m2

பண்டா – செல்வா ஒப்பந்தம் 1957

பண்டா – செல்வா ஒப்பந்தம்

(26.07.1957)

பகுதி – அ

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக இலங்கை தமிழரசுக்கட்சி புரதிநிதிகளுக்கும் அப்போது ஆட்சியிலிருந்த பிரதமர் S.W.R.D.பண்டாரநாயக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பேச்சுவார்த்தை ஆரம்பத்திலேயே சமஷ்டி அமைப்புமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு அல்லது பிராந்திய சுயாட்சியை ஏற்படுத்துவது அரச கருமமொழி என்ற அந்தஸ்த்தை (தனிச்சிங்கள சட்டம்) மாற்றுவது ஆகியவை தொடர்பானாடிப்படை விடயங்களில் மாற்றங்கள் செய்யமுடியாது என கலந்துரையாடலின் ஆரம்பத்திலேயே அமரர் பண்டாரநாயக்கா தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து தமிழரசுக்கட்சி பல அடிப்படைக் கொள்கைகள், கோட்பாடுகளைக் கைவிடாமல் மாற்று ஒழுங்குகளை ஏற்படுத்தமுடியுமா? என்பது பற்றி ஆராய இணக்கம் தெரிவித்தது. அரசின் பிராந்திய சபைகள் மசோதாவை ஆராய்ந்து உரிய யோசனைகளை முன் வைக்க முடியுமா என்று பிரதமர் தமிழருசுக்கட்சிக்கு ஆலோசனை வழங்கினார்.

இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் கீழே

மொழி விடயத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி சம அந்தஸ்த்து கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால், இவ்விடயத்தில் பிரதமரின் நிலையை உத்தேசித்து இடைக்கால ஏற்பாடாக ஓர் உடன்படிக்கைக்கு வந்தனர். தமிழ் ஒரு தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படுவதும், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அலுவல்கள் தமிழில் நடைபெறுவதும் மிக்கியமானவை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். தான் முன் குறிப்பிட்டது போன்று உத்தியோக மொழிச்சட்டத்தை அழிக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் எடுப்பது சாத்தியமற்றது என்று பிரதமர் கூறினார். கருத்துப் பரிமாறலின் பின் இயற்ற உத்தேசிக்கப்படும் சட்டத்தில் இலங்கையின் சிறுபான்மையோரின் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டுமென்றும், உத்தியோக மொழியின் நிலையைப் பாதிக்காத வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக தமிழே இருக்கும் வகையில் பிருதமரின் நான்கு அம்ச திட்டத்தில் ஏற்பாடு இருக்க வேண்டிமென்றும், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வசிக்கும் தமிழ் பேசுவோரல்லாத சிறுபன்மையோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்றும் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இந்திய வம்சாவளியினருக்கு இலங்கை குடியுரிமை வழங்குவது பற்றியும் குடியுரிமைச் சட்டம் பற்றியும் தமது கருத்துக்களை இலங்கைத் தகிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள் பிரதமருக்கு எடுத்து விளக்கி, விரைவிலிப்பிரச்சனை தீரவேண்டுமென்றும் வற்புறுத்தினர். இப்பிரச்சனை விரைவில் பரிசிலனைக்கு எடுத்டுக்கொள்ளப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இம்முடிவுகளின் காரண்மாக தம்து உத்தேச சத்தியாக்கிரக நடவடிக்கையை கைவிடுவதக தமிழரசுக்கட்சி அறிவித்தது.

பகுதி – ஆ

01. பிந்திய சபைகளின் எல்லைகள் – சட்டத்திலேயே அட்டவணையாகச் சேர்க்கப்பட்டு வரையறுக்கப்படவேண்டும்.

02. வடமாகாணம் ஒரு பிராந்திய சபையாகவும், கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது கூடிய பிராந்திய சபைகளாக அமையும்.

03. மாகாண எல்லைகளையும் தாண்டி 2 அல்லது மேற்பட்ட பிராந்திய சபைகள் இணைவதற்கு சட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும்; பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு அமைவாக, ஒரு பிராந்திய சபை தன்னைப் பிரித்துக் கொள்ளவும் இலமிருக்கும். 2 அல்லது மேற்பட்ட பிராந்திய சபைகளுக்கு பொதுவான குறிப்பிட்ட நோக்கங்களும், அவை சேர்ந்து செயல்பட சட்டத்தில் இடமிருக்கும்.

04. பிராந்திய சபை உறுப்பினர் நேரடியாக தெரிவு செய்யப்படுவர். அதற்கான தொகுதிகளை வகுப்பதற்கு தொகுதி நிர்ணயக்குழுவோ குழுக்களோ அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். ப்பிராந்திய சபையின் எல்லைக்குள் அமைந்த மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் – பிராந்திய சபைத் தலைவராவதற்குத் தகுதி பெறுவது பற்றி ஆலோசிக்கப்படும்.

05. அதிகாரங்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப் பெற்று சட்டத்டில் வரையறுக்கப்பட வேண்டும். விவசாயம், கூட்டுறவு, காணியும் காணி அபிவிருத்தியும் குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், மீன்பிடித்துறை, வீடமைப்பு, சமூகசேவை, மின்சாரம், தண்ணீர்திட்டங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளடங்கலாக குறிப்பிட்ட விடயங்கள் – பிராந்திய சபைகளின் அதிகாரத்திற்குட்பட்டிருக்க வேண்டுமென்று ஒப்புக்கொள்ளப் பட்டது. வேண்டியாதிகார எல்லைகள் சட்டத்திலேயே வரையறுக்கப்படும்.

