ts

‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ வெளியீட்டுவிழா- சிட்னி வாழ் மக்களுக்கு தமிழ்லீடர் அழைப்பு!

ஈழவிடுதலைப்போராட்டத்தின் இறுதிக் காலப்பகுதிகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்லீடர் இணையத்தளத்தில் வெளியாகும் “நீந்திக்கடந்த நெருப்பாறு” நாவல் வெளியீட்டு நிகழ்வு நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது.

நிகழ்வினைச் சிறப்பிக்க தமிழகத்திலிருந்து தமிழருவி மணியன் உட்பட்டவர்களும் அவுஸ்திரேயா வந்திருக்கின்றனர். நிகழ்வு தொடர்பில் தமிழ்லீடர் குழுமம் தமிழ் உணர்வாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,அன்பார்ந்த சிட்னிவாழ் தமிழர்களே,

விடுதலை வேட்கையில் கனன்றெழுந்து வீரமும் தியாகமும் சோகமும் சாதனையும் பின்னடைவும் புடை சூழ புயலாக மேலெழுந்த போராட்டத்தின் பதிவுகளுடன் பயணம் செய்ய உங்களை அன்புடனும் உரிமையுடனும் அழைக்கிறோம்.

தாயை நேசிப்பவனே தாய் மண்ணையும் நேசிப்பான்.. தாய்த் தேசத்தின் வரலாற்றுப் பதிவு ஒன்று வெளியிடப்படும் வரலாற்று நிகழ்வில் உங்கள் நீண்ட வாழ்க்கையில் சில மணி நேரங்களை மட்டும் செலவிடுங்கள்..

எதிர்காலத்தில் எங்கள் இனம் தொடர்பிலான வரலாற்றை எடுத்துச் செல்லும் அரும்பெரும் இலக்கியங்களில் ‘நீந்திக்கடந்த நெருப்பாறு”ம் தனி இடத்தை வகுத்துச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை..

எங்கள் போராட்டச் சிலுவைக்காக நீங்களும் வலி சுமந்தீர்கள்.. எங்கள் விடுதலைப் பயணத்தின் சுவடுகள் சென்ற பாதை உட்பட இன்னும் பல்லாயிரம் கேள்விகளுக்கான விடைகளை ஒன்றுதிரட்டித்தரும் அற்புத படைப்பிலக்கிய வெளியீட்டு நிகழ்விற்கு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்..

‘கடந்த நாட்கள் மீண்டும் வாராது – வரும் நாட்களை பெறுமதியாக்குவோம்”

நன்றி
தமிழ்லீடர் குழுமம்

ts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*