kusumbu

யாழ்ப்பாணத்தில லக்கிய சந்திப்பாம்! – பூராயப் பொன்னர்

என்ன தான் இருந்தாலும் ஊர்ப் புதினங்களைப் பற்றிக் கதைக்கிறதில எங்கட ஆக்களுக்கு சரியான சந்தோஷம் பாருங்கோ… புதிசா இல்லாட்டிக்கு பழசுகளை எண்டாலும் திரும்பத் திரும்பக் கதைக்கிறது எண்டால் எங்கட ஆக்களுக்கு வலு புழுகு பாருங்கோ.. நாட்டில பெரிசா ஒரு புதினமும் இல்ல எண்டு சொல்லவும் ஏலாமல் கிடக்குது.. ஏன் எண்டால் யாழ்ப்பாணத்தில லக்கிய சந்திப்பு எண்ட பெயரில ஒரு சந்திப்பு நடக்கப் போகுதாம்… அதுவும் 41ஆவது சந்திப்பாம் பாருங்கோ, அதின்ர தாயக ஏற்பாட்டுக்குழு எண்டவை தானாம் அதுக்கான ஆயுத்தங்களைச் செய்யினம் என்ன.. என்னது ‘இஸ்லாமிய தமிழ் மாநாடு’ அதெண்டு நினைச்சியளோ?.. அது இல்லைப் பாருங்கோ.. இது லக்கிய சந்திப்பாம் பாருங்கோ..
வெளிநாடுகளில இருந்தும் அதுக்கு ஆக்கள் வரப்போகினமாம் எண்டால் பாருங்கோவன்.. அதுக்குள்ள இருக்கிற விக்கினங்களப் பற்றி நீங்களும் அறியத்தானே வேணும். ஓம் பாருங்கோ..
அப்ப அவை(!)யள் இருக்கேக்க அவையள் எண்டால் விளங்குதே.. அவையள் எண்டால் அவையள் தான்.. அவையள் இருக்கேக்க அவையளின்ர வியுவாயம் போல காட்டிக்கொண்டு, அவையளின்ர வேலையளச் செய்து கொண்டு அவையள் குடுத்த காயில வயிறு வளத்த மனிசர் தான் பாருங்கோ இப்ப தாங்கள் இவை(!) இவையின்ர ஆக்கள் எண்டு காட்டுறதுக்கு வில்லங்கத்துக்கு இப்பிடி கனக்க விளையாட்டுகள் விளையாடுகினம் என்ன,
ஓம் பாருங்கோ.. அவையள் இருக்கேக்க அவையளுக்குப் பின்னால இருந்தவை, இப்ப இவையளுக்குப் பின்னால நிக்கிறது போல காட்டுகினம்.. ஆனால் பாருங்கோ அவையளையும் ஏமாத்தி இப்ப இவையளையும் ஏமாத்திறது தான் பாருங்கோ இவேன்ர வேலை.. இவேன்ர திட்டம் இப்ப இருக்கிற இவை(!)க்கு விளங்காது எண்டு நினைக்கினம் போல.. புனை பால் குடிக்கிற கதைதான் பாருங்கோ நினைவுக்கு வருது என்ன.
ஓம் பாருங்கோ உந்த லக்கிய சந்திப்பு நிகழ்ச்சியின்ர ஏற்பாட்டுக்காரர் கொஞ்சப் பேர்.. படுற பாடு தாங்க முடியாது பாருங்கோ.. அவை(!)க்கு எதிரான ஆக்கள் எண்டு தங்களக் காட்டுறதில உந்த லக்கியம் பேசிற மனிசருக்கு சரியான சந்தோயம் பாருங்கோ.. ஒவரு இடத்திலயும் ஒவரு கூட்டங்கள நடத்துவினம், புத்தகம் அடிச்சு வெளியிடுவினம்.. போறது நாலு பேர் தான் பாருங்கோ.. போற ஆக்கள் ஆர் தெரியுமே? புத்தகத்துக்கு ஒவ்வொரு உரையள் போடுவினம் தானே? அந்த உரையள் எழுதிறவை, அச்சடிக்க காயு குடுக்கிறவை, லக்கியம் எண்டால் என்னண்டே தெரியாமல் லக்கியம் பேசிறவை.. இவயள் தான் பாருங்கோ அந்தக் கூட்டங்களுக்குப் போறவை எண்டால் பாருங்கோவன்..