06. குடியேற்றதிட்டங்களைப் பொறுத்தவரைதமது அதிகார எல்லைக்குட்பட்ட காணிகள் வழங்கவேண்டிய குடியேற்ற வசிகளைத் த்ரிவு செய்வதும், அத்திட்டங்களில் வேலைக்க்கு அமர்த்தப்படுவதும் ஆட்களை தெரிவு செய்வதும் பிராந்திய சபையின் அதிகாரத்துக்குட்பட்டதாகவும் இருக்குமென்று ஒப்புக்கொள்ளப்பட்டது.இப்போது கல்லோயா அபிவிருத்திச் சபையினால் நிர்வகிகப்படும் பிரதேசத்தின் நிலை ஆராயப்பட வேண்டும்.

07. சட்டமூலத்தில் பிரதேச சபைகளையொட்டி உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை மாற்றி தேவையான இடத்தில் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கும் பொருட்டு அவ்விதிகள் திருத்தப்படும்.

08. பிராந்திய மக்களுக்கு மத்திய அரசாங்கம் மொத்தமாக நிதிவழங்கும் அத்தொகை கணக்கிடப்படவேண்டிய கொள்கைகள் – பின் ஆராயப்படும் பிராந்திய சபைகலுக்கு வரி விதிக்கவும் கடன் வாங்கவும் அதிகாரமிருக்கும்.

ஒப்பம்:- S.W.R.D.பண்டாரநாயக்கா
ஒப்பம்:- S.J.V.செல்வநாயகம்
திகதி:- 26.07.1957

Bandaranaike – Chelvanayagam Pact, 1957

On 26 July 1957, an agreement was entered into between Mr.S.W.R.D. Bandaranaike, Prime Minister of Ceylon and Mr.S.J.V. Chelvanayagam, Leader of the Thamil Arasu Katchi (Federal Party) – the Bandaranaike Chelvanayakam Pact

Part A

Representatives of the Federal Party have had a series of discussions with the Prime Minister in an effort to resolve the differences of opinion that had been growing and creating tension.

At an early stage of these conversations it became evident that it was not possible for the Prime Minister to accede to some of the demands of the Federal Party.

The Prime Minister stated that, from the point of view of the government, he was not in a position to discuss the setting up of a Federal Constitution, or regional autonomy, or take any step that would abrogate the Official Language Act.

The question then arose whether it was possible to explore the possibility of an adjustment without the Federal Party abandoning or surrendering any of its fundamental principles or objectives.

At this stage, the Prime Minister suggested an examination of the Government’s draft Regional Councils Bill to see whether provision could be made under it to meet, reasonably, some of the matters in this regard which the Federal Party had in view.

The Agreements so reached are embodied in a separate document.

Regarding the language issue, the Federal Party reiterated its stand for parity, but in view of the position of the Prime Minister in this matter they came to an agreement by way of adjustment. They pointed out that it was important for them that there should be a recognition of Tamil as a national language, and that the administrative work of the Northern and Eastern Provinces should be done in Tamil.

The Prime Minister stated that as mentioned by him earlier it was not possible for him to take any steps that would abrogate the Official Language Act.

After discussion, it was agreed that the proposed legislation should contain recognition of Tamil as the language of a national minority of Ceylon, and that the four points mentioned by the Prime Minister should include provision that, without infringing on the position of the Official language as such, the language of the administration of the Northern and Eastern Provinces be Tamil, and that any necessary provision be made for the non-Tamil speaking minorities in the Northern and Eastern Provinces.

Regarding the question of Ceylon citizenship for people of Indian descent and the revision of the Citizenship Act, the representatives of the Federal Party put forward their views to the Primo Minister and pressed for an early settlement. The Prime Minister indicated that the problem would receive early consideration. In view of these conclusions the Federal Party stated that they were withdrawing their proposed satyagraha.

Part B

1. Regional areas to be defined in the Bill itself by embodying them in a schedule thereto.

2. That the Northern Province is to form one regional area whilst the Eastern Province is to be divided into two or more regional areas.

3. Provision is to be made in the Bill to enable two or more regions to amalgamate even beyond provincial limit; and for one region to divide itself subject to ratification by Parliament. Further provision is to be made in the Bill for two or more regions to collaborate for specific purposes of common interests.

4. Provision is to be made for direct election of regional councillors. Provision is to be made for a delimitation commission or commissions for carving out electorates. The question of M.P.s representing districts falling within regional areas to be eligible to function as chairmen is to be considered. The question of Government Agents being regional commissioners is to be considered. The question of supervisory functions over larger towns, strategic towns and municipalities is to be looked into.

5. Parliament is to delegate powers and to specify them in the Act. It was agreed that regional councils should have powers over specified subjects including agriculture, co-operatives, lands and land development, colonization, education, health, industries and fisheries, housing and social services, electricity, water schemes and roads. Requisite definition of powers will be made in the Bill.

6. It was agreed that in the matter of colonization schemes the powers of the regional councils shall include the power to select allottees to whom lands within their area of authority shall be alienated and also power to select personnel to be employed for work on such schemes. The position regarding the area at present administered by the Gal Oya Board in this matter requires consideration.

7. The powers in regard to the regional council vested in the Minister of Local Government in the draft Bill to be revised with a view to vesting control in Parliament wherever necessary.

8. The Central Government will provide block grants to the regional councils. The principles on which the grants will be computed will be gone into. The regional councils shall have powers of taxation and borrowing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*