poorayam-1024x719

மாகாண சபைக் ‘கதிரை’ வலு பொல்லாதது பாருங்கோ! – பூராயப் பொன்னர்

எப்பிடி இருக்கிறியள்? நான் தான் பொன்னர்..,
ம்.. இப்ப கொஞ்ச காலத்துக்கு அடிக்கடி கனக்க புதினங்களோட உங்களைச் சந்திப்பன் எண்டு நினைக்கிறன்,

பின்ன என்ன? பாருங்கோ, இந்தக் கோதாரி விழுந்த மாகாண சபை எலெக்சன் வாறதெண்டு கதை அடிபடுகுதெல்லே.. அந்தச் செய்தி எப்ப வந்துதுதோ அண்டையில இருந்து எங்கட ஆக்கள் கொஞ்சப் பேர் படுற பாடு தாங்க முடியாமல் கிடக்குதாம் எண்டு சொல்லுகின என்ன? ஓம் பாருங்கோ..

எங்கட கூட்டமைப்புக்காரர் திடீரெண்டு.. ஒருங்கிணைப்புக்குழு எண்டு ஒண்டை அறிவிச்சிருக்கினமெல்லே?.. இவளவு காலமாய் ஒண்டு ரண்டு பேர் தலைகீழா நிண்டும் இப்பிடி ஒண்டும் செய்யேலாமல் கையவிட்டிட்டு இருந்தவை.. எண்டது எல்லாருக்கும் தெரியும். இப்பிடி இருக்கேக்க இந்தக் குழு எப்பிடி திடீரெண்டு முளைச்சது எண்டு உங்களுக்கும் சந்தேகம் வந்திருக்கும் என்ன?

அந்த நாளையில .. “ஆர்ரையோ.. குடுமி சும்மா ஆடாது..” எண்டு ஊரில ஒரு பழமொழி சொல்லுறவை.. அதுதான் பாருங்கோ இப்ப நினைவுக்கு வருது.

கூட்டமைப்புக் கட்சியளுக்க ஆர் பெரிசு எண்டு அடிபட்ட காலம் போய் இப்ப அவேன்ர தாய்க்கட்சி எண்டு சொல்லுற தமிழரசுக்கட்சிக்குள்ள தானாம் பிரச்சினை பெரிசா கிளம்பியிருக்கதாம் என்ன.. பாழாப் போன மாகாண சபைக் ‘கதிரை’ வலு பொல்லாதது பாருங்கோ…

மாகாண சபை முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றினால் ஜனாதிபதி அதிகாரம் கிடைச்சது போல ஒரு பெரிய ஆவலோட கனக்கப்பேர் ஆயைப்பட்டவை.. அந்தக் கனவில நனைஞ்ச சில பேர் தங்கட வேலையளைக் கூட கைவிட்டு கனகாலமாய் கனவு கண்டவை.. எல்லாரும் கைவிட்டு கடைசீல ரண்டு பேருக்கு இடையில தானாம் போட்டி நடக்குதாம். ஒராள் சுமந்திரன் ஐயா மற்றவர் மாவை ஐயா..

ஓம் பாருங்கோ சட்டம் தெரிஞ்ச ஒராளத்தான் முதலமைச்சர் வேட்பாளரா நிப்பாட்டவேணும் எண்டு எங்கட சம்பந்தன் ஐயா ஒற்றைக்காலில நிக்கிறேராம். முந்தி நீதவானா இருந்த விக்கினேஸ்வரன் ஐயா அல்லாட்டிக்கில் சுமந்திரன் ஐயா ரண்டில ஒராள் தான் நிக்கவேணும் எண்டு சம்பந்தன் ஐயா மனப்பட்டிருக்கிறேராம்.. ஆனால் பாருங்கோ விக்கினேசுவரன் ஐயா நேர்மையான மனிசன் எண்டு பரவலாய் கதைக்கினமாம்.. .. அதால அந்த மனிசன் எலெக்சன் கேக்காது எண்டு எங்கட சம்பந்தன் ஐயாவுக்கு நல்ல நம்பிக்கை இருக்குதாம் பாருங்கோ.. அவர் மாட்டன் எண்டு சொன்னதச் சொல்லிக் கொண்டு சுமந்திரன் ஐயாவை முதலமைச்சராக்கிப் பாக்கவேணும் எண்டு ஐயா ஆயைப் படுகிறார் எண்டு கதைக்கினம் பாருங்கோ.. ஓம் பாருங்கோ.. சுமந்திரன் ஐயா.. எனி பாராளுமன்றத்துக்கு வாறது கனவாய்ப் போடும் எண்டதால இதுக்குள்ள செருகிப்போடுவம் எண்டு வயசு போன நேரத்திலையும் சம்பந்தன் ஐயா சரியா கயிற்றப்படுகிறாராம்.. பாவம் அந்த மனிசன்..

