kusumbu

எங்கட ஆக்களின்ர கடமை உணர்ச்சிய நினைக்க புல்லரிக்குது பாருங்கோ – புளியடி பூராயம்!

வணக்கம் பாருங்கோ,

புதுசு புதிசா பூராயங்கள் நாட்டில நடந்து கொண்டு தான் இருக்குது பாருங்கோ. எங்கடை வடக்கு மாகாணசபை எலெக்சன் வருதெல்லே.. அது வந்ததும் வந்தது கனபேரின்ர நிலமை படுபாதாளத்தில போய் விழுந்து போய்ச்சிது பாருங்கோ.. எலெக்சனில போட்டி போட சந்தர்ப்பம் தாருங்கோ.. தாருங்கோ எண்டு ஒவ்வொரு கட்சியளின்ர தலைவர் மாரின்ர காலில விழாத குறையா கனக்கப் பேர் அலைஞ்சு களைச்சுப் போச்சினம் பாருங்கோ..இதில புதினம் என்னண்டெல்லால் வவுனியா நகர சபையின்ர உபதலைவர் இருக்கிறார் எல்லே? அந்த வாத்தியார் பெடியன் தான்.. ஓம் பாருங்கோ அந்தப் பெடியன் மாவை இருக்கிறாரெல்லே அவருக்கு போன் பண்ணி.. “எனக்கு சீற் தரவேணும் இல்லை எண்டால் நான் செத்துப்போடுவன்” எண்டு அழுததாம் எண்டால் பாருங்கோ. விடியவெள்ளன அந்தப் பெடியன் போன் பண்ணி அழுததால அண்டு முழுக்க மாவை சரியாய் குழம்பிப்போய் இருந்தவராம்.

அத விட இன்னொரு புதினமும் நடந்ததெல்லே, தமிழரசுக்கட்சிய வழக்கிறதுக்கெண்டு ஒவ்வொரு இடத்திலையும் இளைஞர் அணியள பரவலாய் நியமிச்சவை பாருங்கோ.. அப்பிடி யாழ்ப்பாணத்துக்கு எண்டும் ஒரு இளைஞர் அணிய அமைச்சவை பாருங்கோ.. அந்த இளைஞர் அணியின்ர செயலாளரும் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கோ தாருங்கோ எண்டு அலைஞ்சு தமிழரசுக்கட்சி அவருக்கு சீற் குடுக்கேல்லயாம் பாருங்கோ.. அந்தப் பெடியனும் விடாப்பிடியா நிண்டு அடம்பிடிச்சு சந்தர்ப்பம் கிடைச்சிட்டுதாம்.. ஆனால் பாருங்கோ கறை படியாத கரங்கள் எண்டு சொல்லிக்கொண்டு தமிழரசுக்கட்சியின்ர வேட்டிய பிடிச்சுக்கொண்டு நிண்ட அந்தப் பெடியனும் கடைசில புளொட் கட்சியின்ர காலப்பிடிச்சுத்தான் சீற் எடுத்ததாம் எண்டால்…, மக்களுக்கு சேவை செய்யவேணும் எண்டதில எங்களுக்கு இருக்கிற அளவில்லாத கடமை உணர்ச்சிய நினைக்க புல் அரிக்குது பாருங்கோ.

இதுக்கிடையில இன்னுமொரு விஷயம் கேள்விப்பட்டியளோ தெரியேல்ல.

ஓம் பாருங்கோ தமிழ்த்தேசியத்த தாங்கள் தான் கண்டுபிடிச்சது எண்ட நினைப்பில யாழ்ப்பாணத்தில இருந்து ஒரு பேப்பர் வருகுதெல்லே, ஓம் பாருங்கோ சம்பந்தன் ஐயாவை தமிழ் மக்களின்ர தேசியத் தலைவர் எண்டு சொன்ன அந்தப் பெரிய மனிசன்ர பேப்பர் தான் பாருங்கோ..

அவர் தான் அவர்தான்.. அவர்.. அந்த எம்பி தான்..