அந்த நாலு மனிசரும் புத்தகம் பற்றிக் கதைக்கிறத விட அவை(!)யள் அப்பிடி அநியாயம் செய்து போட்டினம்.. இப்பிடி செய்து போட்டினம் எண்டு தான் கதைக்கிறவயளாம்.. பிழை நடக்கேல்ல எண்டு ஆரும் சொல்லேல்ல.. பாருங்கோ.. பிழை நடந்தது தான்.. ஆனால் பாருங்கோ எல்லாமே பிழை தான் எண்டு சொல்லுற இவைக்கு அங்க வால் பிடிக்கேக்க.. அவைக்கு கீழ வேலையள் செய்து கொண்டு அவையளிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கி, மோட்டுச்சைக்கிள் அது, இது எண்டு கேட்டுவாங்கினவயாம் என்ன? அப்ப ஒண்டும் கண்ணுக்குத் தெரியேல்லயோ? எண்டு தான் புரியேல்லப் பாருங்கோ..
இவையள் இப்ப ஆயிரம் கதை கதைச்சாலும் அதில எல்லா இடமும் அவை(!)யள் தான் இருக்கினம் என்ன, அவையள விட்டிட்டு இவையளால கதைக்கவும் ஏலாது பிழைக்கவும் ஏலாது என்ன.. அது சரி.. என்னத்தையோ கதைக்க வெளிக்கிட்டு கடைசியல எங்கயோ வந்திட்டம்…
லக்கிய சந்திப்புக் கதைக்கு வருவம், யாழ்ப்பாணத்தில இருக்கிற அந்த லக்கியம் தெரிஞ்ச நாலு மனிசர் ஒரு மாநாடு நடத்த வெளிக்கிட்டவையெல்லே.. திடீரெண்டு அந்த லக்கிய வட்டம் ரண்டா உடைஞ்சு போச்சுதாம் எண்டால் பாருங்கோவன்.. ஓம் பாருங்கோ.. ஒண்டு தமிழ்த் தேசியம் பற்றிக் கதைக்கிற குழுவாம் மற்றது லங்கா தேசியம் பற்றிக் கதைக்கிறதாம்.. உண்மையில இந்த மாநாடும் அவையள கூடாது எண்டு மேடை போட்டுச் சொல்லுறதுக்காகத்தானாம் செய்யினம்.. இவைக்கு மட்டுமில்ல.. இப்ப தமிழ்த் தேசியம் எண்டு சொல்லி அரசியல் செய்யிற எத்தின பேருக்கு தேசியம் எண்டால் என்னண்டு தெரியுமோ எண்டது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம் பாருங்கோ.. வெளிச்சம் இல்லாட்டிக்கு இருட்டுத்தான் எண்டத கன பேர் மறந்துதான் பாருங்கோ இப்ப கூத்தாடுகினம்.. அவையள் தான் பாருங்கோ இவைக்கு அடையாளம் குடுத்தவை. இல்ல எண்டால் பாருங்கோ இப்ப லக்கியம் பேசிற மனிசரில ஒருத்தரையும் ஒருத்தருக்கும் தெரியாது பாருங்கோ.. எல்லாம் காலம் தான் பாருங்கோ.. மனச்சாட்சிய மாடு திண்டதெண்டு ஊரில பறையிறவை தெரியும் தானே.. இதுக்குப் பிறகும் கதைக்கிறது அவ்வளவெண்டு நல்லதுக்கில்ல என்ன…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*