவரன் ஐயா இருக்கிறார்எல்லே.. அவர் சொன்ன சொல்லக் காப்பாத்தவேணும் எண்டு பிடிவாதமாய் மாகாண சபையிலயும் கொஞ்சப் பேர் வில்லங்கப்படுறதாய் சொல்லுகினம்..
என்ன இருந்தாலும் எங்கட அரசாங்கம் நினைக்கிறதை செய்துமுடிக்கவேணும் எண்டு எங்கட தலைவர் மார் அக்கறையா இருக்கிறதால எல்லாம் கந்தறுந்து தற்கொலை தான் செய்யவேண்டி வரப்போகுது எண்டு வயல் விதைச்சு கயிற்றப்பட்டு உழைக்கிறவை அங்கலாய்கினமாம்..
ஆனால் பாருங்கோ இதுக்கிடையில இன்னொரு புதினம் கேள்விப்பட்டியளோ தெரியேல்ல..
உண்மையள் ஒரு நாளும் உறங்காது எண்டு தெரியாமலேயே சொன்னவை.. எண்டது போல.. சில சம்பவங்களும் நடக்கத்தான் செய்யுது பாருங்கோ.. என்னண்டு கேக்கிறியளே… எங்கட யாழ்ப்பாணத்துப் பேப்பர் கார எம்பிக்கு நடந்த அவலத்தப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பியளோ தெரியயேல்ல.தமிழ்லீடரில புளியடிப்பூராயத்தில கட்டாயம் இதைச் சொல்லவேணும் எண்டு ஒரு பெரிய மனிசன் எங்கட பொன்னருக்கு மெயில் பண்ணியிருக்கிறார் பாருங்கோ… அதில என்ன இருக்கெண்டு மட்டும் சொல்லலாம்.. ஆனால் ஆர் அந்த மனிசன் எண்டு மட்டும் கேக்கப்படாது கண்டியளோ..
இப்ப சில நாளைக்கு முதல்ல கொழும்பில ஒரு கூட்டம் நடந்ததாம்.. அது எங்கட எம்பிமாரின்ர கூட்டம் தான் பாருங்கோ.. அந்தக் கூட்டத்தில எங்கட பேப்பர் கார எம்பியைப் பாத்து, நீங்கள் வியாபாரியள் எண்டத காட்டிப்போட்டியள் எண்டு தலைவர் சொல்லிப்போட்டாராம்..ஓம் பாருங்கோ தேசியத் தலைவர் எண்டுதானே பேப்பர் கார எம்பி கூட்டமைப்பின்ரை தலைவர் ஐயாவை சொல்லுறவர்.. ஆனால் பாருங்கோ அந்தப் பெரிய மனிசன் பேப்பர் காரத் தம்பிய இல்ல இல்ல எம்பிய கண்டபடி திட்டிப்போட்டாராம்.
வவுனியாவில கூட்டமைப்பின்ர கூட்டம் எண்ட செய்திய முதல்ல போட்டது… பேப்பர் கார எம்பியின்ர பேப்பருகளாம்.. இதப் பாத்த எங்கட தேசியத் தலைவர்(!) இருக்கிறார் தானே… அவர் சீறிப்போட்டாராம் என்ன… ஆரக்கேட்டு அந்தச் செய்தியப் போட்டனீர்.. நீர் எங்கட கட்சியின்ர ஒரு எம்பி.. எப்பிடி பொறுப்பில்லாமல் நடக்க ஏலும்? நீர் ஒரு வியாபாரி எண்டதக் காட்டிப்போட்டீர், எண்டு கண்டபடி திட்டிப்போட்டாராம்.. ஐயா பேசேக்க தாய்கட்சியின்ர செயலாளர் ஐயா பேயாமல் இருப்பரே.. அந்த மனிசனும் பேப்பர் கார எம்பிய கண்டபடி திட்டிப்போட்டாராம்.. இதுக்கிடையில எம்ஜிஆர் பாணியில.. தடக்குப்பட்ட பேப்பர் கார எம்பி.. உடனடியா தன்ர பேப்பரில வேலை செய்யிறவைக்கு போன் எடுத்து… ஆர் தந்த செய்தி எண்டு கேட்டு ஒரு எம்பியையும் காட்டிக்குடுத்திருக்கிறார்.. கிழக்கில இருந்து வந்த அந்த எம்பி…ஓம் பாருங்கோ அவர் தான்… முந்தி அவரும் கிழக்கில பேப்பரில வேலை செய்த மனிசன் தான்.. அவர் பதறியடிச்சு சத்தியமாய் நான் சொல்லேல்ல.. எண்டு அடம்பிடிச்சவராம்..
