vaiko-speech

‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ தமிழீழ விடுதலைக்கான படைக்கருவி – வைகோ (காணொலி)

இந்த உலகில் வேறெங்கிலும் காணமுடியாத ஒப்பற்ற தமிழீழத் தேசியத் தலைவன் பிரபாகரனின் வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவை நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் பதிவாக்கியிருக்கின்றது. இது வெறும் நாவலாக மட்டும் நின்றுவிடவில்லை. இது ஈழ விடுதலைக்கான படைக்கருவி என்று மறுமலர்ச்சி திராவிடர் கழகப் பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழ்லீடர் இணையக் குழுமத்தின் வெளியீடான, நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல், சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலர் வைகோ அவர்களினால் வெளியிட்டுவைக்கப்பட்டது. தமிழக மக்கள், ஈழ உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், மாணவர்கள் உட்பட்ட நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் தொடர்பில், சிறப்புரையாற்றிய வைகோ, நூல் குறித்தும், அதன் வரலாற்றுப் பதிவு குறித்தும் ஆழமான பதிவை மேற்கொண்டிருந்தார்.

“இது இலக்கியமல்ல. கதையல்ல. புனைவுமல்ல. ஈழ விடுதலைக்கான படைக்கருவி, ஈழப்போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடியதும், முள்ளிக்குளம் தொடக்கம், முள்ளிவாய்க்கால் வரைக்குமான போரின் சாட்சியாகவும் இந்த படைப்பு வெளிவந்திருக்கிறது. போராளிகள் துறவிகளல்ல. அவர்களும் சாதாரணர்கள். மக்களுக்காகவே, மக்களாகவே வாழ்ந்தார்கள். அவர்களுக்காக உயிர்க்கொடையும் தந்தார்கள். அவர்களிடம் அழகிய காதல் இருந்தது. அந்தக் காதலை வேறெங்கிலும் பார்க்கமுடியாது…” நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் தொடர்பில் வைகோ ஆற்றிய நீண்ட உரையின் காணொலித் தொகுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*