kusumbu

கூட்டமைப்புக்காரர் இராசதந்திரப் போரைப் பற்றி கேள்விப்பட்டியளே?!

வணக்கம் பாருங்கோ,

எப்பிடி இருக்கிறியள்?

நாங்கள் எத்தினையாம் ஆண்டில இருக்கிறம்? எண்டு நம்ப ஏலாமல் கிடக்குப் பாருங்கோ.. இயக்கப்பெடியள், மாவீரர்கள், தலைவர் பிரபாகரன் எண்டு மாறி மாறி மேடையளிலையும் பேப்பருகளிலையும் முழங்கிறதுகளைக் கேக்க எங்களாலேயே நம்ப முடியேல்ல பாருங்கோ.. இந்தத் தேர்தலில வெல்லுறதுக்காக என்னவேணும் எண்டாலும் செய்யலாம் எண்ட நிலையில அவையளச் சொல்லிச் சொல்லி வாக்குக் கேக்கிறதுக்கு எங்கட வேட்பாளர்மார் வலு தீவிரமா செயல்படுகினம் கண்டியளோ?இதில இன்னுமொரு விக்கினம் என்னண்டால் தலைவர் மாகாண சபைக்காகத்தான் போராடினவரோ எண்டு யோசிக்கிற அளவுக்கு கதைக்கினம் பாருங்கோ.. வீர வசனங்கள் வானத்தில பட்டு திரும்பவும் மண்ணில விழுற மாதிரிக் கதைக்கினம் பாருங்கோ.. இதில என்ன வியேயம் எண்டு நீங்கள் நினைக்கலாம் பாருங்கோ.. இப்பிடிக் கதைக்கிறவையளில எத்தினை பேர் தேர்தல் முடிஞ்ச பிறகு எங்கையாச்சும் வாய் திறக்கினமோ? எண்டு வடிவாய்ப்பாருங்கோ பாருங்கோ..

இப்ப மாவீரர்களையும் இயக்கப் பெடியளையும் கதைக்கிற கனபேருக்கு நவம்பர் எண்டு ஒரு மாதம் வாறதே நினைவில்லப் பாருங்கோ.. நவம்பரும் நினைவுக்கு வந்தாலும் 27ஆம் திகதி எண்டொரு திகதியும் நினைவுக்கு வாறதில்ல பாருங்கோ.. இப்ப வீரவசனம் பேசிறவை அந்த நாளுகளில ஒரு விளக்கு ஏத்துவம் எண்டு நினைக்கிறதே இல்ல பாருங்கோ.. சரி விடுவம் பாருங்கோ.. மே 18 இல எண்டாலும் ஒரு விளக்கெண்டாலும் ஏத்துவம் எண்டு நினைச்சிருப்பினமோ சொல்லுங்கோ பாப்பம்.. றோட்டில தான் விளக்கு ஏத்தவேணும் எண்டு இல்ல பாருங்கோ.. மனச்சாட்சிக்காக வீட்டுக்குள்ள எண்டாலும் கொழுத்தலாம் பாருங்கோ..

அதவிட்டாலும் இன்னும் கனக்க புதினங்கள் நடக்குது பாருங்கோ, ஆயுத வழி பிழை ஜனநாயக வழியளை கண்டுபிடிச்சதே தாங்கள் தான் எண்டு கதைக்கிற கனபேர் தேர்தலுக்காக மாவீரர்களைப் பற்றியும் அவையின்ர தியாகங்களப் பற்றியும் கதைக்கிறத நினைக்க மனம் வலிக்குது பாருங்கோ..

அவையளப் பற்றிக் கதைக்கிறதுக்கும் அவையள நினைக்கிறதுக்கும் தமிழர் எல்லாருக்கும் உரிமை இருக்கு எண்டது எங்களுக்கும் தெரியும் பாருங்கோ.. ஆனால் பாருங்கோ வாக்குப் பிடுங்கிறதுக்காக அவையளச் சொல்லிக் கதைக்கிறதுதான் பாருங்கோ கவலையான விசயம்..

எங்கட கூட்டமைப்புக்காரர் மேடை மேடையா வீரவசனம் பேசப் பேச எங்கட சனம் உணர்ச்சி வசப்பட்டு கூட்டமைப்புக்காரருக்கு வாக்களிக்கவேணும் எண்டதில வலு ஆர்வமா இருக்கிறதக் கேள்விப்படயுக்க சந்தோயமாக் கிடக்குத்தான் பாருங்கோ, எங்கட நீதவான் ஐயாவும் இயக்கப்பெடியளப் பற்றி சரியா வெளுத்துவாங்கிறாராம் பாருங்கோ.. அதில புதினம் என்னண்டால்..

