kusumbu

யாழ்ப்பாணத்து றிப்போட்டர் தம்பிமார் பெருங்குடிமக்களான கதை தெரியுமே?!

எப்பிடிப் பாருங்கோ.. இருக்கிறியள்? எலெக்சன் நடக்கப்போகுது.. சரியான வேலை பாருங்கோ.. ஒவ்வொருத்தருக்கும்.. நோட்டிஸ் அடிக்கிறது.. குடுக்கிறது.. வீடுவீடாய் போறது.. எண்டு எங்களுக்கு சேவை செய்யப்போற(!)மாண்புமிகு ஆக்கள் இருக்கினமெல்லே.. அவையள் சரியா கயிற்றப்படுகினம் பாருங்கோ.. அவயள் கதைக்கிற கதையள சொல்லுற வாக்குறுதியளக் கேக்க..
எங்களுக்கு தனி நாடு கிடைக்காட்டிக்கும் பறவால்ல.. மாகாண சபை கிடைச்சால் போதும் எண்டது போல கிடக்கு எண்டு சனம் நினைக்கிற அளவுக்கு அவை கதைக்கினம் பாருங்கோ.. ஓம் பாருங்கோ.. இப்ப அடிக்கடி வருவினம்.. கதைப்பினம்.. பிறகு வேட்டை நாய விட்டுத்தான் பாருங்கோ அவையளப் பிடிக்கவேணும்… ஏன் எண்டு கேக்கிறியளே? பின்ன என்ன பாருங்கோ.. அவைக்கு பிறகு எவளவு வேலை வரும்.. அதுகளப் பாக்கவே அவைக்கு நேரம் போயிடும்.. பிறகெப்பிடி அவை ஊருக்கு வாறது.. ஆ..
அவையின்ர கதை கதைக்கத் தான் இன்னுமொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது பாருங்கோ.. எங்கட பேப்பர் றிப்போட்டர் பெடியள் பெருங்குடிமக்கள் ஆயின சங்கதி கேள்விப்பட்டியளோ? தெரியல்ல.. கதை தொடங்க முதலே..வாய் ஒரு மாதிரித்தான் கிடக்குது பாருங்கோ… குடுத்து வைச்சது அதுதான் ம்… சரி சரி.. விசயத்தச் சொல்லுறன் கேளுங்கோவன்..
எலெக்சன் வருகுது எண்ட உடன ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வாக்குறுதியளக் குடுக்க.. சுதந்திரக்கட்சியின்ர யாழ்ப்பாண அமைப்பாளர் இருக்கிறார் எல்லே?… ஓம் பாருங்கோ.. அவர் தான் அங்கயன் அந்தப் பெடியன் ஏதாவது வித்தியாசமாய் செய்யவேணும் எண்டு யோசிச்சிருக்குது.. எங்கட பேப்பர்காரப் பெடியள் இருக்கினம் எல்லே… ஓம் பாருங்கோ.. யாழ்ப்பாணத்தில நடக்கிற சம்பவங்களை வெளி உலகத்துக்கு கொண்டுவாற றிப்போட்டர் பெடியள் தான் பாருங்கோ.. ஓம் பாருங்கோ அவையள.. அங்கையன் ஐயா.. தன்ர வீட்ட ஒரு விருந்திருக்குது எண்டு கூப்பிடிருக்கிறார்..
அவர் கூப்பிட்டபடியால் தட்ட ஏலாது எண்டு நினைச்சோ என்னவோ பெடியளும் போயிருக்கிறாங்கள்.. போன பொடியள் திகைச்சுப் போனாங்களாம் எண்டால் பாருங்கோவன்.. போன பெடியளுக்கு சரியான கவனிப்பாம் பாருங்கோ.. ஓம் பாருங்கோ.. போத்தில் போத்திலாய் பொடியளுக்கு ஊத்திக் குடுத்திருக்கினம். ஒவ்வொண்டும் பத்தாயிரம் ரூபா வரும் எண்டு பொடியள் திகைச்சுப்போனாங்களாம்.. ஒரு விசயம் பாருங்கோ.. ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதேங்கோ.. யாழ்ப்பாணத்தில தேவாரத்தப் பற்றி அடிக்கடி எழுதிற பேப்பர் ஒண்டில இருந்து போன பெடியன் அதில ஒரு போத்தில ஒரு மாதிரி முழுசா கொண்டுவந்து சேத்துப்போட்டானாம்..
ஓம் பாருங்கோ அது ஒவ்வொண்டும் அவை அவையின்ர தனித் திறம பாருங்கோ.. இதுகளயெல்லாம் பாத்துப் பொறாமப்படப்படாது கண்டியளோ… ஆர் குடிச்சால் உங்களுக்கென்ன… அது அவையின்ர விருப்பு வெறுப்பு எண்டு நீங்கள் புறுபுறுக்கிறது விளங்குது பாருங்கோ… அதில்ல பாருங்கோ.. அங்க போனவையில சில பேர் எங்கட தீவிர தமிழ்த் தேசிய வாதியள் இருக்கினம் எல்லே… ஓம் பாருங்கோ..
அவையின்ர சரியான வியுவாயமான ஆக்களாய் வெளியில சொல்லிக்கொள்ளுவினம் பாருங்கோ.. அவையளோட கதைச்சால் தமிழீழத்துக்காக உயிரையும் குடுப்பம் எண்டமாதிரி அவையள் கதைப்பினம் பாருங்கோ.. ஆனால் பாருங்கோ ஒரு போத்திலுக்காக அவையள் கூப்பிட்ட உடன அங்க போய் குடிச்சத நினைக்கத்தான் கவலையாக் கிடக்குது எண்டு கதைக்கினம் பாருங்கோ.. ஆர் கதைக்கினம் எண்டு கேக்கிறியளே? அதைச் சொன்னால் அந்த விருந்துக்குப் போனதில அர்த்தமே இல்லாமல் போயிடும் பாருங்கோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*