இதுக்கிடையில பேப்பர் கார எம்பி சொன்னாராம்.. பேப்பரில அந்தச் செய்தியப் போட்டவரை ஆறு மாதத்துக்க நிப்பாட்டப்போறன் எண்டு.. நீர் நிப்பாட்டினால் என்ன விட்டால் என்ன அது உம்மட பிரச்சினை எண்டு தலைவர் திட்டின உடன கடுப்பாயிட்டாராம் பேப்பர் கார எம்பி.. அவர் தாய்க்கட்சியின்ர செயலாளரைப் பாத்து.. உங்கட செய்தி ஒண்டும் இனி மேல் எங்கட பேப்பரில வராது எண்டு சொல்லிப்போட்டு.. பேச்சாளரப் பாத்துச் சொன்னாராம்.. இனி ஐ..சே.. நீர் தாற செய்தி மட்டும் தான் போடுவன் எண்டாராம்..
இதுக்கிடையில.. முந்தி மாகாண சபைத் தேர்தலுக்கு முந்தி அந்தப் பேச்சாளரையும் அவரின்ர கட்சியில இருக்கிற மற்ற எம்பியையும் பாத்தும் இப்பிடித்தான் திட்டினவராம்.. உங்களப் பற்றி கட்டுக்கட்டாய் வைச்சிருக்கிறன்..உங்களப் பற்றி எழுதப்போறன் இருந்து பாருங்கோ எண்டு…
பேப்பர் காரத் தம்பி.. இல்ல இல்ல எம்பி.. கூட்டமைப்பில யாரோடயும் கொழுவுப்பட்டிட்டு உடனடியா தன்ர பேப்பரில வேலை செய்யிற ஆக்களுக்கு போன்பண்ணி அவையின்ர செய்தி வரப்படாது எண்டு கட்டாயமாச் சொல்லுறவராம்.. இப்பிடித்தான் இரணமடு விசயத்தப் பற்றி மேடையில கதைச்ச இணையத்தளக்கார எம்பிக்கும் நடந்திருக்குதாம் பாருங்கோ.. அந்த மனிசன்ர செய்தியும் போடப்படாது எண்டு சொல்லி வைச்சிருக்கிறாராம் எண்டால் பாருங்கோவன்..
என்னண்டால் பாருங்கோ.. ‘ஓடமும் ஒரு நாள் வண்டியில ஏறும்… வண்டியும் ஒரு நாள் ஓடத்தில ஏறும்’ எண்டு தெரியாமலேயே சொன்னவை.. நேரத்துக்கு நேரம் ஒரு கொள்கை வைச்சிருக்காமல்..  பேப்பரில வேலை செய்யிறவையிட்ட ஒரு தெளிவான நிலைப்பாட்டோட பேப்பர செய்யுங்கோ எண்டு சொல்லிப்போட்டு தனக்குரிய வேலையை பாக்கிறது தான் பாருங்கோ ஒரு நல்ல பேப்பர் நடத்திற நிருவாகிக்கு நல்லது… ஐயாக்கள் எந்த நேரம் கழுத்தறுப்பினம் எண்டது ஐயாக்களுக்கே தெரியாது பாருங்கோ..
என்ன இருந்தாலும் அந்த எம்பியப் பாத்து வியாபாரி எண்டு அய்யா சொன்னதத் தான் பாருங்கோ தாங்க ஏலாமல் கிடக்கு.. உண்மையச்  சொல்லத்தான் வேணும்.. அதுக்கு முகத்துக்கு நேரயோ…? ஆ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*