vaiko

கந்தகக் கிடங்காக கனலச் செய்யும் ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ காப்பியமாகத் திகழும்! – வைகோ

தேக்குகளை விட வலிமையான பேனாமுனையால் ஈழ விடுதலை சாத்தியமாகும் காலம் தொலைவில் இல்லை. முள்ளிக்குளம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையான வீர வரலாற்றின் பெருமைமிகு பதிவாகத் திகழும் இந்நூல், படிப்போர் உள்ளங்களைக் கந்தகக்கிடங்காகக் கனலச் செய்கின்றது என ஈழத்து எழுத்தாளர் அரவிந்தகுமாரனின் நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற வரலாற்று நாவலுக்கு வழங்கிய அணிந்துரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

 இறுதிப்போரின் சம்பவங்களைக் கண்முன்கொண்டுவரும் அரவிந்தகுமரானின் ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ நாவலுக்கு வைகோ அவர்கள் வழங்கிய அணிந்துரையின்  சுருக்கம் வருமாறு,

அரவிந்தகுமாரனின் அற்புதப்படைப்பான ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ தலைப்பைப் போலவே நம் நெஞ்சில் கனல் வார்க்கிறது. நம் வாழ்நாளில் நிகழ்ந்த மனிதப் படுகொலையின் உச்சமாக, ஈழத்தில் நேர்ந்த இனப்படுகொலை, ஆயிரமாயிரம் படைப்புகளால் பதிவு செய்யப்படவேண்டும்.

காலத்தை வென்று, மனித குலத்தின் மனசாட்சியை விழிப்புறச்செய்யும் இத்தகைய படைப்புகள், இரண்டாம் பாகம் மட்டும் அல்ல, எண்ணற்றவையாக மலரவேண்டும். ஈழம் மலரும் போது, அப்படைப்பாளர்கள ; கனவு கண்டதைவிட , மிக உன்னதமான காப்பியங்களாக அவை போற்றப்பெறும்.! மலரட்டும் ஈழம்; வளரட்டும் பணிகள் ! எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*