அந்த மனிசன் முதல் நாள், ஒரு விசயத்த சொல்லிப்போட்டு மற்ற நாள் அதுக்கு எதிர்மாறாக் கதைக்கும் பாருங்கோ. அவர் வந்த உடனேயே தனக்கு அரசியல் புதிசு எண்டு சொன்னவர் தான பாருங்கோ.. அந்த மனிசன் கொஞ்சம் மாறிக் கதைச்சுப்போட்டு மற்ற நாள் முழுசா மாறிக் கதைக்கிறாராம் பாருங்கோ.. அப்பிடி கதைக்க வைக்கிற வேலையை மாவை ஐயா தான் செய்யிறாராம்.. நீதவான் ஐயாவும் பாவம் தான் பாருங்கோ.. போகப் போக அவர் பழகியிடுவார்..

இப்ப கடைசியா அவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியளப் பற்றிக் கதைக்கப்போய் அது வில்லங்கத்தில முடிஞ்சிட்டுதுபாருங்கோ.. எந்தவிசயத்துக்கும் இந்தியாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்கவேணும் எண்டு நினைக்கிற கூட்டமைப்புக்கார ஐயாக்களும் இந்த விசயத்தால கடுப்பாயிருக்கினமாம் எண்டு கேள்வி பாருங்கோ..

விசயம் பெரிசாப்போச்சுது இத பூசி மெழுகவேணும் எண்டு நினைச்ச கூட்டமைப்புக்கார ஐயாக்கள் யாழ்ப்பாணத்தில பத்திரிகையாளர் சந்திப்பு ஒண்டை வைச்சவ பாருங்கோ.. அதில வைச்சு விக்கினேசுவரன் ஐயாவைக் கொண்டிச்சு தமிழ்நாட்டு பிரச்சினையைப் பற்றி கதையுங்கோ எண்டு சொல்லி விட, அவர் நல்ல தெளிவாய் தான் அப்பிடித்தான் சொன்னவர் எண்டு தெளிவாய் சொல்லிப்போட்டாராம் எண்டால் பாருங்கோவன்..

அதவிடுங்கோ, தேர்தலுக்காக வீடு வீடாய் போறது தெரியும் தானே?, வீடு வீடாய் போறது தப்பில்ல தான் பாருங்கோ.. ஆனால் வீடுவீடாய் போய் தங்கடை கட்சிக்காரரையே குற்றம் சொல்லி அவருக்கு போடாதேங்கோ, இவருக்கு போடாதேங்கோ எண்டு வில்லங்கப்படுகினமாம் பாருங்கோ..

ஊர் ரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் எண்டு கேள்விப்பட்டிருப்பியள் தானே? அது போல நடக்காமல் எங்கட பலத்த சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவம் எண்டு நினைச்சு நடக்கிறதுதான் பாருங்கோ.. எங்களுக்கும் நல்லது பாருங்கோ..

ஆனால் பாருங்கோ, கனபேர் மாகாண சபை தான் எங்கட இறுதித் தீர்வு எண்டு நினைக்கினம் பாருங்கோ.. கோதாரி விழுந்த மாகாண சபையை வைச்சுக்கொண்டு ஒரு தடி கூட முறிக்கேலாது எண்டத எங்கடை ஆக்கள் நினைக்கவேணும் பாருங்கோ.. தேர்தலில வெண்ட பிறகு எல்லாம் முடிஞ்சுது எண்டு இருந்தால், இராசதந்திரப் போர ஆர் பாருங்கோ முன்னெடுக்கிறது… இராசதந்திரப் போர் செய்யப்போறம் எண்டு அடிக்கடி கூட்டமைப்புக்கார ஐயாக்கள் சொல்லுகினம் பாருங்கோ.. இராசதந்திரப் போருக்கு முதல் கூட்டமைப்புக்குள்ள இருக்கிற உட்கட்சிப் போருக்கு முடிவு காணவேணும் பாருங்கோ.. அதுக்குப் பிறகு இராசந்திரப் போரைப் பற்றி யோசிக்கலாம் பாருங்கோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*