nkna-vaiko

தமிழ்லீடரின் ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ சென்னையில் வெளியிட்டார் வைகோ!(படங்கள்)

தமிழ்லீடர் இணையக் குழுமத்தினரின் வெளியீடான அரவிந்த குமாரனின் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கிறது.  

சென்னை, எக்மோர் சென். அன்ரனீஸ் அரங்கில் தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலர் வைகோ கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.

நிகழ்வில் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் செயலர் பொ. மணியரசசன், மே. பதினேழு இயக்கத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி, ம.திமுக . மல்லை சத்தியா, இமயம் தொலைக்காட்சியின் கட்டுப்பாட்டாளர் ஜெபராஜ், மற்றும் தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பு மாணவர்கள், தோழமை மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரோடு ஈழ ஆதவாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வு தொடர்பிலான காணொலி பதிவுகளை இன்று பிற்பகல் தமிழ்லீடர் இணையத்தளத்தில் வாசகர்கள் பார்வையிடலாம்.

நிகழ்வுப் படங்களுக்கு இங்கே சொடுக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*