இதுக்கிடையில மாவை ஐயா தான் கேக்கவேணும் எண்டு பழைய ஆக்களும் ஆயுதம் தூக்கின கட்சிக்காரரும் ஆயைப்படுகினமாம். இதால தான் ஒருங்கிணைப்புக்குழு ஒண்டக் கொண்டுவர வேணும் எண்டு மற்றாக்கள் கேட்ட உடன மாவை ஐயா, கட்டாயம் கொண்டுவரத்தான் வேணும் எண்டு அடம்பிடிச்சவராம் பாருங்கோ.. இன்னுமொரு விசயம் சொல்லவேணும் எண்டு அயத்துப் போனன் பாருங்கோ.. மாவை ஐயாதான் முதலமைச்சர் வேட்பாளராய் வரவேணும் எண்டு சொல்லி சீ.வி.கே ஐயா பத்திரிகையாளர் சந்திப்பு ஒண்டு நடத்தினவரெல்லே..

ஓம் பாருங்கோ.. அந்தச் செய்திய வெளியிட்ட யாழ்ப்பாணத்துப் பேப்பர் ஒண்டுக்கு சம்பந்தன் ஐயா போன் எடுத்து சரியா பேசிப்போட்டாராம் பாருங்கோ.. அதுவும் அவையின்ர பேப்பர் தான்.. “நான் நினைக்கிற ஆள் தான் முதலமைச்சராய் வரலாம்.. வேறை ஆரும் நினைக்கிறவை வரஏலாது.. நாளைக்கு மறுப்புப் போட வேணும்” எண்டு திட்டிப்போட்டாராம் பாருங்கோ.. அதால சம்பந்தன் ஐயா மறுப்புச் சொன்னவர் எண்டு சொல்லி அந்தப் பேப்பர் காரரும் அடுத்த நாள் செய்தி போட்டிருந்தவை பாருங்கோ..

பேப்பர் எண்டத்தான் இன்னொரு விசயமும் நினைவுக்கு வருது பாருங்கோ,

யாழ்ப்பாணத்தில இருந்து தமிழ்த் தேசியம் எண்டு சொல்லிக்கொண்டு ரண்டு புதுப் பேப்பருகள் வரப்போகுதாமெல்லே.. அதுக்கான வேலையள் வலு கடுமையா நடக்குதாம் பாருங்கோ… “எனக்கு முதலமைச்சரா கேக்கிறதுக்குச் சந்தர்ப்பம் தராட்டிக்கில் ஒரு பேப்பர் தொடங்கி கூட்டமைப்புக்கு எதிரா எழுதுவன்” எண்டு சொல்லிக் கொண்டு திரிஞ்ச ஒரு மூத்த பேப்பர் காரத் தம்பி ஒராள், சொன்னது போல பேப்பர் தொடங்கிறதுக்கான எல்லா வேலையும் செய்துபோட்டாராம் பாருங்கோ.. மற்றப் பேப்பர் செய்யிறது ஆர் எண்டால் தமிழரசுக்கட்சியின்ர இளைஞர் அணியின்ர தலைவர் பாருங்கோ..

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில இருந்து வாற கூட்டமைப்பின்ரை பேப்பர் இருக்குத்தானே?, ஓம் பாருங்கோ அந்த எம்பியின்ர பேப்பர் தான்.. அந்தப் பேப்பருக்கு சவாலாத்தான் இளைஞரணி தலைவரின்ர பேப்பர் வரப்போகுதாம் என்ன,

எம்பியின்ர பேப்பரில இளைஞர் அணித் தலைவரை கடுமையா கிண்டலடிச்சு செய்தி ஒண்டு வந்தது பாருங்கோ.. அந்தச் செய்தி சம்பந்தமான காரசாரமான சண்டை நடந்ததாம்.. எங்கை எண்டு கேக்கிறியளே? தமிழரசுகட்சியின்ர மத்திய குழுக்கூட்டத்தில தானாம் பாருங்கோ.. அந்தப் பெடியன் எம்பியின்ரை பேப்பரப் பற்றி கத்திக் கதைக்க, பேப்பர் கார எம்பியை கதைக்கவிடாமல் சம்பந்தன் ஐயாவும் மாவை ஐயாவும் அடக்கிப்போட்டினமாம்.. இதால பேப்பர் கார எம்பி சரியான கடுப்பில இருக்கிறாராம் பாருங்கோ..

“அந்தப் பெடிப் பிள்ள அவங்களிட்ட காசு வேண்டிக்கொண்டு பேப்பர் தொடங்கப்போறாராம், நானும் பாக்கத்தான போறன்” எண்டு எம்பி சொல்லியிருக்கிறேராம்.. அவங்களிட்ட காசு வேண்டினது எண்டு சொன்னது சரி அது ஆர் எண்டு அந்த மனிசன் சொன்னதாத் தெரியேல்லயாம் பாருங்கோ..

ஆனால் பாருங்கோ ஒரு விசயம் மட்டும் நிச்சயம்.. ‘ஊர் ரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ எண்டு சொல்லுறவையெல்லே.. ஒண்டுமே இல்லாத மாகாண சபைக்கு இப்பிடி அடிபட்டு என்னத்த தான் காணப்போறமோ தெரியேல்ல என்ன..

செத்தவையள மறக்காமல் இருக்கிறது தான் எல்லாருக்கும் நல்லம் பாருங்கோ..

இன்னும் கதைக்கிறதெண்டால் கனக்க கதைக்கலாம் பாருங்கோ.. அப்ப பிறகு சந்திப்பம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*