அவருக்கும் அவர் தேசியத் தலைவர் எண்டு சொன்ன சம்பந்தன் ஐயாவுக்கும் இடையில சரியான முறுகலாம் எண்டு கதைக்கினம் பாருங்கோ.. என்னண்டு விளங்குதே? மஹிந்த ஐயாவ சம்பந்தன் ஐயா தனியாச் சந்திச்சவர் எல்லே.. ஓம் பாருங்கோ அவர் சந்திக்கிறதுக்கு முன்னாலயே எங்கட பேப்பர் கார ஐயாவும் கொழும்பில இருக்கிற ஒரு தமிழ் எம்பியோட போய் சனாதிபதி ஐயாவை சந்திச்சவராம். அவர் சந்திச்சு பேப்பருக்கு காயு கேட்டவராம் எண்டு கதைக்கினம் பாருங்கோ…

அத முடிச்சுக்கொண்டு வெளிநாட்டுக்குப் போய் வெளிநாட்டில இருக்கிற நாடு கடந்தவையிட்டயும் அவர் காயு கேட்டதாம் எண்டு ஒரு கதை அடிபடுகுது பாருங்கோ..

சரி சரி.. அது அவை அவையின்ர தனிப்பட்ட திறமை என்ன… அத விடுவம். சம்பந்தன் ஐயா சரியான கடுப்பில இருக்கிறாராம் என்ன.. ஓம் பாருங்கோ தான் மட்டும்தான் தனியா சனாதிபதி ஐயாவைச் சந்திக்கவேணும்.. இப்பிடி ஒவ்வொருத்தரும் தனித் தனியாச் சந்திச்சால் தன்ர நிலமை என்ன எண்டு தானாம் அந்த மனிசனுக்கும் சரியான கவலையாம். பாவம் பாருங்கோ இந்த வயசு போன நேரத்திலயும் ஐக்கிய இலங்கேக்குள்ள பிரச்சினையைத் தீர்க்கிறதுக்கு அந்த மனிசன் படுற பாடு பெரிசு பாருங்கோ..

அதுக்கிடையில கொழும்பில இருக்கிற தமிழ் ஆக்களையும் வடக்கில இருக்கிற தமிழ் ஆக்களையும் குழப்பிற மாதிரி பேப்பருகளில விதம் விதமா கட்டுரையள் எழுதிக் குழப்பவேண்டாம் எண்டு பேப்பர் கார எம்பிக்கு சம்பந்தன் ஐயா சரியா ஏசிப்போட்டாராம்.

அந்தப் பேப்பரில இருந்து வெளிய போன ஒரு தம்பி ஒருத்தர் இளைஞர் அணியின்ர தலைவரோட சேந்து புதுசா ஒரு பேப்பரத் தொடங்கியிருக்கினமாம். அதால அவருக்கு யாழ்ப்பாணத்தில எலெக்சன் கேக்க மாவை ஐயா சந்தர்ப்பம் குடுத்தவராம். அவருக்கு சந்தர்ப்பம் குடுக்கவேண்டாம் எண்டு பேப்பர் கார எம்பி கடுமையா பாடுபட்டவராம். கடைசியல அவர்ர முயற்சி வீணாய்ப்போச்சுதாம் பாருங்கோ.. அந்தத் தம்பிய கூப்பிட்டு நீ வெல்லுறியோ எண்டு பாப்பம்..

என்னட்ட எசிலோன் பைப் அறுக்கிறவையில இருந்து பேப்பர் விக்கிறவை வரைக்கும் நாநூறுக்கும் மேல ஆக்கள் வேலை செய்யினம் தெரியுமே? உன்ன வெல்ல விடமாட்டன் எண்டு பேப்பர் கார எம்பி அவருக்கு சவால் விட்டிருக்கிறாராம்.. அப்ப பாருங்கோவன் ஆ..

அதவிட இன்னும் கனக்கப்பேர் கதிரக் கனவோட அலைஞ்சு கடைசில நடு றோட்டில நிண்டு சம்பந்தன் ஐயாவையும் அவரின்ர பரிவாரங்களையும் வாய்க்கு வந்தது போல திட்டிக்கொண்டு திரியினமாம் பாருங்கோ.. என்ன இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் மக்களுக்கு சேவை செய்யவேணும் எண்டு நினைக்கிற கடமை உணர்ச்சியை நினைக்க..

தமிழராய் பிறந்ததுக்கு என்ன பேறு பெற்றிருக்கிறம் எண்டு நினைக்க தாங்க முடியாத பெருமையாய் இருக்குது பாருங்கோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*